நீங்களும் முதலாளி ஆக வேண்டுமா..! அப்போ 350 ரூபாய் முதலீட்டில் உள்ள இந்த தொழிலை செய்யுங்கள்..!

dried banana business in tamil

குறைந்த முதலீடு அதிக லாபம்

இன்னும் எத்தனை நாட்கள் தான் என்ன சுயதொழில் செய்வது என்று யோசித்து கொண்டே காலத்தை போக்க போகிறீர்கள். உங்களுடைய முதலாளியாக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி நீங்களும் 10 பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றால் கட்டாயமாக நீங்கள் சொந்தமாக ஏதாவது ஒரு சுயதொழிலை செய்து அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஆகவே உங்களுக்கு உதவும் வகையிலும்  நல்ல டிமாண்ட் உள்ள மற்றும் ஆரோக்கியத்தில் முதலிடத்தில் இருக்க கூடிய ஒரு சுயதொழிலை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த தொழிலை பற்றி விரிவாக மற்ற விவரங்களை பற்றி பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்வோம் வாங்க நண்பர்களே..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தினசரி வருமானம் தரும் தொழில்:

இன்று ஆரோக்கியத்திற்கும் மற்றும் நல்ல வருமானமும் தரக்கூடிய Dried Banana Business-ஐ பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

இந்த தொழிலை நீங்கள் செய்தால் போதும் விரைவில் நீங்களும் முதலாளியாக மாறி 10 பேருக்கு உங்கள் விருப்பம் போல வேலை கொடுக்கலாம்.

கற்பூரவள்ளி வாழைப்பழத்தில் அதிக பொட்டாசியம் மற்றும் குறைந்த கொழுப்பு சத்து இருப்பதால் இது ஒரு சிறந்த ஆரோக்கியமான உணவாக பயன்படுகிறது.

நீங்கள் இந்த Dried Banana-ஐ Department Store, பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, Wholesale கடை, மெடிக்கல் ஷாப் மற்றும் வாராந்திர சந்தை ஆகிய இடங்களில் நீங்கள் விற்பனை செய்யலாம்.

முதலீடு மற்றும் மூலப்பொருள்:

  • கற்பூரவள்ளி வாழைப்பழம்
  • Zip Lock Plastic Pouch

இந்த தொழிலை நீங்கள் செய்வதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள 2 மூலப்பொருட்கள் மட்டும் போதும். இந்த தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 350 ரூபாய் ஆகும்.

நீங்கள் இந்த தொழிலை தொடங்குவதற்கு முன்பு FSSAI லைசன்ஸ் கண்டிப்பாக பெற வேண்டும்.

தொழில் தொடங்க தேவையான இடம்:

Dried Banana Business-ஐ தொடங்குவதற்கு உங்களுக்கு வீட்டில் சிறிய பகுதியில் 10×10 இடம் மட்டும் தான் தேவைப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇 👇👇பெண்கள் வீட்டில் இருந்து மாதம் 20,000 சம்பாதிக்கலாம் இந்த தொழிலில்..!

How to Make Banana Dried Chips:

 how to make dried banana chips at home in tamil

முதலில் நீங்கள் நல்ல கற்பூரவள்ளி வாழைப்பழத்தை வாங்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை சிறு சிறு துண்டாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.

இப்போது நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத்தை 3 நாட்கள் வரை சுத்தமான இடத்தில் வெயிலில் காய வைத்து விட வேண்டும். ஈரப்பதம் இல்லாத அளவிற்கு வெயிலில் 3 அல்லது 4 நாட்கள் காய வைத்து எடுத்து வைத்து விடுங்கள். அவ்வளவு தான் Dried Banana தயார் ஆகிவிட்டது.

பேக்கிங் செய்தல்:

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள Dried Banana-ஐ 1/2 கிலோ மற்றும் 1 கிலோ Zip Lock Plastic Pouch-ல் நிரப்பி பேக்கிங் செய்து வைத்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

தோராயமாக 1 கிலோ Dried Banana-வின் விலை 400 ரூபாய் என்றும் 1/2 கிலோவின் விலை 200 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.

அதனால் ஒரு நாளைக்கு நீங்கள் 1 கிலோ பாக்கெட்டில் 10-ம் மற்றும் 1/2 கிலோ பாக்கெட்டில் 10-ம் தோராயமாக விற்பனை செய்தீர்கள் என்றால் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

இதுபோல நீங்கள் தொடர்ந்து விற்பனை செய்தால் ஒரு வாரத்திற்கு 42,000 ரூபாய் வரை தோராயமாக வருமானம் பெறலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil