Furniture Store Business in Tamil
இன்றைய பதிவில் அனைவரும் வாழ்வில் முன்னேற வேண்டிய ஒரு சிறந்த தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் ஆண் பெண் இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். ஒரு குடும்பத்தில் இருக்கும் இருவரும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும். அதுபோல சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது அனைவரின் ஆசையாகவும் இருக்கிறது. அப்படி சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How To Start Furniture Store Business in Tamil:
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த தொழில் சிறந்ததாக இருக்கும். நீங்கள் வாழ்க்கையில் சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்று நினைத்தால் பர்னிச்சர் ஸ்டோர் உங்களுக்கு சிறந்த வணிகமாக இருக்கும்.
சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது எப்படி பலரது கனவாக இருக்கிறதோ, அதேபோல வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டும் என்பதும் பலரின் ஆசையாக இருக்கிறது. அதனால் நீங்கள் இந்த பர்னிச்சர் ஸ்டோர் வணிகத்தை எந்தவொரு தயக்கமும் இல்லாமல் தாராளமாக தொடங்கலாம்.
முதலீடு:
நீங்கள் தொடங்கும் கடைக்கு பீரோ, கட்டில், மரச்சாமான்கள் போன்ற பொருட்களின் செலவு, உங்கள் கடை வாடகை கடையாக இருந்தால் அந்த கடையின் செலவு மற்றும் மற்ற செலவுகள் போன்றவற்றை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். இவற்றை கணக்கில் கொண்டால் 5 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
முதலீடு குறைவாக இருந்தால் போதும் மாதம் மாதம் நல்ல லாபம் கிடைக்கும்..! |
பர்னிச்சர் கடை தொடங்குவது எப்படி..?
முதலில் நீங்கள் ஒரு கடையை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் கடை பர்னிச்சர் பொருட்கள் வைப்பதற்கு சரியானதாக இருக்க வேண்டும். நீங்கள் தொடங்கும் இந்த பர்னிச்சர் கடையை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அப்போது தான் மக்கள் உங்கள் கடையை கண்டறிவார்கள். நீங்கள் விற்கும் பொருட்கள் நல்ல தரம் வாய்ந்ததாகவும் நீடித்து உழைக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். அதனால் நீங்கள் தரமான பொருட்களை தேர்ந்தெடுங்கள்.
வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கட்டாயம் உங்கள் கடையை நாடி வருவார்கள். இதன் மூலம் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மேலும் பொருட்களை டோர் டெலிவரியும் செய்யலாம். இதனால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
அதுபோல இந்த பர்னிச்சர் கடையை திறப்பதற்கு அரசு மற்றும் உள்ளூர் குடிமை அமைப்புகளிடமிருந்து சில உரிமங்கள் பெற வேண்டும். பர்னிச்சர் கடை தொடங்குவதற்கு நீங்கள் வணிக உரிமம் பெற வேண்டும். அதுபோல பர்னிச்சர் கடை தொடங்குவதற்கு முன், நீங்கள் பல்வேறு மாநில மற்றும் கூட்டாட்சி வரிகளுக்குப் பதிவு செய்ய வேண்டும்.
இதுபோன்ற முறைகளை பின் பற்றி நீங்கள் பர்னிச்சர் கடையை தாராளமாக தொடங்கலாம். இதனால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
இப்போதே இந்த தொழிலை தொடங்கினால் மாதம் மாதம் 50,000 ருபாய் வரை சம்பாதிக்கலாம்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |