Home Cleaning Services Business Plan in Tamil
என்ன தான் தொழில் செய்வது என்று அனைவருக்குமே யோசனையாக இருக்கும், தொழில் செய்து சம்பாதிக்க ஆசையாக இருப்பவர்களுக்கு எந்த தொழிலாக இருந்தாலும் சம்பாதித்து முன்னேற நினைக்கும் அனைவருக்கும் இந்த தொழில் உதவியாக இருக்கும்.
இதற்கு முதலீடடு தேவை இல்லை. கால் மட்டும் செய்தார்கள் என்றால் வேலையை செய்து கொடுக்கலாம், அதன் பின் சம்பளம் கொடுக்கலாம். அது என்ன தொழில் வாங்க தெளிவாக பார்க்கலாம்.
Cleaning Business in Tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
இந்த காலத்தில் வீட்டில் யாருமே இருப்பதில்லை காரணம் இந்த கணினி உலகில் அனைவருமே வேலைக்கு சென்றால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும். ஆகவே அனைவருமே வேலைக்கு செல்வார்கள். அதில் சிலர்க்கு வீட்டில் உள்ள வேலைகளை சரியாக பார்க்க முடியாமல் போய்விடும்.
வருடத்திற்கு ஒரு முறை வீட்டை சுத்தம் செய்வது மட்டுமே வழக்கமாக வைத்திருப்பார்கள், அந்த நேரத்தில் சிலருக்கு உடல் நிலை சரி இல்லாமல் போகும், இன்னும் சிலருக்கு மற்ற வேலைகள் அதிகமாக இருக்கும் ஆகவே வீட்டை கவனிக்க நேரம் இல்லாமல் கஷ்ட படுவார்கள்.
பொங்கல், தீபாவளி, புரட்டாசி மாதம் என அவர்களின் விசேஷத்திற்கு மட்டுமே வீட்டை சுத்தம் செய்வார்கள்.
அந்த நேரத்தில் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்யலாம். அதாவது நீங்கள் 10 பேர் கொண்ட ஒரு அணியாக வைத்து ஒரு வீட்டை சுத்தம் செய்யும் பணிகளை செய்யலாம்.
இதில் உங்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் இருக்காது. அதாவது வீட்டை ஒட்டடை அடிப்பது மற்ற இடத்தை சுத்தம் செய்யலாம்.
இதற்கு முதலீடு தேவையில்லை. உங்களுடைய போன் நம்பர் மட்டுமே போதும். வீட்டிற்கு சென்று அவர்களுக்கு சர்வீஸ் செய்து கொடுக்கலாம்.
ஒவ்வொரு வீட்டிற்கும் இது போன்ற வேலைகளை செல்லும் போது, உங்கள் பணிகளுக்கு தேவைப்படும் பொருட்களை நீங்களே எடுத்து செல்லலாம் அல்லது அந்த வீட்டில் உள்ளவர்களிடம் கிளீனிங் செய்வதற்க்கான பொருட்களை வாங்கி தரும்படி கேட்கலாம்.
இதையும் படியுங்கள்=>முதலீடு 600 மட்டும் போதும் தினமும் 2000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்..!
அவர்கள் வீட்டை மட்டும் அழகாக மாற்றி கொடுத்தால் போதும் என்றார்கள் என்றால் அவர்கள் வீட்டில் ஏதாவது உடைந்து இருத்தால் அந்த இடத்தை சிமேட் வைத்து பூசி அங்கு அழகு பொருட்கள் கொண்டு அழகு படுத்தி கொடுப்பது முதல் செய்யலாம்.
மேலும் வீட்டுற்கு பெயிண்ட் அடித்து கொடுப்பது, அதேபோல் வீட்டில் இந்த இடித்தில் பொருட்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்றால் அதனையும் வாங்கி வைக்கலாம்.
அந்த பொருட்களை ஒரே இடத்தில் வாங்கினால் அந்த இடத்திலும் உங்களுக்கு குறைவான விலையாக இருக்கும். உங்களுந் சேவை அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தால் பின்பும் உங்களை அவர்கள் அழைப்பார்கள் அதேபோல் மற்றவர்களுக்கு உங்களை பற்றி சொல்வார்கள்.
முக்கியமாக அவர்கள் உங்களை தொடர்புகொள்ளும் போதே முதலில் எவ்வளவுகுள் உங்களுடைய பட்ஜெட் என்று கேட்டு வீட்டையும் ஒரு முறை பார்த்து அவர்களிடம் இவ்வளவு வரும் என்று சொல்லி அதன் பின் அவர்களுக்கு எவ்வளவுகுள் இருக்க வேண்டும் என்று கேட்டு முடிவு செய்து அதன் பின் வேலையை முடிக்கும் போது பணத்தை மொத்தமாக கொடுத்தால் போதும்.
இந்த தொழிலை மட்டும் ஆரம்பித்து பாருங்கள் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை அளிக்கும்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |