சிமெண்ட் டீலர்ஷிப் பிசினஸ் தொடங்குவது எப்படி..?
ஹலோ நண்பர்களே… பொதுநலம் பதிவின் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தொழிலை ஒன்றை பற்றி பார்க்கப் போகிறோம். இன்று எத்தனையோ விதமான தொழில்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் சமமாக வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று நாம் இந்த பதிவில் ஒரு சிறந்த தொழில் பற்றி தான் பார்க்க போகிறோம். சிமெண்ட் டீலர்ஷிப் பிசினஸ் தொடங்குவது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Rs.5000 முதலீட்டில் மாதம் Rs.20,000 லாபம் தரும் சூப்பரான தொழில் |
சிமெண்ட் டீலர்ஷிப் பிசினஸ் எப்படி தொடங்குவது..?
மனிதனாக பிறந்த அனைவருக்கும் வீடு என்பது அவசியமான ஓன்று. இன்றைய காலத்தில் அதிகளவு விற்பனை ஆகக்கூடிய ஓரு பொருள் தான் சிமெண்ட். உலக நாடுகளில் சிமெண்ட் உற்பத்திகளின் பட்டியலில் இந்தியா 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது. பொதுவாக கட்டிடங்கள் கட்ட மிகவும் முக்கியமான மூலப்பொருள் எது என்றால் அது சிமெண்ட் தான். அந்த அளவிற்கு நம் நாட்டில் சிமெண்ட் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. அதனால் தான் இந்த சிமெண்ட் பிசினஸ் அதிகளவு இயங்கி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த தொழில் தொடங்குவதற்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், அதனால் எவ்வளவு வருமானம் வரும் என்பதை பற்றிய முழு விவரத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சிமெண்ட் ஏஜென்சி தொழில் செய்வது எப்படி..?
முதலில் எந்த சிமெண்ட் வாங்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். நம் நாட்டில் எத்தனையோ சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. அதில் எதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்த சிமெண்ட் உற்பத்தி தொழிலை துவங்க குறிப்பாக சிமெண்ட் விற்பனை டீலர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதையும் பாருங்கள் ⇒ குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!
ஆகவே இந்த தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், உங்கள் பகுதிகளில் உள்ள சிமெண்ட் விற்பனைக்கான டீலர்ஷிப் மற்றும் சிமெண்ட் விற்பனைக்கான உரிமையினை பெற முயற்சிக்க வேண்டும். அதாவது, சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனத்திடமிருந்து சிமெண்ட் விற்பனைக்காக உரிமையைப் பெற வேண்டும். அதை எப்படி பெறுவது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சிமெண்ட் உரிமை பெறுவது எப்படி:
நீங்கள் எந்த நிறுவனத்திடம் இருந்து சிமெண்ட் உரிமையை பெறுகிறீர்கள் என்ற விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நாம் எந்த நிறுவனத்திடம் இருந்து விற்பனை உரிமையை பெறுகிறீர்களோ அந்த நிறுவனத்தின் வியாபார நெறிமுறைகளுக்கு உட்பட்டு விற்க வேண்டும்.
நம் நாட்டில் உள்ள பொதுவான சிமெண்ட் நிறுவனத்தின் பெயர்கள் கீழே கொடுக்கபட்டுள்ளன. நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எதாவது ஒரு நிறுவனத்தின் உரிமையை பெற முயற்சி செய்யலாம்.
- ஜேகே (JK)
- ஏசிசி (ACC)
- அல்ட்ரா டெக் (Ultra Tech)
- பங்கூர் (Bangor)
- அம்புஜா (Ambuja)
- ரிலையன்ஸ் (Reliance)
- ஸ்ரீ அல்ட்ரா (Shree Ultra)
- ஜெய்பீ (Jaypee)
- டால்மியா (Dalmia)
இந்த சிமெண்ட்களில் 2 வகைகள் உள்ளன. அவை ஒன்று வெள்ளை நிறத்திலும் மற்றொன்று சாம்பல் நிறத்திலும் உள்ளன. உதாரணமாக ஜேகே (JK) சிமெண்ட் நிறுவனம் வெள்ளை மற்றும் சாம்பல் நிறச் சிமெண்ட்டிற்கெனத் தனித்தனியான விற்பனை உரிமையை வழங்குகின்றது.
63 ரீடைல் பிசினஸ் என்னென்ன தெரியுமா? |
சிமெண்ட் விற்பனை உரிமைகள் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்:
- சிமெண்ட் மூட்டைகளை வைத்து கொள்வதற்கு சரியான இடவசதி இருக்க வேண்டும்.
- சிமெண்ட் உற்பத்தி உரிமையை பெறுவதற்கு உங்களிடம் 500 சதுர அடி கொண்ட ஒரு கட்டடம் இருக்க வேண்டும்.
- அப்பொழுதுதான் நீங்கள் தயாரித்து வைத்துள்ள சிமெண்ட் மூட்டைகளை பாதுகாப்பாகச் சேமித்து வைக்க முடியும்.
- சிமெண்ட் டீலர்ஷிப் உரிமையை பெற நீங்கள் ரூ. 50,000/- முதல் ரூ. 5,00,000/- வரை காப்பீடு தொகையாக முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தை பொறுத்து இந்த தொகை மாறுபடும்.
- பொதுவாக இந்தக் காப்பீட்டுத் தொகையை சிமெண்ட் நிறுவனமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வட்டியுடன் உங்களுக்குத் திருப்பிச் செலுத்திவிடும்.
- விற்பனை உரிமையைப் பெற உங்கள் பகுதிக்கான சந்தை பிரிவின் செயல் அலுவலரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
- நீங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு சிமெண்ட் மூட்டைக்கும் குறைந்தது 8 முதல் 30 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2023 |