High Profit Small Scale Business in India
இந்த நவீன காலத்தை பொறுத்தவரை பணம் இருந்தால் மட்டுமே நாம் மகிழ்ச்சியான மற்றும் நிலையான ஒரு வாழ்க்கையினை வாழ முடியும். இவற்றை எல்லாம் விட நமக்கான தேவையினை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதுபோன்ற நிகழ்வுகளை எல்லாம் யோசித்து தான் இன்றைய காலத்தில் ஒரு வீட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் மற்ற சிலர் இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்று வேலை தேடி அதன் பின்பு வேலைக்கு செல்வதை விட சொந்தகமாக சுயதொழில் ஆரம்பித்து விடலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். சுயதொழில் செய்யலாம் என்ற முடிவு செய்த உடன் அதில் என்ன தொழில் செய்வது என்று தான் நாம் மற்றவர்களிடம் ஆலோனை கேட்டோம். ஆனால் அவர்களிடம் திருப்திகரமான பதில் கிடைக்காது. அதனால் இன்று அதிக டிமாண்ட் உள்ள ஒரு தொழிலை எப்படி செய்து என்றும் அதில் வருமானம் பெறுவது எப்படி என்றும் தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
அதிக வருமானம் தரும் தொழில்:
அனைவருடைய வீட்டிலும் அத்தியாவசியமாக உபயோகப்படுத்தக்கூடிய பொருட்கள் என்று சில இருக்கும். அத்தகைய பொருட்களில் பர்னிச்சர் பொருட்களும் அடங்கும். பர்னிச்சரை பொறுத்தவரை நமக்கு வேண்டும் என்றால் விலையினை கூட பார்க்காமல் வாங்கி விடுவோம்.
அதனால் இன்று வீட்டிலேயே பர்னிச்சர் கடை செய்து எப்படி அதில் வருமானம் பெறுவது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
முதலீடு:
இந்த பர்னிச்சரை தொழிலை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் ஆரம்பகாலத்தில் முதலீடாக 1 லட்சம் ரூபாய் கையில் வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்களுடைய தொழிலின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு முதலீட்டை அதிகரித்து கொள்ளலாம்.
மூலப்பொருள்:
- மரம்
- பர்னிச்சர் மெஷின்கள்
- வேலை ஆட்கள்- 3 நபர்
பர்னிச்சரை நீங்கள் வீட்டிலே செய்து விற்பனை செய்யபோவதால் 3 ஆட்கள் வேலைக்கு வேண்டும். அதுவும் பர்னிச்சர் செய்யக்கூடிய ஆட்கள் தான் வேலைக்கு வேண்டும்.
அவர்களிடமே அதற்கு தேவையான மெஷின்கள் என்னென்ன கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.
கடைக்கான இடம்:
அதிக மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பெரிய அளவிலான இடம் மின்சார வசதியுடன் தேவைப்படுகிறது. ஒருவேளை நீங்கள் வீட்டிலேயே செய்து சிறிய கடையில் விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு வீட்டிலேயே பெரிய அளவிலான இடம் தேவைப்படும்.
Businees Ideas👇👇 மரத்தை வைத்து இத்தனை தொழில் செய்யலாமா..? மாதம் மாதம் லட்சத்தில்
தொழில் தொடங்கும் முறை:
நீங்கள் ஆர்டர் எடுக்கும் முறையினை பொறுத்து தான் இந்த தொழிலில் லாபமும், வருமானமும் அமையும்.
அதனால் பெரிய அளவில் இருக்கும் பர்னிச்சர் கடை, ஷாப்பிங் மால் மற்றும் Eevent Management தொழில் செய்பவர்கள் என இவர்களிடம் எல்லாம் கமிஷன் முறை அல்லது நேரில் சென்று ஆர்டர் எடுத்து விற்பனை செய்யாலாம்.
உங்களுடைய கடையில் பர்னிச்சரை செய்தும் விற்பனை செய்யாலாம். பெரும்பாலும் மக்கள் அனைவரும் கடைகளில் ரெடிமேடாக விற்பதை விட உடனே செய்து கொடுக்கும் பர்னிச்சரை தான் விரும்கிறார்கள்.
மேலும் நண்பர்கள், உறவினர்கள் என இவர்கள் மூலமாகவும் ஆர்டர் எடுத்தும் பர்னிச்சர் விற்பனை செய்யலாம்.
ஆன்லைன் விற்பனை:
உங்களுடைய கடையின் பெயரில் ஆன்லைனில் ஆர்டர் எடுத்து வீட்டிற்கு டெலிவரி செய்தும் விற்பனை செய்யாலாம்.
விற்பனை செய்யும் முறை:
சாதாரணமாக ஒரு கட்டில், மேசை அல்லது சோபா செய்ய வேண்டும் என்றாலே 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை தோராயமாக வருமானம் பெறலாம். இவ்வாறு இருக்கையில் இதை விட பெரிய ஆர்டர் வந்தால் அதற்கு ஏற்றவாறு லாபம் மற்றும் வருமானம் பெறலாம்.
இந்த தொழிலை பொறுத்தவரை பர்னிச்சரின் அளவு மற்றும் என்ன பொருள் என்பதை நாம் அதிக வருமானம் பெறலாம். அதே போல் இதில் வேலை நேரமும் மிகவும் குறைவு.
Businees Ideas👇👇 இந்த தொழிலில் இவ்வளவு வருமானமானு தோனுதா..அப்போ லாபத்தை கொஞ்சம் யோசிங்க
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |