எளிமையாக பணம் சம்பாதிக்க சூப்பரான தொழில் | Easy Business Ideas in Tamil

Easy Business Ideas in Tamil

குறைந்த முதலீட்டில் என்ன தொழில் | Easy Business Ideas in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய வியாபாரம் பகுதியில் எல்லோராலும் சம்பாதிக்க கூடிய எளிமையான தொழில் பற்றி பார்க்கலாம். இன்றைய சூழலில் அனைத்து சாமானிய மனிதருக்கும் இருக்ககூடிய ஒரு மிகப்பெரிய ஆசை என்னவென்றால் ஒரு சிறு தொழில் தொடங்கி அதில் எப்படி வெற்றி பெறுவது என்பதுதான். தொழில் தொடங்குவதற்கு முதலீடு எவ்வளவு முக்கியமோ அதே போன்று, நம்முடைய ஆர்வமும் முக்கியம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். மிகவும் குறைவான தொகையை வைத்து மிகப்பெரிய லாபத்தை தரும் ஒரு தொழிலை பற்றி இந்த பதிவில் காண்போம் வாங்க.

Easy Business Ideas in Tamil:

profitable business ideas in tamil

 • குறைவான முதலீட்டில் தொழில் ஆரம்பித்து நிறைய லாபம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இப்போது சொல்ல போகும் தொழில் உதவியாக இருக்கும். பயிறு வகைகளை நாம் அதிகமாக சமையலுக்கு உபயோகப்படுத்துவோம், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் பயிர்களின் தேவை இருந்து கொண்டே இருக்கும்.
 • மேலும் சந்தையில் இதன் மதிப்பு அதிகமாக இருக்கும், மக்களுக்கு எப்போதும் உபயோகப்படும் பொருள் என்பதால் இதனுடைய demand எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
 • பயிறு வகைகளை விற்பனை செய்வது தான் இந்த தொழில்.

முதலீடு:

எளிமையான தொழில்

 • இந்த தொழிலை தொடங்குவதற்கு முதலீடு Shop Advance, லைசென்ஸ் வாங்குவதற்கான முதலீடு, பயிர்கள் வாங்குவதற்கான முதலீடு என குறைந்தது 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை தேவைப்படும்.
 • முதலீடு அதிகம் என நினைப்பவர்கள் Government பல நிதியுதவி திட்டம் கொண்டு வந்துள்ளது அதை வைத்து நீங்கள் தொழில் தொடங்கலாம்.
 • உங்களிடம் ஏற்கனவே கடை இருந்தால் மிகவும் நல்லது அதிலேயே இந்த தொழிலை நீங்கள் தொடங்கலாம்.
 • கடை இல்லாதவர்கள் வாடகைக்கு கடை வாங்கி செய்யலாம், இதை விட மிகவும் முக்கியமான விஷயம் நீங்கள் எங்கு கடை வைக்க பொகிறிர்கள் என்பதுதான். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடம் அல்லது உங்கள் தொழிலுக்கு போட்டி இல்லாத இடத்தில் இந்த தொழிலை துவங்கலாம்.

ஆவணங்கள்:

profitable business ideas in tamil

 • Profitable Business Ideas in Tamil: இந்த தொழிலை செய்வதற்கு உங்களுக்கு GST Number தேவைப்படும். இதை நீங்கள் ஒரு ஆடிட்டர் வைத்தும் வாங்கி கொள்ளலாம். உடைக்கபடாத பருப்பு வகைகளுக்கு GST கிடையாது.
 • நீங்கள் ஒரு Brand Create செய்து பருப்புகளை விற்பனை செய்ய பொகிறிர்கள் என்றால் உங்களுக்கு GST 5% வரை ஆகும். உண்ணக்கூடிய உணவு பொருள் என்பதால் இதற்கு நீங்கள் fssai மற்றும் Trade லைசன்ஸ் வாங்க வேண்டும்.
 • பருப்பு வகைகளை நீங்கள் விவசாய மக்களிடம் இருந்து அல்லது indiamart, justdial போன்ற வலைதளங்களில் வாங்கி கொள்ளலாம்.
 • மொத்த விற்பனையாளரிடம் இருந்தும் நீங்கள் இதை வாங்கி கொள்ளலாம். நீங்கள் யாரிடம் வாங்க போவதாக இருந்தாலும் பொருளின் தரத்தையும், நிறுவனத்தை பற்றியும் தெரிந்து வைத்து கொள்வது மிகவும் முக்கியம்.

மார்க்கெட்டிங்:

எளிமையான தொழில்

 • எளிமையான தொழில்: எந்த தொழிலாக இருந்தாலும் அதற்கு மார்க்கெட்டிங் மிகவும் முக்கியம். எனவே நீங்கள் லோக்கல் சேனல் அல்லது Banner போன்றவற்றை பயன்படுத்தி மார்க்கெட்டிங் செய்யுங்கள்.
 • இணையதளத்தை பயன்படுத்தியும் நீங்கள் உங்கள் தொழிலை விளம்பரபடுத்தலாம்.
 • இந்த தொழிலை Offline-ல் மட்டுமல்ல ஆன்லைனிலும் செய்யலாம். அமேசான், Flipkart போன்றவற்றில் அல்லது நீங்களே ஒரு website create செய்து விற்பனை செய்ய முடியும்.

லாபம்:

 easy business ideas in tamil

 • இந்த தொழிலை பொறுத்தவரை நீங்கள் உங்கள் கடையை எங்கு வைத்திருக்கிறிர்கள் மற்றும் நீங்கள் செய்யும் மார்க்கெட்டிங் பொறுத்து லாபம் கிடைக்கும்.
வீட்டில் கொஞ்சம் இடம் 1000 ரூபாய் முதலீடு மாதம் 40,000/- சம்பாதிக்கலாம்..! அருமையானது தொழில்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022