தினமும் லாபம் தரும் மிட்டாய் விற்பனை இயந்திரம்
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம். காம் பதிவில் குறைந்த முதலீட்டில் அனைவருக்கும் பிடித்த Candy Vending Machine தொழில் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாக நாம் ஒரு தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதற்கான பொருட்கள் எங்கே வாங்க வேண்டும், அந்த தொழில் மூலம் எவ்வளவு லாபம் ஈட்ட முடியும் என்பதையெல்லாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதை பற்றிய விவரத்தை தான் நாங்கள் இந்த பதிவில் கொடுத்துள்ளோம் பார்த்து படித்து அனைவரும் பயன் பெறவும்.
மிட்டாய் விற்பனை இயந்திரம் தொழில்:
- இந்த தொழில் நம் நாட்டிற்கு மிகவும் புதியது. இந்த தொழில் அனைத்து குழந்தைகளையும் ஈர்க்கும். ஏனென்றால் இந்த மெஷினில் காசு போட்டால் மிட்டாய் கிடைக்கும்.
- இந்த தொழிலை தொடங்குவதற்கு முன்னர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் ஒரு Tie -up வைத்து கொண்டு, வரும் லாபத்தில் குறிப்பிட்ட பங்கை தர வேண்டும். உதாரணத்திற்கு 50% அதாவது Rs.500/– லாபம் கிடைத்தால் அவர்களுக்கு 10% Rs.100/- தரவேண்டும். உங்களுக்கு லாபம் Rs.400/- கிடைக்கும்.
- மேலும் இந்த மெஷினை சுற்றுலாத் தலங்கள், Shopping Mall போன்ற கூட்டங்கள் அதிகமாக உள்ள இடங்களில் இந்த மெஷினை வைத்தால் அதிக லாபம் பெறலாம்.
- சீனாவில் இந்த இயந்திரம் தயாரிக்கப்படுகிறது. இந்த இயந்திரம் ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கி கொள்ளலாம்.
100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..! |
தொழில் தொடங்கினால் போதும்..! லாபம் தேடி வரும்..! |
மிட்டாய் விற்பனை இயந்திரம்:
- இது தான் Candy Vending Machine. இது மேலும் இரண்டு, மூன்று, ஒன்று என மூன்று வடிவங்களில் உள்ளது. இந்த Machine வாங்குவதற்கு Rs.8000/- முதல் Rs.20000/- வரை முதலீடு தேவை.
- பிளாஸ்டிக் வகையில் உள்ள இயந்திரம் விலை குறைவாகவும் மற்ற இயந்திரம் சற்று கூடுதலான விலையிலும் கிடைக்கிறது.
- தொழிலை தொடங்குவதற்கு உங்கள் ஊரில் உள்ள Wholesale கடைகளில் மிட்டாய்களை வாங்கி கொள்ளலாம்.
இயந்திரத்தை பயன்படுத்தும் முறை:
- இயந்திரத்தின் மேல் பகுதியில் ஒரு பூட்டு (Whole) இருக்கும், அதை திறப்பதற்கு ஒரு சாவி கொடுக்கப்பட்டிருக்கும். அந்த சாவியை மெஷினில் மேலே உள்ள பகுதியில் திறந்து மிட்டாய்களை அதன் மூலம் போட்டு அந்த இயந்திரத்தை Fill செய்து கொள்ளவும்.
- அதில் உள்ள காசுகளை எடுப்பதற்கு மிட்டாய் இருக்கும். அந்த பெட்டியை தூக்கவும். இப்பொழுது அதன் கீழே உள்ள வெள்ளை நிற பெட்டியில் காசுகள் இருக்கும்.
- இயந்திரத்தின் கீழே உள்ள வெள்ளி நிற ஓட்டையில் Coin போட்டு அதில் உள்ள திருகை திருவ வேண்டும். இப்போது அதன் கீழே உள்ள தகடை தூக்கினால் மிட்டாய் கிடைக்கும்.
- இந்த இயந்திரத்தை எங்கு வேணாலும் பயன்படுத்தலாம். மின்சாரம் தேவை இல்லை.
Candy Vending Machine Business – லாபம்:
- இந்த தொழிலில் தினமும் லாபம் இருந்து கொண்டே இருக்கும். புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் இந்த தொழிலை செய்யலாம். ஏனெனில் இந்த தொழிலை நம் நாட்டில் யாரும் அறிமுகம் செய்யவில்லை, நீங்கள் முதன் முதலாக ஆரம்பித்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தொழில் பட்டியல் 2021 |