குறைவாக முதலீடு செய்தால் போதும் தினமும் அதிகளவு லாபம் பெறலாம்..!

fertilizer shop business ideas in tamil

லாபம் தரக்கூடிய சிறந்த தொழில்கள்..!

வணக்கம் நண்பர்களே… இன்றைய பதிவில் அனைவருக்கும் பயன்படக் கூடிய அனைவரும் வாழ்வில் முன்னேறுவதற்கான சிறந்த தொழில் ஒன்றை பற்றி தான் பார்க்கப்போகிறோம். நம் வாழ்வில் முன்னேறுவதற்கு எத்தனையோ தொழில்கள் உள்ளன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் உரக்கடை பிசினஸ் தொடங்குவது எப்படி என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த பதிவின் மூலம் உரக்கடை பிசினஸ் தொடங்குவது எப்படி..? எவ்வளவு முதலீடு செய்யவேண்டும். இதனால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற முழு விவரங்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்

உரக்கடை பிசினஸ் தொடங்குவது எப்படி..? 

இந்த உரக்கடை பிசினஸ் என்றாலே நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் இது ஒரு விவசாயத்தை சார்ந்த தொழில் என்று. இன்று விவசாயம் இல்லையென்றால் நாம் இல்லை. விவசாயம் என்பது நம் வாழ்வில் முக்கியமான ஓன்று. அதுபோல விவசாயத்திற்கு தேவையான பொருட்களின் மூலம் தொழில் தொடங்குவதால் நல்ல லாபத்தையும் வருமானத்தையும் பெற முடியும்.

தொழில் தொடங்க வேண்டும் என்ற உடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் தான். எப்படி பணம் புரட்டுவது, எவ்வளவு முதலீடு செய்வது என்று பல குழப்பங்கள் இருக்கும். ஆனால் இந்த தொழில் செய்வதற்கு குறைந்த முதலீடு செய்தால் போதும் அதிகளவு வருமானம் பெற முடியும். இது ஒரு சிறந்த தொழிலும் கூட. இந்த உரக்கடை தொழில் தொடங்கி எப்படி முன்னேறுவது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

உரக்கடை பிசினஸ்  எப்படி தொடங்குவது..? 

  1. இந்த உரக்கடை பிசினஸ் தொடங்குவதற்கு விவசாயத்தை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். விவசாயத்தை பற்றி நன்றாக தெரிந்திருந்தால் மட்டும் தான் உரக்கடை தொடங்குவதற்கான உரிமம் (Licence) பெற முடியும்.
  2. அதற்கு பின் உங்களுக்கு என்னென்ன பொருள் எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
நீங்களும் வாழ்வில் முன்னேற அருமையான தொழில்..!

உரக்கடை தொடங்குவதற்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்: 

உரக்கடை பிசினஸ் தொடங்குவதற்கு மொத்தமாக 3 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் வாங்கும் பொருட்கள், கடை போன்று எல்லாவற்றையும் சேர்த்து 3 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும்.

உரக்கடை தொடங்குவதற்கான உரிமம் பெறுவது எப்படி..? 

முதலில் நீங்கள் உரக்கடை தொடங்குவதற்கான உரிமம் பெற வேண்டும். இந்த உரிமம் பெறுவதற்கு  JDA ( Joint Director of Agriculture ) அலுவலகத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் (Assistant Director of Agriculture) மற்றும் வேளாண் அதிகாரி (Agriculture Officer) இவர்களிடம் உரக்கடை தொடங்குவதற்கான உரிமத்தை பெற்றிருக்க வேண்டும்.

உரக்கடை தொடங்குவதற்கு என்ன தேவை: 

  • உரக்கடை தொடங்குவதற்கு 2000 சதுர அடியில்  ஒரு கடை அல்லது குடோன் இருக்க வேண்டும்.
  • யூரியா, நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் பூச்சி கொல்லிகள் உரங்கள் போன்ற பொருட்களை வாங்க வேண்டும்.

வருமானம் எவ்வளவு:

இந்த உரக்கடை தொழில் தொடங்குவதால்  நீங்கள் மாதம் ரூ. 30,000 /- முதல் ரூ. 50,000 /- வரை வருமானம் பெறலாம். இந்த தொழில் தொடங்கி நீங்களும்  வாழ்வில் முன்னேறலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022