குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்
நாம் எப்படியாவது இந்த ஆண்டாவது கண்டிப்பாக ஏதாவது ஒரு சுயதொழில் தொடங்க வேண்டும் என்பது பலருடைய ஆசை மற்றும் கனவாக இருக்கும். அந்த கனவை எப்படி பூர்த்தி செய்வது என்று தெரியவில்லை என்பது ஒரு பிரச்சனையாக சிலருக்கு இருக்கும். அதுமட்டும் இல்லாமல் நாம் தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்தாலும் அதற்கான முழு விவரங்கையும் எப்படி யாரிடம் கேட்பது என்பது ஒரு மிகபெரிய யோசனையாக நமக்கு தோன்றும். அதனால் நீங்கள் எதை பற்றியும் யோசிக்காமல் தொழில் செய்வதற்கு அதிக டிமாண்ட் உள்ள மற்றும் நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலை பற்றிய முழுவிவரத்தையும் இன்றைய வியாபாரம் பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
லாபகரமான தொழில்:
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய மற்றும் பெண்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய Hair Clip Business பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இந்த தொழில் எப்போதும் நல்ல டிமாண்ட் உள்ள மற்றும் என்றும் வியாபாரத்தில் சரிவே இல்லாத ஒரு தொழிலாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் இன்றைய காலத்தில் 1 வயது பெண் குழந்தை முதல் வயதான தாய்மார்கள் என அனைவரும் இந்த Hair Clip- யை பயன்படுத்துகின்றனர்.
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
- Automatic Hair Clip Making Machine
Automatic Hair Clip Making Machine-ன் ஆரம்ப விலை 1 லட்சம் ஆகும். நீங்கள் இந்த தொழிலை தயார் செய்வதற்கு மிஷின் வாங்கும் இடத்திலேயே உங்களுக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் அனைத்தும் அங்கேயே கொடுக்கப்படும்.
Hair Clip தயாரிப்பதற்கான அனைத்து பயிற்சிகளிலும் உங்களுக்கு மிஷின் வாங்கும் இடத்திலேயே கற்று தரப்படும்.
Hair Clip Business- யை நீங்கள் தொடங்குவதற்கு முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 1,30,000 தேவைப்படும்.
இதையும் படியுங்கள்⇒ இந்த தொழிலை நீங்கள் செய்தால் Product-ம் வீணாகாது தொழிலில் Loss-ம் வராது..!
தொழில் தொடங்க தேவையான இடம்:
Hair Clip Business- யை தொடங்குவதற்கு பெரிய அளவிலான தனி இடம் மின்சார வசதியுடன் தேவைப்படும். உங்களுங்கு வேண்டும் என்றால் தனி கடையாகவும் அமைத்து கொள்ளலாம்.
How to Make Hair Clip at Home:
நீங்கள் Automatic Hair Clip Making Machine-ல் மூலப்பொருட்களை பொறுத்தி உங்களுக்கு தேவையான மாடல்களை Click செய்து மிஷினை On செய்தால் போதும் தோராயமாக 1 மணி நேரத்திற்கு 200 Hair Clip தயாராகிவிடும்.
அப்படி என்றால் 8 மணி நேரத்திற்கு தோராயமாக 1,600 Hair Clip தயாரிக்கலாம். அதன் பிறகு நீங்கள் தயார் செய்த Hair Clip-யை பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
விற்பனை செய்யும் முறை:
ஒவ்வொரு Hair Clip-ன் விலையும் அதன் மாடலை பொறுத்து மாறுபடும். அதனால் உங்களுடைய விற்பனைக்கு ஏற்றவாறு நீங்கள் சம்பாதிக்கலாம். ஆனால் ஒரு Clip-ன் ஆரம்ப விலை என்பது 10 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது.
விற்பனை ஆகும் இடம்:
பெரிய சிறிய Fancy Store, ஷாப்பிங் மால் மற்றும் Wholesale கடை ஆகிய இடங்களில் நீங்கள் தயார் செய்த Hair Clip-யை விற்பனை செய்து கொள்ளலாம்.
ஒரு வேளை நீங்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக GST Registration பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்⇒ குறைந்த முதலீட்டில் வீட்டில் இருந்தே சுயதொழில் செய்யணுமா..! அப்போ இதை பாருங்கள்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |