காலையில் 2 மணி நேரத்தில் தினமும் 2,000 ரூபாய் சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்..!

Advertisement

நல்ல வருமானம் தரும் தொழில் | Healthy Drink Business Ideas in Tamil

அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த ஆசையினை நிறைய வேற்றுவதற்கு என்ன முயற்சி செய்ய வேண்டும் என்று யாருக்கும் தெரியமால் உள்ளது. மற்றவர்களிடம் எத்தகைய சுயதொழிலை தொடங்கலாம் என்று கேட்டாலும் கூட அதற்கான ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்று பலபேர் சுயதொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினை மறந்து விடுகிறார்கள்.

அதனால் நம்முடைய பொதுநலம்.காமில் வியாபாரம் பிரிவில் தினமும் 1 சுயதொழில் பற்றிய விவரங்களை அளித்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த தொழிலை காலையில் வெறும் 2 மணி நேரம் மட்டும் செய்தால் போதும் 2,000 ரூபாய் வரை மிகவும் ஈஸியாக சம்பாதித்து விடலாம்.

தினசரி வருமானம் தரும் தொழில்:

summertime business ideas in tamil

இந்த தொழிலுக்கான டிமாண்ட் என்பது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே கொஞ்சும் கூட குறையாமல் அப்படியே உள்ளது. ஆகையல் இன்றைய பதிவில் உடலுக்கு ஆரோக்கியமான கம்பங்கூழ் தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

மேலும் இந்த தொழிலை செய்வதற்கு உங்களுக்கு அதிக நேரமும் தேவைப்படாது. குறைவான நேரத்தில் அதிக லாபம் தரக்கூடிய இந்த தொழிலை எப்படி செய்ய வேண்டும் என்று இன்றைய பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

தேவையான முதலீடு:

நீங்கள் இந்த கம்பங்கூழ் தொழிலை செய்வதற்கு தோராயமாக தேவைப்படும் முதலீடு என்று பார்த்தால் 5,000 ரூபாய் ஆகும்.

தேவையான மூலப்பொருள்:

  1. தயிர்- 500 கிராம் 
  2. பச்சை மிளகாய- 5
  3. சின்ன வெங்காயம்- 20
  4. சாதம்- 1/4 கப் அளவிற்கு 
  5. கம்பு- 100 கிராம்
  6. மாங்காய்- சிறிய துண்டு 
  7. கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு 
  8. கொத்தமல்லி- 1 கைப்பிடி அளவு 
  9. உப்பு- தேவையான அளவு
  10. பெரிய மண் பானை- 1
  11. பிளாஸ்டிக் அல்லது கிளாஸ் டம்ளர்- 5
  12. தள்ளு வண்டி

தேவையான இடம்:

கம்பங்கூழ் தொழிலை நீங்கள் செய்வதற்கு ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு இடம் தேவைப்படும். மேலும் இந்த தொழிலை நீங்கள் காலையில் 6 மணிக்கே செய்ய தயார் ஆகிவிட வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ தினமும் காலை 11 to 12 மணி மட்டும் வேலை செய்தால் போதும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.. 

கம்பங்கூழ் செய்வது எப்படி..?

கம்பங்கூழ் செய்வது எப்படி

முதலில் எடுத்துவைத்துள்ள பச்சை மிளகாய், மாங்காய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றையினை சுத்தமாக தண்ணீரில் அலசி சிறிய சிறியதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.

அதன் பின்பு கம்பினை சுத்தம் செய்து விட்டு தண்ணீரில் அலசி தண்ணீரை வடிகட்டி நன்றாக வெயிலில் காய வைத்து விடுங்கள். அதன் பின்பு ஒரு மிக்சி ஜாரில் கம்பினை போட்டு பவுடர் போல அரைத்து கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள கம்பு, எடுத்துவைத்துள்ள சாதம் இவை இரண்டினையும் சேர்த்து அதனுடன் 500 கிராம் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலந்து கட்டி பிடிக்காதவாறு கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

பாத்திரத்தில் உள்ள பொருட்கள் கரைந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது கூழ் போல தயார் செய்து வைத்ததுடன் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் தயிர் இவை அனைத்தினையும் சேர்த்து ஒரு 5 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.

5 நிமிடம் களித்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்தால் போதும் கம்பங்கூழ் தயார் ஆகிவிட்டது. இப்போது அதனை ஒரு மண் பானையில் ஊற்றி வைத்து மூடி வைத்து விடுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ ஒரு நாளுக்கு 5,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தொழில்..  எத்தனை வருடம் ஆனாலும் பொருட்கள் கெட்டுப்போகாது.. 

விற்பனை செய்யும் முறை:

தினமும் காலையில் 6 மணிக்கு எல்லாம் கம்பங்கூழினை தயார் செய்து கடைக்கு எடுத்துக்கொண்டு வந்து விடுங்கள். அதன் பின்பு வாடிக்கையாளர்கள் அவர்களாகவே உங்களுடைய கடைக்கு வந்து கம்பங்கூழினை வாங்கி கொண்டு செல்வார்கள்.

ஒரு கம்பங்கூழின் விலை தோராயமாக 40 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே ஒரு நாளைக்கு நீங்கள் இதன் மூலம் 2,000 ரூபாய் 2 மணி நேரத்தில் தாரளமாக சம்பாதிக்க விடலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement