சுயதொழில் துவங்க உதவும் மாவட்ட தொழில் மையம்..! (DIC loan details in tamil)..!

Advertisement

சுயதொழில் துவங்க உதவும் மாவட்ட தொழில் மையம்..! (Small business loan by government)..!

தொழில் தொடங்க கடன் உதவி:-

தொழில் தொடங்க கடன் உதவி / Small business loan by government:- படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக நிறுவனங்களை தேடி அலைவதை தவிர்க்க, அவர்கள் தனது சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற உதவும் நோக்கத்தில் அரசால் தொடங்கப்பட்டது தான் மாவட்ட தொழில் மையம்(DIC loan details in tamil).

இந்த மையங்களின் உதவியால் சுயதொழில் தொடக்கி முன்னேறியவர்கள் தமிழகத்தில் ஏராளம். தமிழகத்தில் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் பெருகி இருப்பதற்கு மாவட்ட தொழில் மையங்கள் (DIC loan details in tamil) முக்கிய காரணமாகும்.

இந்த மாவட்ட தொழில் மையம் படித்த இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம், தொழில் கடன் உதவி தொகையுடன் (Small business loan by government), கூடியப் பயிற்சிகளையும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சரி வாங்க தொழில் தொடங்க கடன் உதவி வழங்கும் மாவட்ட தொழில் மையத்தை பற்றி (DIC loan details in tamil) இந்த பதிவில் நாம் படித்தறிவோம்.

தொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம் முகவரி

தொழில் தொடங்க கடன் உதவி / Small business loan by government..!

மாவட்ட தொழில் மையத்தின் சிறப்பு (DIC loan details in tamil):

தொழில் தொடங்க கடன் உதவி / Small business loan by government:- பொது மேலாளர் தலைமையின் கீழ், இயங்கி வரும் மாவட்ட தொழில் மையமானது, புதிய தொழில் முனைவோருக்குத் தேவையானப் பயிற்சியை வழங்குவதோடு தொழில் ஆலோசனைகளையும் வழங்குகிறது. தொழில் வளர்ச்சியின் தேவைக்கேற்ப செயலாற்றி வருவது இம்மையத்தின் சிறப்பம்சம்.

எனவே தான் தொழிற்சாலைகளை நவீனப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்குமான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

வேலைவாய்ப்பினை அதிகப்படுத்துவது இம்மையத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று. இதன் மூலம், படித்த இளைஞர்கள் திசைமாறி செல்லாமல் வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கு வழிவகை செய்யப்படுகிறது.

படித்த இளைஞர் ஒருவர் மாவட்டத் தொழில் மையத்தை (DIC loan details in tamil) அணுகினால் தொழில் தொடங்க ஆலோசனை, திட்ட அறிக்கைகள் வழங்கப்படுவதோடு, உரிய பயிற்சிக்கும் வழிவகை செய்யப்படுகின்றன.

சுயதொழில் துவங்க உதவும் மாவட்ட தொழில் மையம்:- 

தொழில் தொடங்க கடன் உதவி / Small business loan by government:- சுய தொழில் செய்வதை ஊக்கப்படுத்தும் பணியை மாவட்டத் தொழில் மையங்கள் சிறப்பாக செய்து வருகின்றன.

அதேபோல கைவினைத் தொழில், குடிசைத் தொழில்களை ஊக்கப்படுத்துவதற்காக இத்தொழிலை, நிறுவனமாக பதிவு செய்கொள்ளும் வசதியையும் மாவட்டத் தொழில் மையம் ஏற்படுத்தி தந்துள்ளது.

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் பெற்றிட மாவட்டத் தொழில் மையம் (DIC loan details in tamil) ஏற்பாடு செய்கிறது.

தொழில் முனைவோர் கடன் (DIC loan details in tamil)- மானியம்:-

தொழில் தொடங்க கடன் உதவி / Small business loan by government:- தமிழக அரசின், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க வழங்கப்படும் வங்கிக் கடனில் 15% மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத் தொழில் மையம் (DIC loan details in tamil) உள்ளது. அந்தந்த மாவட்டத் தலைநகரத்தில் இம்மையம் அமைந்திருக்கும். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கும்.

மாவட்டத் தொழில் மையத்தின் முக்கியப் பணிகள்:

தொழில் தொடங்க கடன் உதவி / Small business loan by government:- தொழில் முனைவோர் கடன் வழங்குவதுண்டு. இந்த மையம் இணையதளம் மூலம் பதிவு செய்தல், தொழில் முனைவோருக்கு குறிப்பாணை வழங்குதல், குடிசைத் தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல், கைத்தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல், ஒற்றைச்சாளர முறையில் தொழில் முனைவோருக்கு சேவை அளித்தல்.

மேலும் ஊக்கத் திட்டங்களை செயல்படுத்துதல், உற்பத்தித் திறன் சான்றிதழ் அளித்தல், வங்கிகளில் கடன் பெறுவதற்கு தொழில் ஆதார அறிக்கை அளித்தல், ஏற்றுமதிக்கு வழிகாட்டுதல், சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல், தொழில் கூட்டுறவு சங்கங்களை ஒருங்கமைத்து பதிவு செய்தல் இப்படி ஏராளமான பணிகளை மேற்கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மாவட்டத் தொழில் மையத்தின் சேவைகளை படித்த வேலையில்லாத இளைஞர்கள் பயன்படுத்தி வாழ்வை வளப்படுத்திக் கொள்ளலாம்.

தொழில் தொடங்க கடன் உதவி – முத்ரா திட்டம்:

தொழில் முனைவோர் கடன்:- சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சிக்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதுதான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம். இது குறுந்தொழில் மேம்பாடு மற்றும் மறுநிதி நிறுவனம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும். இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டுக்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும்.

தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும்.

பத்து லட்சத்துக்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணைத் தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பொதுவுடைமை வங்கிகள், தேசிய வங்கிகள் மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்த கடன் வழங்கபடுகிறது.

தொழில் முனைவோருக்கு முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

சிறு தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி? Mudra loan details in tamil..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Siru Tholil Ideas in Tamil
Advertisement