Beauty Parlour Business Plan
இன்றைய காலத்தில் அனைவருக்குமே சுயதொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சுயதொழில் செய்வதற்கு அர்வம் மட்டும் இருந்தால் போதாது. அதற்கான யோசனைகளும், முதலீடும் இருக்க வேண்டும். நீங்கள் எதாவது சுயதொழில் செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டிருப்பவராக இருந்தால் இந்த பதிவை முழுமையாக படித்து பாருங்கள். உங்களுக்கு இந்த பதிவில் கூறியுள்ள தொழில் ஏற்றதாக இருந்தால் தொழிலை ஆரம்பித்து விடுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Beauty Parlour Business Ideas:
இன்றைய காலத்தில் ஆண்கள்,பெண்கள் அனைவருமே தங்களை அழகுபடுத்தி கொள்கிறார்கள். இதற்காகவும் பார்லருக்கு செல்கிறார்கள். அதனால் நீங்கள் Beautician-க்கு படித்திருந்தால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம். நீங்கள் இந்த தொழிலை இரண்டு விதமாக செய்யலாம் ஒன்று Beauty parlour வைக்கலாம். இல்லையென்றால் சுப நிகழ்ச்சி நடக்கும் அதாவது மணப்பெண் அலங்காரம் செய்யலாம்.
முதலீடு
நீங்கள் Beauty Parlour வைக்க போகிறீர்கள் என்றால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாக பார்த்து வைக்க வேண்டும். நீங்கள் கடை வைப்பது முதல் அதற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும் மொத்த முதலீடாக 1 லட்சம் தேவைப்படும்.
கை நிறைய சம்பாதிக்க இந்த ஒரு தொழில் போதும்..!
வருமானம்:
நீங்கள் முதலீடு செய்த பணத்தை ஒரு வருடத்தில் எடுத்து விடலாம். நீங்கள் ஒருவருக்கு நன்றாக மேக்கப் போட்டு விட்டீர்கள் என்றால் அவர்கள் உங்களை பற்றி மற்றவர்களிடம் சொல்வார்கள். அதன்மூலமாக வாடிக்கையாளர்கள் நிறைய நபர்கள் வருவார்கள்.
ஒரு நாளைக்கு தோராயமாக 1500 ரூபாய் சம்பாதிக்கலாம்.
வீட்டிலிருந்து செய்வது எப்படி.?
இல்லை என்னால் லட்சக்கணக்கில் முதலீடு போட முடியாது என்றால் வீட்டிலிருந்தே இந்த தொழிலை செய்யலாம்.
நீங்கள் வீட்டிலிருந்து மணப்பெண், மணமகன் அல்லது வேறு ஏதும் சுப நிகழ்ச்சி நடக்கும் போது கண்டிப்பாக கையில் மெஹந்தி போடுகிறாரக்ள். அதனால் நீங்கள் ஒரு கைக்கு மெஹந்தி போட்டால் 1500 ரூபாய் சம்பாதிக்கலாம்.
மணப்பெண் அலங்காரம் செய்தால் 5000 ரூபாய் முதல் 20,000 ருபாய் வரை சம்பாதிக்கலாம்.
மேல் கூறப்பட்டுள்ள இரண்டு வகை தொழில்களில் எதாவது ஒன்றை செய்தாலே தினமும் 2000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
எப்போதும் வருமானம் தருகின்ற ஒரே தொழில் இதை மட்டும் தொடங்கி பாருங்கள்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |