வீட்டில் இருந்தபடியே தினமும் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம். அப்படி என்ன தொழிலாக இருக்கும்.!

Advertisement

வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க

வணக்கம் நண்பர்களே இன்று நம் வியாபார பதிவில் வீட்டில் இருந்தபடியே தினமும் 3000 வரை சம்பாதிக்க ஒரு அருமையான தொழிலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக பெண்களுக்கு இந்த தொழில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இந்த தொழிலை நீங்கள் பார்ட்டைமாக கூட செய்து வரலாம். மேலும் இந்த தொழிலை தொடங்க முதலீடுகள் பற்றிய விவரங்களை நம் பதிவில் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தினமும் 4000 வருமானம் வேண்டுமா? அப்போ இந்த தொழிலை செய்து பாருங்கள்.

தேவையான இட வசதி:

இந்த தொழிலை நீங்கள் உங்களுடைய வீட்டில் இருந்தபடியே செய்துவரலாம், அதாவது உங்கள் வீட்டில் 10 × 10 இடம் இருந்தாலே போதும் இந்த தொழிலை தொடங்குவதற்கு, இந்த தொழிலை தொடங்கியதும் லாபம் அதிகரித்த பிறகு தனியாக ஒரு இடம் அமைத்து கூட இந்த தொழிலை தொடங்கலாம்.

திரிநூல் தயாரிப்பு பிஸ்னஸ்:

பொதுவாகவே எல்லாருடைய வீட்டிலும் சரி கோவிலிலும் சரி விளக்கு திரிகளின் தேவைகள் அதிகமாகவே இருக்கிறது. இந்த விளக்கு திரிகளை வீட்டிலே தயாரித்து அதனை பேக்கிங் செய்து விற்பதன் மூலம் அதிகமான லாபத்தை சம்பாரிக்கலாம், குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த தொழிலை செய்து வரலாம். இந்த தொழிலை நீங்கள் தனியாகவும் எடுத்து செய்யலாம் அல்லது கம்பெனி மூலம் கூட எடுத்து செய்யலாம். இந்த பொருட்களை தயாரித்து கோவில்கள் அதிகம் இருக்கும் இடங்களிலில் உள்ள கடைகளுக்கு, மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளுக்கு விற்பனை செய்யலாம்.

திரிநூல் தயாரிக்கும் மெஷின்:

திரிநூல்களை தயாரிப்பதற்கு உள்ள மெஷினை ஆன்லைன் மூலமாக கூட பெற்றுக்கொள்ளலாம், இந்த மெஷின் மின்சாரத்தில் இயங்க கூடியது, இந்த தொழிலை கம்பெனி மூலம் எடுத்து செய்யும் பொழுது அவர்களே விளக்கு திரி தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வழங்கி விடுவார்கள்.

திரிநூல்களை தயாரிப்பதற்கு இரண்டு விதமான மெஷின்கள் இருக்கிறது அதாவது Manual Machine , Automatic Machine போன்றவை உள்ளது. இந்த Manual Machine ஆனது 8 மணி நேரத்தில் ஒரு நபர் ஐந்து  கிலோ வரையும் விளக்கு திரிகளை தயாரிக்கமுடியும்,  அடுத்ததாக Automatic Machine இருந்தால் ஒரு நாளைக்கு எட்டு கிலோ வரையும் தயாரிக்க முடியும்.  இந்த Manual Machine விலையானது 46,000 ரூபாயாக இருக்கிறது. Automatic Machine விலையானது 76,000 ரூபாயாக இருக்கின்றது.

விளக்கு திரி தயாரிப்பதற்கு தேவைப்படும் பொருள்:

இந்த விளக்கு திரிகளை தயாரிப்பதற்கு ஒரு கிலோ காட்டன் 250 ரூபாய்க்கு கம்பெனியிலிருந்து கொடுக்கிறார்கள். இந்த விளக்கு திரிகளை நீங்கள் தயாரித்து கொடுக்கும் பொழுது கம்பெனி 500 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். ஒரு நாளைக்கு  நீங்கள் ஐந்து கிலோவிலிருந்து எட்டு கிலோ வரையும் தயாரிப்பதால் அதிகமான லாபத்தை எடுக்க முடியும்.

தேவைப்படும் முதலீடு:

இந்த விளக்கு திரி பொருட்களை தயாரிப்பதற்கு ஒரு கிலோ Raw Material செலவுகள் 1250 ரூபாய் வருகிறது. Manual Machine விலை 46,000 ரூபாயாக இருக்கிறது, மொத்தமாக தேவைப்படும் முதலீடுகள் 47,250 மட்டும் தான்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement