Carrot Powder Making Business
இன்றைய நிலையில் பலரும் படித்து முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார்கள். அதில் பலரும் சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் சிறந்த வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே அந்த தொழில் எப்படி தொடங்குவது எங்கு தொடங்குவது என்ற தவகல்களை பற்றி தெரிந்து கொள்வோம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
முதலீடு:
இந்த தொழில் தொடங்குவதற்கு முதலீடு அதிகம் தேவைப்படாது. உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம்.
மூலப்பொருட்கள்:
- கேரட் – 5 kg
- பேக்கிங் கவர்ஸ்
இடம்:
இந்த தொழில் தொடங்குவதற்கு தனியாக ஒரு இடமெல்லாம் தேவைப்படாது. இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீடே போதுமானது. உங்களுக்கு விருப்பம் என்றால் கடையில் கூட இந்த தொழிலை தொடங்கலாம்.
கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்தால் போதும் தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம்..! |
Carrot Powder Making Business in Tamil:
என்ன தொழிலாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா..? அது வேறவொன்றும் இல்லை கேரட் பவுடர் தயார் செய்து விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் கூறுகின்றோம்.
கேரட்டில் எவ்வளவு சத்துகள் இருக்கின்றது என்று நம் அனைவருக்குமே தெரியும். அதுமட்டுமில்லாமல் கேரட் பவுடரில் பல நன்மைகள் இருக்கிறது. கேரட் பவுடர் சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக தொடங்கலாம்.
அதற்கு முதலில் 5 கிலோ அளவிற்கு கேரட்டை வாங்கி கொள்ளவும். பின் அதை நன்றாக கழுவி அதன் மேல் இருக்கும் தோலை மட்டும் நீக்கி கொள்ள வேண்டும்.
பிறகு அதை சிறிய சிறிய துண்டுகளாக அதாவது நைசாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து அதை ஒரு தட்டில் வைத்து வெயிலில் 3 நாட்கள் வரை காயவைக்க வேண்டும்.
3 நாட்கள் கழித்து அதை எடுத்து கையால் நசுக்கினால் தூளாகும் பக்குவத்திற்கு வந்ததும் அதை மிக்சி ஜாரில் போட்டு தூளாக அரைத்து கொள்ள வேண்டும்.
1000 ரூபாய் முதலீட்டில் வீட்டில் இருந்தே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்..! |
விற்பனை செய்யும் முறை:
பின் அந்த தூளை சலித்து எடுத்து கொள்ளவும். பின் இதை கண்கவரும் பாக்கெட்களில் வைத்து பேக்கிங் செய்ய வேண்டும். அடுத்து உங்களின் முகவரிகளை அந்த பேக்கிங் கவர்களின் மேல் அச்சிட வேண்டும்.
அப்போது தான் மக்கள் உங்களை அதிகமாக தொடர்பு கொள்வார்கள். பின் இந்த பவுடரை உங்கள் பகுதியில் இருக்கும் அழகு நிலையங்கள், சூப்பர் மார்க்கெட், மால் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்.
அதுமட்டுமில்லாமல், ஆன்லைனில் உங்களுக்கென்று ஒரு வலைத்தளம் ஆரம்பித்து அதில் இந்த கேரட் பவுடரை விற்பனை செய்யலாம். ஆன்லைனில் கேரட் பவுடர் 200 கிராம் 300 ருபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனால் இந்த தொழிலை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |