Used Book store Business Plan in Tamil
தொழில் தொடங்க நினைக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அன்பான வணக்கங்கள்.. நீங்கள் எதிர்காலத்தில் நல்ல தொழிலதிபராக ஆக எங்களது வாழ்த்துக்கள். இன்றைய பதிவில் பழைய புத்தகங்களை ஆன்லைன் மூலமும், ஆஃப்லைன் மூலம் விற்பனை செய்து எப்படி லாபம் பெறலாம் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். ஆகவே பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..
Used Book store Business ஏன் ஆரம்பிக்க வேண்டும்?
இன்றைய காலகட்டத்திலும் பலருக்கு பழைமை வாய்ந்த புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் இருந்து வருகிறது. மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அறிவு திறனை மேம்படுத்த குழந்தைகளுக்கான புத்தகங்களை ஆன்லைனிலும் சரி, ஆஃப்லைனிலும் சரி ஆர்டர் செய்து புத்தகங்களை வாங்குகின்றன. அதேபோல் கல்வி கற்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஏதாவது புத்தகம் தேவைப்படும் அவர்களும் புத்தகங்களை வாங்குவார்கள். இது போன்று பலருக்கு பலவிதத்தில் புத்தகங்கள் தேவைப்படும். இருப்பினும் அதன் விலை அதிமாக இருந்தால் அந்த புத்தகங்களை வாங்குவதற்கு சற்று தயங்குவார்கள். ஆகவே நீங்கள் பழைய புத்தகங்களை மற்றவராக்களிடம் இருந்து கலையிட் (வசூலித்து) செய்து அதனை குறைந்த விலையில் விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.
குறிப்பாக இந்த தொழிலை நீங்கள் Franchise எடுத்தும் செய்யலாம். அதாவது சென்னையில் உள்ள Used Books Factory என்ற நிறுவனம். Used Book store ஆரம்பிப்பதற்கு Franchise உரிமைத்தை வழங்குகிறது. ஆகவே நீங்கள் https://www.usedbooksfactory.com/ என்ற இணையத்தளத்தில் பார்வையிடம் அவற்றில் முழுமையான தகவல்களை நீங்கள் பெற முடியும். சரி இந்த தொழில் குறித்த சில தகவலை இப்பொழுது பார்க்கலாம்.
யாருக்கு ஏற்றது இந்த தொழில்:
வீட்டில் ஒளிவு நேரங்களில் நல்ல வீட்டில் இருந்தபடியே தொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் இந்த தொழில் சிறந்து. கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கூட இந்த தொழிலை பார்ட் டைம் ஆக செய்யலாம். அதேபோல் தனியாக ஒரு ஸ்டோர் வைத்து முழு நேரமாக கூட இந்த தொழிலை செய்யலாம்.
தகுதி:
- அடிப்படையாக ஆங்கிலம் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
- டிஜிட்டல் உபகரணங்கள் (லேப்டாப்/ஸ்மார்ட் போன்கள்) அவசியம் இருக்க வேண்டும்.
வீட்டில் இருந்து இந்த தொழிலை ஆரம்பிக்க:
நீங்கள் வீட்டில் இருந்து இந்த தொழிலை செய்யும்போது. உங்கள் தேவைகளை பொறுத்து புத்தகங்கள் வழங்கப்படும். ஆரம்ப விநியோகத்தில் 500 இலவச புத்தகங்கள் அடங்கும்.
இந்த புத்தகங்களை தலைமை அலுவகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
புத்தகங்களை சேமிக்க உங்கள் வீட்டில் கூடுதல் இடவசதி இருக்க வேண்டும்.
பேகிங்க் பொருட்கள் இருக்க வேண்டும்.
நீங்கள் வாங்கிய புத்தகங்களை Used Books Factory இணையதளத்தில் விற்பனை செய்யலாம் அல்லது அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதளத்திலும் உரிமை பெற்று விற்பனை செய்யலாம்.
இந்த தொழிலை தொடங்க நீங்கள் 50 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். முதல் 3 மாதங்களுக்கு கமிஷன்கள் / ராயல்டி இல்லை. 3 மாத செயல்பாட்டிற்குப் பிறகு மாதத்திற்கு 1000 ரூபாய்.
தனியாக புக் ஸ்டோர் ரூம் வைக்க:
தேவை:
உங்களிடம் 200 சதுர அடி கொண்ட இடம் இருக்க வேண்டும்.
அந்த இடம் பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு காலனிகளுக்கு அருகில் இருக்க வேண்டும்.
இவர்களிடம் நீங்கள் உரிமம் பெற்ற பிறகு உங்கள் தேவைக்கேற்ப புத்தகங்கள் வழங்கப்படும். ஆரம்ப விநியோகத்தில் 2000 இலவச புத்தகங்கள் அடங்கும்.
நீங்கள் புத்தகங்களை தலைமை அலுவலகம், தலைமை அலுவலகம் வழங்கும் ஆதாரங்களில் இருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
செலவு & கமிஷன்கள்:
- உரிமைச் செலவு – ரூ 2,00,000/-
- செயல்பாட்டின் முதல் 3 மாதங்களுக்கு கமிஷன்கள் / ராயல்டி இல்லை.
- 3 மாத செயல்பாட்டிற்குப் பிறகு மாதத்திற்கு 2500 ரூபாய்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 மக்களிடையே Demand எப்பொழுதும் இருக்கும். இந்த தொழிலை செய்தால் நீங்கள் தான் ராஜா
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |