எதிர்காலத்தில் இதன் தேவை அதிகமாக இருப்பதால் இப்போதே இந்த தொழிலை தொடங்குங்கள்..!

Advertisement

Future Business in India

என்ன தொழில் செய்வது, என்ன தொழில் செய்தால் லாபம் கிடைக்கும் என்றெல்லாம் பல கேள்விகள் இருக்கும். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இந்த பதிவு இருக்கும். நாம் தொழில் ஆரம்பிப்பதற்கு முன் அதன் தேவை எப்படி இருக்கிறது என்று பார்த்து தான் ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால், மக்களுக்கு தேவையே இல்லாத ஒன்றை தொழிலாக செய்தால் எப்படி வருமானம் கிடைக்கும். அதனால் எதிர்காலத்தில் தேவை உள்ள தொழிலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Car Washing Business in India:

Future Business in India

 சாலையில் வாகனங்கள் இருக்கும் வரை இந்த தொழிலுக்கு தேவை இருக்கும். ஆண்டுக்கு ஆண்டு இந்த தொழிலுக்கு தேவை அதிகரிக்குமே தவிர குறையாது. இந்த தொழிலை குறைந்த முதலீட்டில் தொடங்கலாம். வாங்க இந்த தொழிலுக்கான முதலீடு, இடம், மூலப்பொருட்கள் போன்றவற்றை படித்து தெரிந்து கொள்வோம்.

இடம்:

இந்த தொழிலை தொடங்குவதற்கு முதன்மையாக இருப்பது இடம் தான். கார் கழுவும் இடத்தை தொடங்குவதற்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடம், பெட்ரோல் பங்க் போன்ற இடத்தை தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும்.

அடுத்து முக்கியமானது நீங்கள் தேர்வு செய்யும் இடத்தின் பக்கத்தில் ஏதும் இந்த தொழிலை செய்கிறார்களா, இந்த தொழிலுக்கான தேவை எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும். 

குறைந்த பட்சம் 4000 சதுர அடி  முதல் 5000 சதுர அடி வரை இடம் தேவைப்படும். 800 சதுர அடி தவிர மற்ற இடம் வாகனங்களை நிறுத்துவதற்கு தேவைப்படும்.

இதையும் படியுங்கள் ⇒ எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதற்கான கெத்து குறையாது..!

மூலப்பொருட்கள்: 

Future Business in India

ஒரு காரை கழுவவதற்கு 30 லிட்டர் முதல் 35 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். தோராயமாக ஒரு நாளைக்கு 15 கார்கள் கழுவுகிறீர்கள் என்றால் 550 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

கடைக்கு 2 அல்லது 3 பணியாளர்கள் தேவைப்படும். அவர்களுக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரை சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும்.

  1. ஹைட்ராலிக் கார் வாஷ் லிஃப்டர்
  2. வணிக அழுத்தம் சலவை இயந்திரம்
  3. வெற்றிட கிளீனர்
  4. பாலிஷர்
  5. ஊதுகுழல்
  6. நீராவி கிளீனர்
  7. கண்ணாடி வேக்

முதலீடு:

இந்த தொழிலுக்கு 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை கடை வாடகை கொடுக்க வேண்டியிருக்கும். இதுவும் இடத்தை பொறுத்து மாறுபடும். மேலும் மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை வாங்குவதற்கு கடை வாடகை எல்லாம் சேர்த்து இந்த தொழில் தொடங்குவதற்கு 3.5 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.

வருமானம்: 

இந்த தொழிலில் 40% லாபம் கிடைக்கும். மேலும் ஒரு நாளைக்கு வரும் கார்களை பொறுத்து வருமானம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ எக்காலத்திலும் அழியாத தொழிலை செய்து முதலாளியாக மாறுங்கள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil

 

Advertisement