குடிசைதொழில் – நோட்டுப் புத்தகம் தயாரிப்பு !!!

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு !!!

நோட்டுப் புத்தகத்தின் தேவை என்ன என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பள்ளி, கல்லூரிகள் அலுவலகங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் இதற்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டர், லேப்டாப் என தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துவிட்டாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்றும் நோட்டுப் புத்தகங்களில்தான் எழுதி வருகின்றனர்.

எனவே, எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரை நோட்டுப் புத்தகங்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. குழந்தைகளுக்குப் பாடங்கள் அதிகமாக ஆக, நோட்டுகளுக்கான தேவையும் எதிர்காலத்தில் இருந்து கொண்டே இருக்கும். பள்ளி, கல்லூரிகளை நேரடியாக அணுகி, ஆர்டர் பெறுவதன் மூலம் நோட்டுக்களை விற்கலாம். அல்லது உரிய டீலர் மூலம் கடைகளில் சப்ளை செய்துவிடலாம்.

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு (how to make notebook) முறையில் மீதமாகும் கட்டிங் வேஸ்டுகளை மறுசுழற்சி முறையில் இரண்டாம் தர நோட்டுகளைத் தயார் செய்பவர்களுக்கு விற்பனை செய்யலாம்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

ஸ்டேஷனரி ஷாப் தொழில் மூலம் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்..!

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு !!!

கட்டிட அமைப்பு:

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு (how to make notebook) பொறுத்தவரை கட்டிட அமைப்புகள் 1,000 முதல் 1,500 சதுர அடி வரை இடம் தேவை. இதில், குறைந்தது 750 சதுர அடி அளவில் கட்டிடம் இருக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு (how to make notebook) பொறுத்தவரை தேவைப்படும் பேப்பர், சுருள் வடிவிலும், பெரிய ஷீட் வடிவிலும் கிடைக்கிறது.

கிலோ கணக்கில் கிடைக்கும் இந்த மூலப் பொருளின் விலை, கல்வி ஆண்டின் ஆரம்ப காலத்தில் அதிகமாகவும், பின்னர் ஆறு மாதம் குறைவாகவும் இருக்கும்.

பொதுவாக கிலோ 52-55 ரூபாய் வரையில் கிடைக்கிறது. இந்த மூலப் பொருட்கள் டி.என்.பி.எல்., எஸ்.பி.பி. போன்ற கம்பெனிகளிடம் கிடைக்கிறது.

தேவைப்படும் இயந்திரங்கள்:

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு (how to make notebook) பொறுத்தவரை ரூலிங் மெஷின், பைண்டிங்க் மெஷின், கட்டிங் மெஷின், பின்னிங் மெஷின் மற்றும் பிரின்டிங் மெஷின் ஆகிய ஐந்து இயந்திரங்கள் தேவைப்படும்.

இயந்திரங்களின் விலை:

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு (how to make notebook) பொறுத்தவரை இந்த ஐந்து இயந்திரங்களை வாங்க மொத்தம் 14 லட்சம் ரூபாய் வேண்டும்.

கைதொழில் – செல்லோ டேப் தயாரிப்பு !!!

இயந்திரங்கள் கிடைக்கும் இடங்கள்:

ரூலிங் மெஷின், பைண்டிங்க் மெஷின், கட்டிங் மெஷின் மற்றும் பின்னிங் மெஷின் ஆகியவை கேரளா மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் கிடைக்கும்.

பிரின்டிங் இயந்திரம் இங்கு கிடைத்தாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது நல்லது.

இந்த பிரின்டிங் மெஷினை தேவைப்பட்டால் மட்டுமே வாங்கிக் கொள்ளவும்.

பிரின்டிங் இயந்திரத்துடன் சேர்த்து இந்தத் தொழில் தொடங்குவதற்கு, இருபது லட்ச ரூபாய்க்கு மேல் தேவைப்படும்.

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு முறை:

நோட்டுப் புத்தகங்கள் இரண்டு வகையாகத் தயாரிக்கப்படுகிறது.

40-90 பக்கம் கொண்ட நோட்டு புத்தகம் ஒரு வகை.

192-400 வரையிலான பக்கங்களைக் கொண்ட நோட்டுப் புத்தகம் மற்றொரு வகை.

இந்த இரண்டு வகையைப் பொறுத்து தயாரிப்பு வேலைகள் மாறும்.

ரூலிங் மெஷின்:

இந்த மெஷினில் பேப்பரை வைத்து நமது தேவைக்கேற்ப நோட்டுப் புத்தகத்தில் வரிகளைப் போட பயன்படுகிறது.

இந்த மெஷின் முதலில் மார்ஜின் லைனும், பின்னர் தேவையான வரிகளையும் போடுகிறது. இந்த வேலை செய்ய இரண்டு ஆட்கள் தேவைப்படுவார்கள்.

இப்படி வரிகளுடன் அச்சாகி வரும் பேப்பர்கள் எண்ணப்பட்டு தனியாக வைக்கப்படும்.

அன்ரூல்டு நோட்புக்கை மட்டுமே தயாரிப்பவர்களுக்கு இந்த மெஷின் தேவையிருக்காது.

கட்டிங் மெஷின்:

எண்ணப்பட்ட பேப்பர்கள் தேவைப்படும் அளவுக்கு ஏற்ப வெட்டப்படுகிறது.

சின்ன நோட்டு, பெரிய நோட்டு என்று தேவைப்படும் அளவுகளில் வெட்டிக் கொள்ளலாம். இந்த வேலையினைச் செய்ய இரண்டு ஆட்கள் தேவை.

பின்னிங் மெஷின்:

வெட்டப்பட்ட பக்கங்கள் பின்னிங் மெஷின் மூலம் பின் அடிக்கப்படுகிறது. இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவைப்படுவார்கள். பின் அடிக்கப்பட்ட நோட்டுகள் கட்டிங் மெஷின் மூலம் வெட்டுகிறார்கள்.

பைண்டிங் மெஷின்:

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு (how to make notebook) முறையில் இப்படி வெட்டப்பட்டு வருகிற பெரிய நோட்டுகளில் வெளிப்பக்கமாக அட்டை வைத்து 300 செல்சியஸ் அளவுக்கு சூடாக்கப்பட்ட பசையை கொண்டு ஒட்டுகிறார்கள்.

இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவை. பின்னர் மீண்டும் கட்டிங் மெஷினில் வைத்து பிசிறில்லாமல் சீராக வெட்டி சரி செய்கிறார்கள்.

பிரிண்டிங் மெஷின்:

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு (how to make notebook) முறையில் இந்த மெஷின் மூலம் தான் நோட்டின் அட்டைகள் பிரின்ட் செய்யப்படுகிறது. இந்த மெஷினைக் கொண்டு முகப்பு அட்டையில் வேண்டிய டிசைன் அல்லது படங்களை பிரின்ட் செய்து கொள்ளலாம். இந்த மெஷினை புத்தகங்களை அச்சடிக்கவும், வேறு பல பிரின்டிங் வேலை செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த தொழிலை பொறுத்தவரை மே மாதம் தொடங்கி ஆறுமாதம் வரை வேலை இருக்கும்.

பின்பு அடுத்து வரும் சில மாதங்களுக்கு பெரிதாக வேலை இருக்காது.

இந்த தொழில் நல்ல வருமானம் இருக்கும்போது மூலப்பொருட்களின் விலை அதிகமாக இருக்கும்.

பள்ளி கல்லுரிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையின் அளவு அதிகரித்து கொண்டே இருப்பதால் இந்த தொழிலில் அதிக வருமானம் கிடைக்கும்.

வருமானம்:

இந்த நோட்டுப் புத்தகம் தயாரிப்பு தொழிலை பொறுத்தவரை சந்தையில் அதிக வரவேற்பு இருக்கிறது என்பதால், அதிக வருமானம் கிடைக்கக்கூடிய தொழிலாகும்.

அதாவது நோட்டுப் புத்தகம் அதிகமாக பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று அதிகளவு பயன்படுத்துவதால் இந்த தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.

இந்த தொழிலை பொறுத்தவரை தயாரித்த பொருளை விற்க முடியாத நிலை இன்று வரை ஏற்பட்டதில்லை.

புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 சிறந்த சிறு தொழில் பட்டியல்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.