பெண்கள் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க அற்புதமான தொழில்கள்..!

அற்புதமான தொழில்கள்

அற்புதமான தொழில்கள்..!

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்று நம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வேலை செய்யாத இடங்களே இல்லை. உலகில் அனைத்து பணிகளிலும் பெண்கள் இடம் பிடித்துள்ளனர். அதுபோலவே, பெண்கள் வெளியில் சென்று வேலை செய்வது மட்டுமல்லாமல் வீட்டிலிருந்தும் சொந்தமாக சுயதொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர். அந்த வகையில் இன்று நம் பதிவில் பெண்கள் வீட்டிலிருந்தே குறைந்த முதலீட்டில் பணம் சம்பாதிக்க அற்புதமான தொழில் ஒன்றை பற்றி பார்ப்போம்.

இதையும் பாருங்கள் ⇒ வீட்டிலிருந்தே 300 ருபாய் முதலீட்டில் லாபம் தரக்கூடிய சிறந்த தொழில்கள்..!

பெண்களுக்கான அற்புதமான தொழில்கள்:

பல பெண்கள் வீட்டிலிருந்தபடியே சுயமாக தொழில் தொடங்கி அவர்கள் வாழ்க்கையில் பயன்பெற்று வருகின்றனர். பெண்கள் செய்யாத தொழில்களே இல்லை. தானே உழைத்து முன்னேற வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்கும் உண்டு. பெண்கள் வீட்டிலிருந்து செய்யக்கூடிய தொழில்கள் எவ்வளவோ இருக்கின்றனர். அப்படி வீட்டிலிருந்து செய்யும் தொழில்களால் லாபமும் பெற முடியும். அதுபோல பெண்களுக்கான அற்புதமான தொழில் பற்றி இந்த பதிவில் காண்போம்.

வீட்டிலிருந்து செய்யக்கூடிய தொழில்கள்:

பெண்கள் வீட்டிருந்தபடியே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்து விரும்பி சாப்பிட கூடிய தின்பண்டங்களை பேக்கிங் செய்து விற்பதன் மூலம் நல்ல லாபம் பெறலாம். குறைந்த முதலீட்டில் இந்த தொழில் தொடங்குவதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தின்பண்டங்களை பேக்கிங் செய்து சந்தைகளில் விற்பதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.

Sealing machine

நீங்கள் விற்கும் தின்பண்டங்களை பாக்கெட் செய்து ஒட்டுவதற்கு சீல் இயந்திரம் (Sealing machine) வேண்டும். அந்த சீல் இயந்திரத்தின் மதிப்பு 1,500 ல் இருந்து தொடங்குகிறது.

இதையும் பாருங்கள் ⇒ வீட்டிலேயே இருந்து குறைந்த முதலீடு, அதிக லாபம் தரும் சிறந்த தொழில்…?

பின், பெரிய மார்க்கெட்களில் கிடைக்கும் தின்பண்டங்களை கிலோ கணக்கில் வாங்க வேண்டும். தின்பண்டங்கள் மொத்தமாக வாங்கி சின்ன சின்ன பாக்கெட் செய்து கடைகளில் விற்கலாம். எடுத்துக்காட்டாக என்னென்ன தின்பண்டங்கள் வாங்க வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.

  1. மசாலா கடலைப்பருப்பு
  2. பாதாம்
  3. முறுக்கு
  4. சீடை
  5. கருப்பு திராட்சை
  6. முந்திரி
  7. பாசி பருப்பு
  8. கடலை மிட்டாய்
  9. நிலக்கடலை

இதுபோன்ற தின்பண்டங்கள் எவ்வளவோ இருக்கின்றன. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தின்பண்டங்களை பாக்கெட் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் பெறமுடியும்.

முதலீடு இல்லாமல் வெற்றி தரும் பெண்களுக்கான சிறந்த தொழில்கள்..!

100 கிராம்

மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை  பெரிய மார்க்கெட்களில் வாங்கி அதனை 100 கிராம் கவரில் பாக்கெட் செய்து அதை சீல் இயந்திரம் மூலம் ஓட்டவேண்டும்.

நீங்கள் செய்யும் பாக்கெட்களை உங்கள் பகுதியில் உள்ள சிறிய கடைகள் மற்றும் பெரிய சந்தைகள் போன்றவற்றில் விற்பனை செய்து அதனால் நல்ல லாபத்தையும் பெறலாம்.

தினசரி நீங்கள் விற்பனை செய்யும் அளவை பொறுத்து லாபம் கிடைக்கும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022