உயரமாக வளர வேண்டும் என்று ஆசையா..? அப்போ இப்படி செய்யுங்க..!

Height Increase Exercise

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். பொதுவாக மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதாவது எல்லா மனிதர்களும் ஓரே அளவில் இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் உயரமாகவும், ஒருவர் கட்டையாகவும் தான் இருப்பார்கள். அப்படி கட்டையாக இருப்பவர்கள் சில நேரங்களில் நாம் ஏன் இவ்வளவு கட்டையாக இருக்கிறோம் என்று சொல்லி வருத்தப்பட்டிருப்பார்கள். அதனால் 18 வயதிற்கு பிறகும் உயரமாக வளர இந்த ஆசனங்களை செய்யுங்கள். கட்டையாக இருப்பவர்களும் உயரமாக வளரலாம். வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.

ஞாபக சக்தியை அதிகரிக்க யோகாசனம்

புஜங்காசனம் செய்யும் முறை:

புஜங்காசனம் செய்யும் முறை

 • முதலில் தரையில் குப்புற படுக்க வேண்டும்.
 • அடுத்து உங்கள் உள்ளங்கைகளை உங்கள் தோள்களுக்கு கீழே தரையில் வைக்க வேண்டும்.
 • கைகளை ஊன்றித் தலையை மேலே தூக்க வேண்டும்.
 • அடுத்து சுவாசத்தை உள்ளுக்கு இழுத்து, மீண்டும் பழைய நிலைக்க வரும்போது சுவாசத்தை வெளியே விட வேண்டும்.
 • உங்கள் முதுகெலும்பை வளைக்கும் போது உங்கள் கன்னத்தை உயர்த்தவும்.
  உங்களால் முடிந்தவரை உங்கள் முதுகை வளைத்து குறைந்தது 30 வினாடிகள் வைத்திருக்கவும்.

பயன்கள்:

மார்பு தசைகள் மற்றும் முதுகெலும்பை வலுவாக்கும். மார்புச் சளியை போக்க உதவுகிறது. மார்பு, தோள் மற்றும் வயிற்று பகுதியை நீட்டி உயரத்தை அதிகரிக்க செய்கிறது. மன அழுத்தம், மனச்சோர்வு பிரச்னைகளையும் போக்குகிறது.

7 நாட்களில் உயரமாக வளர வேண்டுமா.. அப்போ இதை மட்டும் பண்ணுங்கள்

தடாசனம் செய்யும் முறை: 

தடாசனம் செய்யும் முறை

இது நின்று கொண்டு செய்யவேண்டிய மிகவும் எளிமையான ஆசனம் ஆகும்.

 • முதலில் விரிப்பில் 2 கால்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து நேராக நிற்க வேண்டும்.
 • பின் 2 கைகளையும் மெதுவாக தலைக்கு மேலே உயர்த்த வேண்டும்.
 • அடுத்து இரு கைகளின் விரல்களையும் ஒன்றாக பிணைத்து, உள்ளங்கைகளை வானத்தை பார்த்து இருப்பது போல நீட்ட வேண்டும்.
 • பின் மெதுவாக குதிகால்களை உயர்த்தி நிமிர்ந்து நிற்க வேண்டும். இதே நிலையில் 10 வினாடிகள் நிற்க வேண்டும். மூச்சை மெதுவாக விட வேண்டும்.

பயன்கள்:

இ‌ந்த ஆசன‌த்தை செ‌ய்வத‌ன் மூல‌ம் உடலு‌ம், மனது‌ம் பு‌த்துண‌ர்வு பெறு‌ம். இ‌ந்த ஆசன‌த்தை 18 வயது வரை செய்து வந்தால் உயரமாக வளர உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் 6 மாதம் வரை இந்த ஆசனத்தை செய்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.

கருப்பை இறக்கம் வராமல் தடுக்க யோகாசனம்

ஒற்றைக் கால் துள்ளல்: 

ஒற்றைக் கால் துள்ளல்

 • உங்கள் 2 கால்களில் ஒரு காலை மட்டும் தூக்கி கொண்டு பத்து முறை குதிக்க வேண்டும்.
 • பின் உங்கள் கைகளை வானத்தை நோக்கி நேராக வைக்க வேண்டும். அல்லது இடுப்பு பகுதியிலும் வைத்து கொள்ளலாம்.
 • இதுபோல குதித்து வருவதால் உடலில் எலும்புகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.

மேலும் சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் போன்ற பயிற்சிகளை செய்தும் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.

பக்கவாதம் வராமல் இருக்க இந்த யோகாசனத்தை செய்யுங்கள்

 

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா