விழா மேடை அலங்காரம் | Event Decoration Business Ideas in Tamil
என்ன தொழில் தொடங்கலாம் என்று குழப்பமாக இருக்கும். படித்து முடித்தால் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் வீட்டிலும் கேட்பது அடுத்து என்ன வேலைக்கு செல்ல போகிறாய் என்பது தான். ஒரு சிலருக்கு ஒருவருக்கு கீழ் வேலை பார்ப்பது பிடிக்காது. ஒரு சிலருக்கு தனியாக தொழில் தொடங்கலாம் என்று யோசனை இருக்கும் ஆனால் பணம் தேவை அதிகம் இருக்கும்.
என்ன தொழிலாக இருந்தாலும் அதனை துணிந்து செய்யுங்கள் லாபம் கிடைக்கும். மேலும் என்ன தொழில் தொடக்கலாம் என்று யோசிப்பவர்களுக்கு இன்றைய பதிவில் சூப்பரான ஐடியா இருக்கும் வாங்க அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Event Decoration Business Ideas in Tamil:
இந்த தொழிலை ஆண்கள் முதல் பெண்கள் வரை இருவருமே செய்யலாம். இதற்கு படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிறைய வித்தியாசமான கலை திறமைகள் இருந்தால் போதுமானது.
இப்போது அதிக தேவை உள்ள தொழில் என்றால் மேடை அலங்காரம் தான். இதற்கு நிறைய மவுஸ் உள்ளது. ஒரு விழாவிற்கு நாம் அலங்காரம் செய்ய போகிறோம் என்றால் அதற்கு Decoration செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் நாமே வாங்கிக் கொள்ளலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=>ஆண்டு முழுவதும் லாபம் தரக்கூடிய தொழில் உடனே இதனை தொடங்குங்கள்..!
முதலீடு:
இதற்கு தனி தனியாக முதலீடு தேவையில்லை. இதற்கு வருடத்திற்கு ஒரு முறை உங்களின் பொருட்களில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் மட்டுமே நீங்கள் அந்த பொருட்கள் வாங்குவது போல் இருக்கும். ஆகவே இதற்கு இடையில் எந்த முதலீடும் தேவை இருக்காது.
1 லட்சம் வரை முதலீடு இருக்கும்
- Colourful lights
- Streamers
- Banners
- Confetti
- Ribbon
- Party popper
- Balloons
- decoration cloth
- fabric
இது மட்டுமில்லமல் நிறைய பொருட்கள் உள்ளது அது அனைத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும். பலூன் விழாவிற்கு செல்லும் போது வாங்க வேண்டும். பூக்கள் என நிறைய உள்ளது அனைத்தையும் வாங்கிக் கொள்ளவும்.
நீங்கள் ஒரு கல்யாண ஆர்டர் எடுத்தால் அதில் நிறைய விதமான கலை அலங்காரத்தையும் செய்யவும். அதன் பின் பெண் மேடைக்கு வரும் போது எப்படி அழைப்பு இருக்க வேண்டும். அதேபோல் மாப்பிளை வரும் போது எப்படி அழைத்து வர வேண்டும் என்பதையும் வித்தியமாக செய்யவேண்டும்.
இதுபோல் ஒரு திருமணதிற்கு செய்தால் மற்ற கல்யாணத்திற்கு ஆர்டர் தேடி வரும் அந்தளவிற்கு உங்கள் கலை அலங்காரம் இருக்கவேண்டும்.
திருமணத்திற்கு மட்டுமில்லாமல் பிறந்த நாள், நிச்சயதார்த்தம் என எந்த விழாக்கள் இருந்தாலும் அதனை வித்தியாசமாக செய்ய வேண்டும். ஏனென்றால் விழாக்களில் முக்கியமாக நல்லா இருக்க வேண்டியது முன்பு உணவாக இருந்தது. இப்போது அப்படி இல்லை முதலில் பார்ப்பது போட்டோ எடுப்பது தான் அதற்கு மேடை அலங்காரம் முக்கியமானது. ஆகவே அதனை சிறப்பாக செய்வது உங்கள் கடமை ஆகும்.
லாபம்:
ஒவ்வொரு விழாவிற்கும் ஒவ்வொரு விதமான லாபம் கிடைக்கும். அதற்கு அதிகளவு லாபம் கிடைப்பது 20,000 மேல் தான் இருக்கும். ஒரு ஆர்டர் எடுத்தால் நிச்சம் அது 1 லட்சத்திற்கு மேல் இருக்கும். ஆகவே ஒவ்வொரு விழாவிற்கு ஒவ்வொரு விதமான லாபம் கிடைக்கும்.
இதையும் தொடங்குங்கள் 👉👉 காலப்போக்கில் Factory ஆரம்பித்து நடத்தக்கூடிய அளவிற்கு வருமானம் தரக்கூடிய தொழில்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |