Bike Spare Parts Business in Tamil
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இன்றைய நிலையில் அனைவருக்குமே சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கிறது. ஆனால் ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதற்கான முயற்சியும் எடுக்க வேண்டும். நாம் ஒரு தொழிலும் தொடங்க போகிறோம் என்றால், அதற்கு எவ்வளவு முதலீடு எவ்வளவு தேவைப்படும். இந்த தொழில் தொடங்கினால் நல்ல வருமானம் கிடைக்குமா என்றெல்லாம் யோசிக்க வேண்டும். அப்படி யோசிப்பவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Two Wheeler Spare Parts Business in Tamil:
இந்த தொழிலுக்கு Demand எப்பொழுதுமே அதிகமாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் இருசக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இருக்க முடியாது. இருசக்கர வாகனங்கள் இருக்கும் வரை இந்த தொழிலுக்கு Demand -ம் இருக்கும். அதனால் நல்ல தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம்.
நீங்கள் ஒரு மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் வணிகத்தைத் தொடங்க விரும்பினால், முதலில் அதைப் பற்றி நீங்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அடுத்து டூவீலர் வாகனங்களில் இருக்கும் உதிரி பாகங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
பின் டூவீலர் சம்மந்தப்பட்ட உதிரிபாகங்களை வாங்கி விற்பனை செய்யலாம். நீங்கள் விற்கும் பொருட்கள் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் உங்கள் கடையை நாடி வருவார்கள்.
மேலும் இந்த தொழிலுக்கு அதிக Demand இருப்பதால், இந்த தொழிலை தொடங்கி நீங்கள் நல்ல லாபம் பார்க்கலாம். மேலும், இந்த தொழிலை தொடங்கினால் தினமும் நல்ல வருமானம் கிடைக்கும்.
முதலீடு கொஞ்சம் தான் ஆனால் லாபம் அதிகம் தரக்கூடிய சிறந்த தொழில்..! |
இடம்:
நீங்கள் இந்த தொழில் தொடங்குவதற்கு உங்கள் கடைக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ ஒரு கடை இருக்க வேண்டும்.
அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு அருகில் உள்ள இடத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். மேலும், இந்த கடை நெடுஞ்சாலையில் அமைந்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும். மக்களும் உங்கள் கடையை விரைவில் அணுகுவார்கள்.
முதலீடு:
இந்த வணிகத்தை தொடங்குவதற்கு கடை வாடகை, டூவீலர் உதிரிபாகங்கள் மற்றும் மற்ற செலவுகளை கணக்கில் கொண்டால் 1 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.
ஆவணங்கள்:
நீங்கள் இந்த வணிகத்தைத் தொடங்குவதற்கு முன், தேவையான உரிமத்தைப் பெறுவதற்கான அனைத்து முறைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
- முதலில் உங்கள் வணிகத்தை பதிவு செய்திருக்க வேண்டும்.
- ஜிஎஸ்டி பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- வணிக உரிமம் பெற வேண்டும்.
- கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
இப்போதே இந்த தொழிலை தொடங்கினால் மாதம் மாதம் 50,000 ருபாய் வரை சம்பாதிக்கலாம்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |