2023 Business Ideas in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய வியாபார பதிவில் 2023 ஆம் ஆண்டில் கொடிகட்டி பறக்கப்போகின்ற ஒரு பிஸ்னஸ் பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக ஒரு இடத்தில் வேலை செய்பவர்களுக்கு, சொந்தமாக ஒரு தொழில் செய்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பார்கள், அப்பொழுது அவர்களுக்கு என்ன தொழில் செய்வது என்று ஒரு யோசனையும் இருக்காது, அவர்களுக்கெல்லாம் இந்த பதிவின் மூலம் ஒரு அருமையான தொழில் பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். அதாவது தற்பொழுது 2022 -யில் இந்த தொழிலின் தேவை அதிகமாகவே இருக்கின்றது, அப்போழுது 2023 ஆம் ஆண்டு இதனுடைய தேவைகள் இன்னும் அதிகமாகவே இருக்கும், அப்படிப்பட்ட ஒரு தொழிலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம்.
நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தில் சம்பாதிக்க வழிகாட்டும் 4 அருமையான தொழில்கள்..! |
3D Printing Business in Tamil:
இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகின்ற பிஸ்னஸ் என்னவென்றால், 3D பிரிட்டிங் பிஸ்னஸ் தான், இந்த பிஸ்னஸ் ஆனது தற்பொழுது ஒரு பிரபலமான தொழிலாக இருக்கின்றது. அதில் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகின்ற பிஸ்னஸ் ஆனது, 3D பிரிட்டிங் மெஷினை கொண்டு பொம்மைகள் தயாரிப்பது பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக பொம்மைகள், வீட்டின் அலங்கார பொருட்களாக வைப்பதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும் , பிறந்த நாளுக்கு பரிசாக தருவதற்கும் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இந்த பிசினஸை தொடங்கினால் நீங்கள் மாதம் 30,000 ரூபாய்க்கு மேல் வரையும் சம்பாதிக்கலாம்.
தேவைப்படும் இடம் வசதி:
இந்த 3D பிரிட்டிங் பிஸ்னஸை செய்வதற்கு உங்கள் வீட்டில் 10 × 10 இடம் இருந்தாலே போதுமானது. அதாவது இந்த 3D பிரிட்டிங் மெஷினை வைப்பதற்கு உங்கள் வீட்டில் சிறியதாக இடம் இருந்தால் போதும்.
2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த 4 பிரபலமான தொழில்கள்.. இந்த தொழிலை ஆரம்பித்தால் நீங்கள் தான் ராஜா..! |
தேவைப்படும் முதலீடு:
3D பிரிட்டிங் பிஸ்னஸை நீங்கள் ஒரு Company மூலம் செய்யும் பொழுது, உங்களுக்கு 60,000 ரூபாய் முதலீடு இருந்தாலே போதும். நீங்கள் அந்த 3D பிரிட்டிங் மெஷினை மட்டும் வாங்கிகொண்டால் போதும், அவர்களே உங்களுக்கு அந்த 3D பிரிட்டிங் மெஷினை எப்படி ஆப்ரேட் செய்வது என்று இலவசமாக சொல்லித்தருவார்கள், அதோடு மட்டுமின்றி தேவையான மூலப்பொருள்களையும் அவர்களே கொடுத்து விடுவார்கள். மேலும் இலவசமாக 3D மெஷினை இயக்குவதற்காக Software தருகிறார்கள்.
3D Printing Machine in Tamil:
இந்த 3D Printing Machine ஆனது முன்பெல்லாம் அதிகமான விலைகளில் இருப்பதால், இந்த பிஸ்னஸை தொடங்குவதற்கு ஒரு சிலர் தயங்கினர், ஆனால் இவை காலப்போக்கில் இதனுடைய விலை மலிவுக்கு வந்தன. இந்த மெஷினின் விலை தற்பொழுது 60,000 ரூபாயில் இருந்து விற்பனை ஆகின்றது, இதனை நீங்கள் ஆன்லைன் மூலம் கூட பெற்றுக் கொள்ளலாம். இந்த 3D Printing Machine வைத்து இரண்டு விதமான பொருட்களை கொண்டு பொம்மைகள் செய்யலாம். அதாவது பிளாஸ்டிக் மற்றும் மரங்களை வைத்து, உங்களுக்கு எந்த வடிவில் எப்படி வேண்டுமோ 3D Printing Machine மூலம் செய்யலாம்.
3D பிரின்டிங் பிஸ்னஸ் யார் செய்யலாம்.?
இந்த 3D பிரின்டிங் பிஸ்னஸை யார்வேண்டுமானாலும் செய்யலாம், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கணினி உபயோகிப்பவர்கள், Photo shop வைத்திருப்பவர்கள், ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர்கள், இசேவை மையம் வைத்திருப்பவர்கள் போன்ற அனைவருக்கும் இந்த தொழில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த பிஸ்னஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் செய்து அசத்துங்கள்.
இந்த தொழில் ஆரம்பித்தாள் ஒரு நாளைக்கு 25000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |