மளிகை கடை வைக்க என்னென்ன License தேவைப்படும்?

What license is required for a grocery store?

மளிகை கடைக்கு என்ன உரிமம் தேவைப்படும்? | What license is required for a grocery store?

வணக்கம் நண்பர்களே வணக்கம்.. நமது ஊரில் நிறைய மளிகை கடைகள் இருக்கும். அவர்கள் அந்த மளிகை கடையை சாதரணமாக ஒன்றும் ஆரம்பித்துவிடுவதில்லை.. அதற்கு அதிகம் முதலீடு, உழைப்பு இவை அனைத்தையும் செலவு செய்கின்றான். மேலும் இந்த மளிகை கடை ஆரம்பிக்க சிலவகையான License-யும் வாங்கிய பிறகு தான் மளிகை கடையை ஆரம்பிக்கின்றன.. அந்த வகையின் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் மளிகை கடை வைக்க என்னென்ன License தேவைப்படும்? அதனை எங்கு வாங்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..

மளிகை கடை வைக்க தேவைப்படும் License | Grocery Shop License in Tamilnadu:

பொதுவாக மளிகை கடை வைக்க இரண்டு வகையான License தேவைப்படும் அவை என்னென்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம் வாங்க..

1 நகராட்சியிடம் License வாங்க வேண்டும்:

அதாவது ஒவ்வொரு ஊரிலும் நகராட்சி, பேரூராட்சி போன்ற அலுவலகங்கள் இருக்கும்.

ஆக உங்கள் ஊரில் உள்ள பேரூராட்சி அல்லது நகராட்சியில் நீங்கள் சொந்தமாக மளிகை கடை வைக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறினால் அவர்கள் அதற்க்கான License-ஐ வழங்குவார்கள்.

இந்த License எதற்கு நமக்கு தேவைப்படும் என்றால் மின்சாரம் வசதி, தண்ணீர் வசதி இது போன்ற விஷயங்களுக்கு இந்த License உங்கள் மளிகை கடைக்கு மிக அவசியம் தேவைப்படும். ஆக உங்கள் ஊரில் உள்ள நகராட்சியிடம் அதற்க்கான License வாங்கிக்கொள்ளுங்கள்.

இந்த License நாம் வாங்கி வைத்துக்கொள்வதினால் நகராட்சி சம்பதமாகாத உதவிகளை நாம் பெறமுடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
தமிழ்நாட்டில் Franchise Business ஆரம்பிக்க எவ்வளவு முதலீடு தேவைப்படும்?

2 FSSAI License:

உணவு சார்ந்த பொருட்களை நாம் விற்பனை செய்கிறோம் என்றால் கண்டிப்பாக நாம் FSSAI License கண்டிப்பாக வாங்கித்தான் ஆக வேண்டும். இந்த License-ஐ நாம் நமது ஊரில் உள்ள Health Department-ம் என்று பெற்று கொள்ளலாம்..

அல்லது இந்த FSSAI License-ஐ ஆன்லைன் மூலமாக அப்ளை செய்து பெற முடியும். இந்த License எதற்கு தேவைப்படும் என்றால் நாம் விற்பனை செய்யும் பொருட்கள் எஸ்பிரி ஆன பொருட்கள் இல்லை, தரமான பொருட்களை தான் விற்பனை செய்கின்றோம் என்பதற்கு தான் இந்த License..

திடீரென்று உங்கள் மளிகை கடைக்கு Health Department-யில் இருந்து வந்தால் அப்பொழுது கண்டிப்பாக நம்மிடம் FSSAI License இருக்கிறதா என்று தான் கேட்பார்கள் ஆக நாம் இந்த FSSAI License-ஐ வாங்காவிடியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய Top 5 Franchise தொழில்கள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil