தினமும் 2 மணி நேரம் வேலை செய்தால் மாதம் 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்

Advertisement

சுயதொழில் என்ன செய்யலாம்

சுயதொழில் செய்ய வேண்டும் நினைக்கும் நண்பர்களுக்கு வணக்கம்..! சுயதொழில் தொடங்கி வாழ்வில் முன்னேறியவர்கள் நிறைய நபர்கள் இருக்கின்றனர். சுய தொழில் தொடங்கினால் முதலீடு அதிகம் செய்ய வேண்டியிருக்கோமோ என்று பயம் அடையாதீர்கள். இந்த பதிவை முழுமையாக படியுங்கள். முழுமையாக படித்தால் தான் உங்களுக்கே ஒரு ஐடியா வரும். குறைந்த முதலீட்டில் அதிகம் வருமானம் தரும் பதிவுகளை தினமும் பதிவிட்டுக்கொண்டு இருக்கிறோம். அந்த தொழில்களை பற்றி தெரிந்துகொள்ள கடைசியாக ஒரு அட்டவணை கொடுத்திருப்போம் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள். சரி வாங்க தினமும் 2 மணி நேரம் வேலை பார்த்தால் மாதம் 15,000 சம்பாதிக்கும் தொழிலை பற்றி தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ மக்களிடையே எப்பொழுதும் Demand இருக்கும் தொழில்கள்

பூக்கள் தொழில் செய்வது எப்படி.?

வீட்டு விசேஷங்கள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் நம் வீட்டில் எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் தேவைப்படுகின்ற ஒன்று பூ. பூ இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடக்காது. நம் சொந்தக்காரர் வீட்டுக்கு போனால் கூட பூ வாங்காமல் போக மாட்டோம். எப்பொழுதும் பூவுக்கு Demand இருந்துகொண்டே தான் இருக்கும். அதனால் இந்த தொழிலை யோசிக்காமல் தொடங்கலாம். பூ தொழிலை இரண்டு விதமாக தொடங்கலாம். அதில் ஒன்று பூ உதிரியாக விற்பது, மற்றொன்று பூவை கட்டி விற்பது என இரு முறைகளாக தொடங்கலாம்.

முதலில் பூவை மொத்த இடத்தில் வாங்கி கொள்ள வேண்டும். அதாவது பூ சந்தைகள் அல்லது பூவை மொத்தமாக கிடைக்க கூடிய இடத்தில் வாங்கி கொள்ள வேண்டும். இது போன்ற இடங்களில் பூவின் விலை குறைவாக இருக்கும்.

பூவை கட்ட தெரிந்தால் நீங்கள் பூவை கட்டி விற்கலாம். நீங்கள் பூ எவ்வளவு கட்டுகிறீர்களோ அதை பொறுத்து உங்களுக்கு வருமானம் கிடைக்கும். தினமும் நீங்கள் முழு நேரமாக பார்க்க தேவையில்லை.

உதிரி பூ தொழில் செய்வது எப்படி.?

உதிரி பூ விற்பதற்கு தனியாக ஒரு இடம் தேவையில்லை. வீட்டில் இருந்து கொண்டே விற்கலாம். பூவை மொத்தமாக கிடைக்கூடிய இடத்தில் வாங்கி வந்து விற்கலாம். நீங்கள் பூ எவ்வளவுக்கு விற்கிறீர்களோ அதை பொறுத்து வருமானம் கிடைக்கும்.

வருமானம் எப்படி.?

நீங்கள் Free-ஆ இருக்கும் நேரங்களில் ஒரு 2 மணி நேரம் செலவிட்டால் போதுமானது. நீங்கள் பூவை கட்டுவதற்கு தனியாக ஒரு இடம் தேவையில்லை உங்களின் வீடே போதுமானது. தோராயமாக நீங்கள் தினமும் பூ கட்டுவதினால் குறைந்தது 500 ரூபாய் சம்பாதிக்கலாம். தினமும் 500 என்றால் மாதம் 15,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

நீங்கள் பூவை கட்டி கடைகளிலும் கொடுத்து விற்க சொல்லலாம். மற்ற கடைகளில் கொடுத்து விற்க சொன்னால் அதற்கான கமிஷன் அவர்ளுக்கு கொடுக்க வேண்டியிருக்கும். நீங்களே மெயின் ஆக உள்ள இடத்தில் கடை போட்டு விற்றால் அதில் அதிக வருமானத்தை பெற முடியும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement