Fruits Wholesale Business
இந்த உலகத்தில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு தேவைக்காக மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அதன் படி பார்க்கும் ஒவ்வொருவற்கும் ஏதோ ஒரு வகையான தேவை இருப்பது தெரிய வருகிறது. இத்தகைய தேவையினை பூர்த்தி செய்து கொள்வதற்கு அடித்தளமாக இருப்பது என்னவோ பணம் தான். பணம் என்பது அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும் கூட அத்தகைய பணத்தினை நாம் யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து விடாமல். அதாவது உங்களுக்கான பணத்தினை பெறுவதற்கு சொந்தமாக ஒரு சுயதொழில் ஆரம்பிப்பது மூலம் அதில் கைநிறைய சம்பாதிக்கலாம். மேலும் இந்த சுயதொழில் மூலம் நீங்களும் முதலாளி ஆகலாம் மற்றும் 4 பேருக்கு வேலையும் கொடுக்கலாம். அந்த வகையில் இன்று Wholesale தொழிலில் ஒன்றை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
பழக்கடை தொழில்:
நாம் என்ன தான் ஒரு நாளைக்கு நிறைய பொருட்களை பயன்படுத்தினாலும் கூட அதில் சில பொருட்கள் என்பது குறிப்பிட்ட காலம் மற்றும் வருடத்தில் இல்லாமலோ அல்லது தடை செய்யப்பட்டோ விடுகிறது.
ஆனால் எக்காலத்திலும் அழிவில்லாத ஒன்றாகவும், டிமாண்ட் உள்ள ஒரு தொழிலாகவும் இருக்ககூடிய பொருட்களில் பழங்களும் ஒன்று. அதனால் இன்று பழக்கடை தொழிலை எப்படி மொத்த வியாபாரமாக செய்வது பற்றி தான் விரிவாக கீழே தெரிந்துக்கொள்ள போகிறோம்.
மூலப்பொருள்:
பழக்கடை தொழிலிற்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் அனைத்து விதமான பழங்களும் மிகவும் முக்கியம்.
அதேபோல் கடைக்கு ஒரு பிரிட்ஜ் வாங்கி கொள்ள வேண்டும்.
முதலீடு:
இந்த தொழிலை செய்வதற்கு ஆரம்ப கால முதலீடாக 1 லட்சம் ரூபாய் கையில் வைத்து கொள்ள வேண்டும்.
இடம்:
நீங்கள் இந்த தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்றால் ஒரு பெரிய அளவிலான இடம் மின்சார வசதியுடன் அதுவும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.
Businees Ideas👇👇 பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..
பழக்கடை தொழில் செய்வது எப்படி..?
- முதலில் நீங்கள் மொத்த வியாபாரத்தில் பழங்களை வாங்கி கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களுடைய ஊரினை சுற்றி உள்ள பழக்கடைகளுக்கு தேவையான பழங்கள் என்னென்ன என்றும், அதில் எத்தனை கிலோ என்றும் தெளிவாக ஆர்டர் எடுத்து கொள்ள வேண்டும்.
- இவ்வாறு செய்த பிறகு பழங்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்யலாம். மேலும் ஆன்லைன் மூலமாகவும் இந்த தொழில் விற்பனை செய்யலாம்.
- மேலும் பெரிய மற்றும் சிறிய பழக்கடை, ரெஸ்டாரெண்ட், ஹோட்டல் இதுபோன்ற இடங்களிலும் ஆர்டர் எடுத்து விற்பனை செய்யாலாம்.
- அதேபோல் உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என இவர்கள் வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்கு மொத்த விலையில் வாங்கி கொடுத்து வருமானம் பெறலாம்.
வருமானம் மற்றும் லாபம்:
- இத்தொழிலை பொறுத்தவரை நீங்கள் வாங்கும் பழங்களின் விலை மற்றும் கிலோவினை பொறுத்து தான் வாங்க முடியும். ஆகையால் ஒரு மாதத்திற்கு தோராயமாக 30,000 ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.
- மேலும் லாபம் என்பது நீங்கள் மொத்த விலையில் வாங்கும் அங்கு உங்களுக்கு குறைவான விலையில் பழங்களை கொடுப்பார்கள். அதுவே நீங்கள் அந்த பழங்களை கடைகளில் கொடுப்பதன் மூலம் கொஞ்சம் விலையினை அதிகரித்து விற்பனை செய்யாலாம். இந்த இரண்டினையும் ஒப்பிட்டு பார்க்கும் போது வாங்கும் பழங்களின் கிலோவிற்கு ஏற்றவாறு லாபம் பெறலாம்.
Businees Ideas👇👇 இந்த தொழில் செய்தால் அனைத்து தொழிலுக்கும் லாபம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |