வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சுயதொழில் – விபூதி தயாரிப்பு..! குறைந்த முதலீடு அதிக லாபம்

Updated On: June 26, 2024 4:13 PM
Follow Us:
விபூதி தயாரிக்கும் முறை
---Advertisement---
Advertisement

விபூதி தயாரிக்கும் முறை – இயற்கை விபூதிக்கு நல்ல வரவேற்பு

சுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..! சூப்பர் வருமானம்..!

விபூதி தயாரிக்கும் முறை: சுய தொழிலில் சிறந்த தொழிலாக விளங்குகிறது விபூதி தயாரிக்கும் முறை. பொதுவாக நாட்டு மாடுகளை வளர்க்க தயங்குவதன் காரணம் பசு மாடுகளை விட, நாட்டு மாடுகள் மிகவும் குறைந்த அளவே பால் கிடைப்பதுதான் காரணம். இருப்பினும் நாட்டுமாடு வளர்ப்பில் பால் விற்பனை இல்லாமலேயே அதிக வருமானம் பார்க்க முடியும். அதாவது மாட்டு சாணத்தை வைத்து விபூதி தயாரிக்கும் முறை பற்றி இவற்றில் நாம் காண்போம்.

விபூதி தயாரிப்பு மூலதனம்:

விபூதி தயாரிப்பு முறை தொழிலுக்கு முதல் மூல பொருட்களே மாட்டு சாணம்தான். எனவே மாடுகள் சாணம் போட்டவுடனே அதை சேகரித்து வைக்க, பசு மாட்டுச் சாணத்தைத் தனியாகவும், காளைமாட்டுச் சாணத்தைத் தனியாகவும் பிரிச்சு வைக்க வேண்டும். பசு மாட்டுச் சாணத்துலதான் விபூதி (திருநீறு) தயாரிப்போம். காளைமாட்டுச் சாணத்தை உரத்துக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம்.

வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..?

விபூதி தயாரிக்கும் முறை :

  • விபூதி தயாரிப்பு தொழில் பொறுத்தவரை பசு மாட்டுச் சாணத்தைப் பச்சையா இருக்கும் போதே வைக்கோல், குச்சிகளைக் கழிச்சு சுத்தப்படுத்தி, சாத்துக்குடிப் பழ அளவுல கையால உருட்டி, வெயில்ல ஒரு வாரம் காய வெச்சுடுவோம்.
  • இரண்டு உருண்டைகளை எடுத்து, ரெண்டையும் தட்டிப்பார்த்தா ‘சிலிங்’னு சத்தம் வந்தா நல்ல காய்ஞ்சுடுச்சுனு அர்த்தம்.
  • காய்ஞ்ச சாண உருண்டைகளை, விபூதி தயாரிக்கிற பர்னர்ல அடுக்கி நெருப்பு வைக்க வேண்டும்.
  • ஒரு தடவைக்கு 150 கிலோ அளவுக்கு உருண்டைகளை வெக்கலாம்.
  • அடுப்பில் ஒரு வாரம் வெந்ததும், அடுப்பை அணைச்சுக் உள்ளேயே மூன்று நாள் குளிர வைத்து பிறகு வெளியே எடுப்போம்.
  • 150 கிலோ சாண உருண்டைகள் மூலமா 25 கிலோ விபூதி கிடைக்கும். மாசம் 75 கிலோ வரை விபூதி கிடைக்கும். விபூதி தயாரான மறுநாளே விற்பனையாகிடும். அந்தளவுக்குக் கிராக்கி இருக்கிறது.

விபூதி தயாரிப்பு வருமானம்:

  • விபூதி தயாரிப்பு தொழில் பொறுத்தவரை ஒரு கிலோ விபூதியை 500 ரூபாய்க்கு விற்கும்போது, மாசம் 75 கிலோ விபூதி விற்பனை மூலமா 37,500 ரூபாய் கிடைக்கும். எனவே விபூதி தயாரிக்கும் முறை என்பது ஒரு மிகச்சிறந்த சிறு தொழில் ஆகும்.
  • ஒரு லிட்டர் சிறுநீரை 50 ரூபாய்க்கும், மாசம் 500 லிட்டர் வரை விற்பனை செய்யலாம். அது மூலமா மாசம் 25,000 ரூபாய் கிடைக்கும்.
சுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..! சூப்பர் வருமானம்..!

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!