லாபகரமான தொழில்
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒரு தொழில் கண்டிப்பாக செய்ய வேண்டும். அதில் ஒன்று மற்றவர்களிடம் சென்று வேலை பார்ப்பது, மற்றொன்று சுயமாக வேலை செய்வது. இந்த இரண்டில் பெரும்பாலோனோர் விரும்புவது சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்று தான். சுயதொழிலே என்றும் அழியாத தொழில்கள் என இருக்கின்றன. இந்த அழியாத தொழில்களை செய்யும் பொழுது அதற்கான வருமானம் கண்டிப்பாக வரும். வாங்க என்ன தொழில் அதனை எப்படி செய்வது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
மாட்டு பண்ணை வளர்ப்பு:
கால்நடைகளை அதிகமாக கொண்டது இந்தியா தான். 75 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகளை கொண்டுள்ளது. அதனால் விவசாயம் சார்ந்த தொழில்களில் மாட்டு பண்ணை சிறந்த தொழிலாக இருக்கிறது. மாட்டு பண்ணை என்று சொன்னவுடன் அதிகமாக தான் மாடு வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. பால் கொடுக்கின்ற 1 மாட்டின் விலை தோராயமாக 35,000 ரூபாய். கன்றுக்குட்டி 10,000 ரூபாய்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
மாட்டு பால்:
பொதுவாக மனிதர்கள் காலையில் எழுந்ததும் டீ, காபி தான் குடிக்கிறார்கள். அதற்காக பசும் பாலை தான் அதிகம் விரும்புகின்றனர். அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம். ஒரு மாடு ஒரு நாளைக்கு 7 லிட்டர் பால் கொடுக்கிறது என்றால் அதை நீங்கள் டிப்போவிலும் போடலாம்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கேட்டாலும் கொடுக்கலாம். 1 லிட்டர் பாலின் விலை 40 ரூபாய், அப்போ 7 லிட்டர் பாலின் விலை 280 ரூபாய். வீட்டிலிருந்தே பாலின் மூலம் மாதத்திற்கு 8,400 ரூபாய் சம்பாதிக்கலாம். அதுவே மாட்டிற்கு தீவனங்கள் அதிகமாக வைத்தால் 7 லிட்டரை விட இன்னும் கொஞ்சம் அதிகமாகவே பால் கொடுக்கும்.
மாட்டு கோமியம்:
அடுத்து கோமியம், சாணம் போன்றவை விவசாயத்தில் உரங்களாகவும், மருத்துவத்திலும் பயன்படுகிறது.
கிரகப்பிரவேசம்:
அடுத்து வீட்டு கிரக பிரதேசம் என்றால் மாடு மட்டும் கன்றுக்குட்டி முக்கியமானது. இதற்கு நீங்கள் மாடு வைத்திருந்தால் கிரக பிரதேசத்திற்கு விட்டு அதிலிருந்து வருமானமும் பெற முடியும்.
இதையும் படியுங்கள் ⇒ இந்த தொழில் செய்ய ஓடவும் வேண்டாம்..! அலையவும் வேண்டாம்..! லாபம் உங்களை தேடி வரும்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |