1000 ரூபாய் முதலீட்டில் ஒரு நாளுக்கு 3000 ரூபாய் லாபம் தரும் புதிய தொழில்..! அதுவும் வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் இந்த தொழில் செய்யலாம்..!

Green Chilli Powder Business in Tamil

எந்த விதமான Machine தேவையில்லை நீங்கள் சும்மா இருக்கும் நேரத்தில் இந்த தொழில் செய்யலாம் | Green Chilli Powder Making  Business in Tamil

வணக்கம் நண்பர்களே..! புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.. இன்றைய பதிவில் வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் வெறும் 1000 ரூபாய் முதலீட்டில் செய்யக்கூடிய ஒரு அருமையான தொழில் பற்றி தான் பார்க்க போகோரோம். அதுவும் இந்த தொழில் தொடங்க எந்த விதமான இயந்திரங்களும் தேவைப்படாது..  அப்படி என்ன தொழில் என்று தானே யோசிக்கிறீங்க.. அப்படின்னா இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.. சரி வாங்க என்ன தொழில் என்று பார்க்கலாம்..

Green Chilli Powder Business in Tamil:

Green Chilli Powder-ஐ வீட்டிலேயே தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். பலர் Red Chilli Powder-ஐ மட்டும் தான் கேள்விப்பட்டிருப்பீங்க.. Green Chilli Powder-ஐ  கேள்விப்பட்டிருக்க மாட்டாங்க. இந்த Green Chilli Powder-ம் சந்தைகளில் அதிகளவு தேவைப்படும் ஒரு பொருளாக இப்பொழுது உள்ளது. ஆக இந்த தொழில் குறித்த சில தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இடம்:

வீட்டில் இருந்து செய்ய கூடிய தொழில் என்பதால் இதற்காக தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. ஆக உங்கள் வீட்டிலேயே சும்மா இருக்கும் நேரத்தில் அதுவும் உங்கள் சமையலறையிலேயே தயார் செய்துவிடலாம்.

முதலீடு:

இந்த Green Chilli Powder தயாரிப்பு தொழில் துவங்க உங்களிடைம் குறைந்தது 1000 ரூபாய் மட்டும் இருந்தால் போதும். அதிக முதலீடு தேவைப்படாது.

மூல பொருட்கள்:

இந்த தொழிலுக்கு மிக முக்கிய மூலப்பொருள் என்றாலே பச்சை மிளகாய் தான். அதன் பிறகு அதனை பேக்கிங் செய்வதற்கு பேக்கிங் கவர் தேவைப்படும். உங்கள் பொருளை விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் நல்ல முறையில் பேக்கிங் செய்து விற்பனை செய்வதற்கு ஸ்டிக்கர் இவை எல்லாம் தேவைப்படும்.

தயாரிக்கும் முறை:

சந்தையில் பச்சை மிளகாவை மொத்தமாக வாங்கி அதனை சுத்தமாக கழுவி, பிறகு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வெயிலில் நன்றாக காயவைத்து. பிறகு உங்கள் வீட்டில் உள்ள மிக்ஸியை பயன்படுத்தி நன்றாக பவுடர்போல் அரைத்தால் போதும் Green Chilli Powder தயார். பிறகு 50, கிராம், 100 கிராம், 500 கிராம், 1 கிலோ என்று பேக்கிங் செய்துகொள்ளுங்கள்.

தயாரிப்பு செலவுகள்:

ஒரு கிலோ Green Chilli Powder தயார் செய்ய இரன்டு கிலோ பச்சை மிளகாய் தேவைப்படும். தற்பொழுது கடைகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ Green Chilli Powder தயார் செய்வதற்க்கான போக்குவரத்துக்கு செலவு மற்றும் இதர செலவு 20ரூபாய் ஆகும்.

மொத்தமாக Green Chilli Powder தயார் செய்ய 2 கிலோ பச்சை மிளகாய் + இதர செலவு 20 = 100 ரூபாய் தான் மொத்த செலவே ஆகும்.

விற்பனை மற்றும் வருமானம்:

ஒரு கிலோ Green Chilli Powder-ஐ  ஆன்லைனில் நீங்கள் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். ஆக ஆன்லைனில் விற்பனை செய்யும் போது உற்பத்தில் செலவு 100 ரூபாய் போக உங்களுக்கு 800 ரூபாய் லாபம் கிடைக்கும் ஒரு கிலோவோர்க்கே.

அதுவே ஆஃப்லைனில் மொத்தமாக அல்லது 50, கிராம், 100 கிராம், 500 கிராம், 1 கிலோ என்று பேக்கிங் செய்து விற்பனை செய்யும்போது உங்களுக்கு ஒரு கிலோவிற்கு 700 ரூபாய் வருமானை கிடைக்கும். பிறகு உற்பத்தி செலவை கழித்தால் 600 ரூபாய் லாபம் கிடைக்கும். ஆஃப்லைன் மூலம் விற்பனை செய்யும் போது உங்கள் ஊரில் அருகில் உள்ள பாஸ்ட் புட் கடை, ஹோட்டல், ஜூஸ் கடை, மளிகை கடை போன்றவற்றை பிற்பனை செய்யலாம்.

தேவைப்படும் சான்றிதழ்:

இது உணவு சார்ந்த தொழில் என்பதால் கண்டிப்பா நீங்கள் FSSAI License கண்டிப்பாக அப்ளை செய்து வாங்கிருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 வீட்டில் கொஞ்சம் இடம் 1000 ரூபாய் முதலீடு மாதம் 40,000/- சம்பாதிக்கலாம்..! அருமையானது தொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022