தினமும் 1000 ரூபாய் முதல் 5000 வரை சம்பாதிக்கலாம்..! லாபம் தரும் தொழில்கள்

Advertisement

லாபம் தரும் சிறு தொழில்கள்

என் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் அழகான அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் 1000 ரூபாய் முதலீட்டில் செய்யக்கூடிய தொழில்களை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக என்ன தொழில் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற நிறைய விதமான யோசனைங்களை யோசித்துகொண்டு இருப்பார்கள். ஆனால் எதனையும் செய்யமாட்டார்கள். நாம் யோசித்தால் மட்டும் போதாது அதனை ஒரு முறையாவது செய்து பார்த்தால் தான் அதில் ஒரு விதமான யோசனையை பெறமுடியும். ஆகவே யோசித்து வெறுத்துபோனவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.

வாழை இலை வியாபாரம்:

இந்த தொழில்களை அதிகளவு யாரும் செய்வது கிடையாது. காரணம் நாம் வாழ்வது கணினி உலகம் அல்லவா ஆகவே நாம் சாப்பிடுவது தட்டில் தான் இன்னொன்று இலைகள் அதிகம் கிடைப்பதில்லை. ஆகவே இந்த தொழிலை துணிந்து செய்யலாம். இந்த தொழில் இலைகளை அப்படியே கட் செய்து விற்பனை செய்தால் 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்கலாம். காரணம் இலைகளில் சாப்பிடுவதால் அவ்வளவு நன்மைகள் உள்ளது  என்பதை அறிந்தவர்கள் இலைகளை வாங்குவதில் அதிகம் நாட்டம் காட்டுகிறார்கள்.

1000 investment high profit business ideas in tamil

அதேபோல் இலை என்றால் வீட்டில் மட்டும் வாங்குவதை விட கடைகளுக்கு அதிகம் வாங்குகிறார்கள். ஆகவே கடைகளுக்கு தட்டின் வடிவத்தில், நீளவாக்கில் நறுக்கியது, ஒருபக்கம் நறுக்கியது போன்று இலைகளை நறுக்கி கொடுத்தால் உங்களிடம் அதிகம் வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

இந்த தொழிலுக்கு முதலீடு 1000 ரூபாய் தான் உங்களுக்கு 2000 ரூபாய் வரைக்கும்  லாபம் கிடைக்கும்.

Chips Kadai:

 chips kadai

சிப்ஸ் கடைகளில் என்ன லாபம் கிடைக்க போகிறது என்று யோசிப்பீர்கள். நீங்கள் விரும்பி சாப்பிடுகிறது உருளைக்கிழங்கு சிப்ஸ் என்றால் அதனை நேரடியாக போட்டு விற்பனை செய்தால் அந்த கடைக்கு எவ்வளவு கூட்டம் வரும் அதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று யோசனை செய்து பாருங்கள். இதற்கு நீங்கள் செய்ய போவது ஒரு கடையை பிடித்து சிப்ஸ் போடா தெரிந்த ஆட்களை வைத்து பொருட்களை வாங்கி செய்து கொடுத்தால் ஒரு நாளுக்கு 1 பாக்கெட் 20 ரூபாய் என்றால் ஒரு நாளுக்கு 50 பாக்கெட் விற்றால் 1,000 ரூபாய் கிடைக்கும். இது ஒரு தோராயமாக சொல்கிறேன். ஒரே வகையான சிப்ஸ் செய்யாமல் வித்தியாசமாக புது புது ஸ்னாக்ஸ் செய்து விற்பனை செய்யலாம்.

தினசரி வருமானம் தரும் தொழில்:

பிரியாணி கடை தொழில்

இந்த தொழில் என்பது தினசரி நல்ல வருமானத்தை கொடுக்கும் அதேபோல் இந்த  தொழிலை காலையில் செய்தால் உங்கள் கடைக்கு கூட்டம் அதிகம் ஆகும் காரணம் இந்த கடை அதிகளவு மதியம், இரவு நேரங்களில் தான் வைப்பார்கள். காலை நேரங்களில் ஒரு மணி நேரத்தில் 2000 ரூபாய் கூட சம்பாதிக்கலாம். காலையில் பிரியாணி செய்து விற்கலாம் ஒரு பிரியாணி 70 ரூபாய் என்று கொடுக்கலாம் அப்படியில்லையென்றால் 170 ரூபாய் என்று கொடுக்கலாம். குறைந்த விலையில் காலையில் பிரியாணி என்றால் யாருக்கு தான் வாங்கமல் போக மனசு வரும். நிச்சயம் அனைவருமே வாங்குவார்கள்.

இந்த மூன்று தொழில்கள் அனைத்துமே கூட்டம் கூடும் இடத்தில் இருந்தால் போதும் கூட்டம் உங்களை தேடி வரும். இந்த தொழில்கள் அனைத்திற்கும் 1,000 அல்லது 1,500 முதலீடு போதுமானது லாபம் மட்டும் 2000 வரை கூட பெறலாம்.

தினமும் 2 மணி நேரம் வேலை செய்தால் மாதம் 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement