Consulting Business Ideas in Tamil
என்னதான் தொழில் தொடங்கலாம் என்று யோசித்து கொண்டு இருப்பீர்கள்..! சிலருக்கு யோசனை பெருசாக இருக்கும்..! இந்த தொழில் செய்தால் லாபம் கிடைக்கும். ஆனால் தொழில் தொடங்க முடியாது. அதேபோல் உங்களுக்கு மற்ற அனைத்து தொழில்களை பற்றியும் உங்களுக்கு தெளிவாக தெரியும்..! மற்றும் அனைத்து தொழில்களையும் எங்கு தொடங்கவேண்டும் எப்போது தொடங்கலாம் என்று தெரியும் என்றால் நீங்கள் வீட்டிலேயே ஆலோசனை மையம் தொடங்கலாம். வாங்க அதில் என்ன லாபம் என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்..!
Consulting Business Ideas in Tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
ஆலோசனை கொடுத்தால் எப்படி சம்பாதிக்க முடியும் என்று கேள்வி இருக்கும்..! பொதுவாக வேலை செய்பவர்களை விட சொந்தமாக என்ன தொழில் செய்யலாம் என்பவர்கள் தான் அதிகம். ஆகவே அவர்களுக்கு ஆலோசனை சொல்லும் விதமாக நீங்கள் இந்த தொழிலை தொடங்கலாம்..!
ஒரு தொழில் செய்தால் என்ன லாபம் கிடைக்கும், அந்த தொழிலில் எவ்வளவு லாபம் கிடைக்கும், எங்கு தொடங்கினால் லாபம் கிடைக்கும். எப்படி தொடங்குவது, ஒரு கடையாக இருந்தால் அதனை எப்படி மக்களிடம் பிரபலப்படுத்துவது. மக்களுக்கு எப்படி கடையின் மீது நம்பிக்கை வரவைப்பது என்று ஒரு கேள்வி இருக்கும். இது அனைத்திற்கு தெளிவாக புரிய வைத்து, அவர்களுக்கு சரியாக ஆலோசனை கொடுக்கலாம்.
ஆலோசனை:
அவர்கள் உங்களிடம் ஆலோசனை பெறுவதற்கு முன் அவர்கள் உங்களிடம் என்ன தொழிலை பற்றி ஆலோசனை பெற வந்திருக்கிறார் என்பதை பற்றி நீங்கள் அறிந்துகொண்டு அவர்களுக்கு அந்த வணிகத்தை பற்றி தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
அவர்களுக்கு நீங்கள் முக்கியமாக சொல்ல வேண்டியது அவர்கள் எந்த இடத்தில் தொழிலை தொடங்க வேண்டும், முதலில் அவர்கள் எந்த மாதிரியான மனநிலையில் இருக்க வேண்டும். அவர்கள் திறக்கும் கடைக்கு ஏற்ற முதலீட்டை சொன்னார்கள் என்றால் அதற்கேற்ற ஆலோசனை கொடுக்கவேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் நீங்கள் தொடங்கினால் என்னென்ன பார்ப்பீர்களோ அனைத்தையும் அவர்களுக்கு தெளிவாக சொல்ல வேண்டும்.
உங்களுக்கு முன் இந்த தொழிலை செய்பவர்கள் என்ன செய்கிறார்கள் எப்படி வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்வார்கள் என்பதையும், ஜிஎஸ்டி வரி அதனை எப்படி சரியாக பார்த்துக் கொள்வது லாபங்களை எப்படி அதிகப்படுத்துவது என்பதையும் மற்றும் பல நெளிவு சுளிவுகளை அவர்களுக்கு எடுத்துரைக்கவும்.
லாபம்:
மொத்தமான ஆலோசனை என்பதை அதிக நேரம் ஆகும். குறைப்பட்சமாக 1 மணி நேரத்திற்குள் ஆலோசனை வழங்கவேண்டும் என்றால் 1 மணி நேரத்திற்கு அவர்களிடம் நீங்கள் 1000 ரூபாய் வழங்கலாம்.
ஒரு சிலர் எந்த ஒரு விஷயத்தை பற்றியும் தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். அவர்களின் அதிக நேரம் செலவிட்டு அவர்களுக்கு அவர்கள் தொடங்க இருக்கும் வணிகத்தை பற்றி அனைத்து விஷயத்தையும் தெரியப்படுத்த வேண்டும். நாம் தொடங்கின இந்த ஆலோசனை மையத்திற்கு அப்போது தான் ஆலோசனை பெறுவதற்காக அதிக நபர்கள் வருவார்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 நீங்கள் எதுவும் யோசிக்காமல் நல்ல டிமாண்ட் உள்ள மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை இப்போதே செய்யலாம்..!
இதையும் படியுங்கள்⇒ இந்த தொழிலை நீங்கள் செய்தால் Product-ம் வீணாகாது தொழிலில் Loss-ம் வராது..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |