தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்க யோசிக்காமல் இந்த தொழிலை தொடங்குங்கள்..! | Early Business Ideas in Tamil
உங்களின் அன்பை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக்கொடுக்கும் அன்பு நெஞ்சகளுக்கு பொதுநலம்.காம் மின் அன்பு வணக்கங்கள். மாத தொடக்கத்தில் விறுவிறுப்பாக வேலைக்கு செல்லுவீர்கள் அல்லவா..? ஆனால் அதே மாத கடைசியில் அந்த வேகம் இருக்காது. காரணம் மாத கடைசி என்றால் அனைவருக்கும் தெரியும் கையில் காசு தட்டுப்பாடாக இருக்கும். ஒரே வேலையையும் அதன் சம்பளத்தையும் நம்பி இருந்தால் எப்படி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும்..? ஒரு சிலர் நினைப்பீர்கள் இந்த வேலைக்கு சென்று விட்டு எப்படி இன்னொரு வேலைக்கு செல்ல முடியும் என்று? அப்படி எந்த வேலை கிடைக்கும் என்று கேள்வி கேட்டுக்கொண்டு இந்த பதிவை படிப்பீர்கள் கண்டிப்பாக..!
நீங்கள் வேலையை தேட வேண்டாம் நீங்களே முதலியாக ஆக முடியும்..! அதுவும் காலையில் ஒரு மணி நேரத்தில் மட்டும் 1000 ரூபாய் இல்லையென்றால் அதற்கு மேலும் சம்பாதிக்கலாம்..! எப்படி என்ன தொழிலாக இருக்கும் என்று யோசிக்காமல் தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கு ஏற்ற வகையில் தொழில்களை பொதுநலம்.காம் பதிவில் பதிவிட்டு வருகிறோம் அதனை படித்து தொழிலாளியாக மட்டுமில்லாமல் முதலாளியாக மாறுங்கள்..! வாங்க இப்போது பதிவுகளை படித்து தெரிந்துகொள்வோம்..!
Tender Coconut Business Idea in Tamil:
- இளநீர் கடை இளநீர் கடையில் எப்படி காலையில் 1000 சம்பாதிக்க முடியும் என்று யோசிப்பீர்கள்? ஆனால் இந்த தொழில் உள்ள ரகசியங்களை அறிந்து செயல் பட்டால் நீங்களும் ஒரு மணி நேரத்தில் 1000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
- ஒரு நாளுக்கு 50 இளநீர் எடுத்து முதலீடு செய்தால் என்ன வருமானம் தெரியுமா வாங்க அதனை பார்ப்போம்.
- ஒரு இளநீர் விலை 30 என்ற கணக்கில் அதனை விற்றால் 10 இளநீருக்கு 300 ரூபாய் கிடைக்கும். அதே ஒரு நாளுக்கு 50 இளநீர் விற்றால் எவ்வளவு 1500 ரூபாய் கிடைக்கும்.
- அது எப்படி ஒரு மணி நேரத்தில் 50 இளநீர் விற்க முடியும் அவ்வளவு கூட்டம் எங்கு வரும்? அந்த கடையை நீங்கள் பூங்கா, கடற்கரை, கோவில் என்ற இடங்களில் தொடங்குங்கள். காரணம் பூங்கா என்றால் அங்கு தான் உடற் பயிற்சி செய்வார்கள் அவர்கள் காலையில் உடலுக்கு சத்தான உணவுககளை சாப்பிடுவார்கள். அது மட்டுமில்லாமல் இது போன்ற இடங்களுக்கு தான் கூட்டங்கள் அதிகபட்சம் வருவார்கள். உங்களின் இளநீர் கடையை அங்கு தொடங்கினால் கண்டிப்பாக 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
- இளநீர் கடையை தொடங்கினால் உங்களின் தரத்தை கொண்டும் கூட்டங்கள் வரும். அது மட்டுமில்லாமல் இந்த கோடைகாலத்தில் இளநீர் என்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி குடிக்க ஆரம்பிப்பார்கள். அதனால் கண்டிப்பாக நஷ்டத்தை அடைய வாய்ப்பு இல்லை.
மீன் கடை வியாபாரம்:
- மீன் கடை வைக்கணுமா என்று யோசிக்காதீர்கள். இதில் கிடைக்கும் லாபங்கள் தெரிந்தால் முழு நேரமாக இந்த தொழிலை செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். அந்த அளவிற்கு லாபத்தை அடைய முடியும்.
- ஒரு கிலோ மீன் விலை 150 ரூபாய் என்ற கணக்கில் விற்றால் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரத்தில் 1,50 0ரூபாய் சம்பாதிக்கலாம்.
- அதெல்லாம் சரி இதில் எவ்வளவு லாபம் கிடைக்க போகிறது என்றால் மீன் பண்ணை நேரில் சென்று தினம் தோறும் கீலோ கணக்கில் மீனை வாங்கி விற்றால் அதனை வாங்குவது மிகவும் குறைந்த விலையில் தான் இருக்கும்.
- நாட்டு மீன் விற்கலாமா? இல்லை கடல் மீன் விற்கலாமா என்றால்? இந்த இரண்டில் எதனை வாங்கி விற்றாலும் லாபம் பெறலாம். நீங்கள் கடையை எங்கு வைக்கிறீர்களோ அந்த பகுதியை சுற்றி உள்ளவர்கள் எந்த மீனை விருப்பவர்கள் என்ற அடிப்படையில் மீன் கடை தொழிலை தொடங்குங்கள்.
- மீன்கள் என்றாலே அதிகபட்சமாக விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. அது மட்டுமில்லாமல். பொருளாதார அடிப்படியில் இதை தான் அனைவரும் நாடுவார்கள். உங்களின் தனித்தன்மையை செயல்படுத்தி தொழிலை செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் வாடியாளர்கள் அனைவரும் இத்தனை மணிக்கு இந்த இடத்திற்கு சென்று மீன் வாங்கினால் நன்றாக இருக்கும் என்ற அளவிற்கு வியாபாரத்தின் நோக்கத்தை கற்று செயல்படுத்தலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Siru Tholil Ideas in Tamil 2022 |