Yoga for Healthy Liver in Tamil
நமது உடலின் மிகப்பெரிய மற்றும் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு ஆகும். பொதுவாக கல்லீரல் 500-க்கு மேற்பட்ட வேலைகளை செய்கிறது. நாம் எதைச் சாப்பிட்டாலும் அதனை செரிமானம் செய்வதற்கு கல்லீரல் தான் உதவுகிறது. உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் கல்லீரல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கல்லீரலை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். அதனால் தான் இன்றைய பதிவில் கல்லீரலை பலப்படுத்த உதவும் சில யோகாசனங்களை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள யோகாசங்களை தினமும் செய்து உங்களின் கல்லீரலை நன்கு ஆரோக்கியத்துடனும், பலத்துடனும் வைத்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=> இதயம் நன்கு ஆரோக்கியத்துடன் செயல்பட யோகாசனம்
Yoga for Liver in Tamil:
1. தனுராசனம்:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு விரிப்பில் குப்புற படுத்து கைகளால் கால்களை இறுக பிடிக்கவும். சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் கால்களை இழுங்கள். பின்னர் தலையை மேல் நோக்கி வளைத்து கால்களுக்கு அருகில் கொண்டு வாருங்கள்.
இந்த நிலையில் 5 – 10 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனத்தை தினமும் காலையும், மாலையும் செய்து வருவதன் மூலம் உங்களின் கல்லீரல் நன்கு பலப்படும்.
2. புஜங்காசனம்:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு விரிப்பில் நன்கு கால்களை நேராக நீட்டியபடி குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும். கைகள் இரண்டையும் மாா்புக்கு நேராகத் கை விரல்களை தரையில் விாித்து ஊன்றிக் கொள்ளுங்கள். கைகள் அக்குள் பகுதியைத் தீண்டாமல் முன்னுக்கு எடுத்து சென்று அப்படியே தூக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் => உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக செல்வதற்கு யோகாசனம்
மாா்பு முன் பக்கம் வளைந்தும் முகம் நேராக பாா்த்த வண்ணமும் இருக்க வேண்டும். கால்களும் உடலின் இடுப்புக்கு கீழுள்ள பாகமும் தரையைத் தொட்ட வண்ணம் இருக்க வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்தப்படியே கைகளை ஊன்றித் தலையை மேலே தூக்கி கொள்ளுங்கள்.
இந்த நிலையில் 5 – 10 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனத்தை தினமும் காலையும், மாலையும் செய்து வருவதன் மூலம் உங்களின் கல்லீரல் நன்கு பலப்படும்.
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |