பணம் சம்பாதிக்க எளிய தொழில்கள்
நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் தினம்தோறும் வியாபாரம் சிறந்த தொழில் வகைகள் பற்றி பதிவிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இந்த சூப்பரான தொழிகளை பற்றி பார்க்கபோகிறோம். இன்று அனைவரின் மனதில் ஓடுவது என்னவென்றால் நாம் புதிதாக தொழில்கள் தொடங்க முடியாதா என நினைத்து இருப்பீர்கள்.
முயற்சிக்காமல் முடியாது என்று சொல்பவர்கள் முட்டாள்களுக்கு சமம் என்கிறார்கள். அதே போல் தான் ஒரு தொழிலை தொடங்க போகிறீர்கள் என்றால் அதில் வரும் ஏற்ற இரக்கத்தை தெரிந்துகொள்ளவும். அதில் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் மனதில் தைரியத்தை வைத்து அதில் செய்த தவறுகளை இந்த அடுத்த தொழில் செய்யக்கூடாது என்று நினைத்து முயற்சி செய்தால் போதும் நிச்சயம் வெற்றியை அடைவீர்கள். இப்போது நாம் பணம் சம்பாதிக்க எளிய தொழில் வகைகள் பற்றி பார்க்கபோகிறோம்.
சூப்பரான பிசினஸ் ஐடியா..! |
முதலீடு இல்லாத தொழில்:
- நீங்கள் ஒரு ITI படித்தவர் என்றால் நிச்சயம் உங்களுக்கு எலக்ட்ரிஷன் வேலை நன்றாக தெரியும் என்றால். நீங்கள் இருக்கும் தெருவில் சுற்றியுள்ள தெருக்களில் எந்த வீட்டில் என்ன எலட்ரிஷன் பிரச்சனை வந்தாலும் அவர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று வேலை பார்த்து கொடுத்தால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் எலட்ரிஷனை நேரடியாக அழைத்துவந்தால் அதற்கு என்ன ஊதியம் தருவார்கலோ அந்த அளவு நிச்சயம் கிடைக்கும் இந்த தொழில் ஆரம்பத்தில் வெளியில் தெரிவதற்கு நீண்ட நாள்கள் ஆகும். நீங்கள் செய்யும் தொழிலை எந்த தயக்கம் இல்லாமல் செய்ய வேண்டும்.
- அதன் மூலம் நீங்கள் நிறைய Customer சேர்க்க முடியும். அவர்களிடம் உங்களை பற்றி தெரிந்து கொண்டால் அவர்களின் நண்பர்களுக்கு இல்லை வேறு என்ன பிரச்சனை வந்தாலும் உங்களை அழைப்பார்கள். இதன் மூலம் முதலீடும் இல்லாமல் சம்பாதிக்கலாம்.
- அடுத்ததாக 5 தெருக்களை எடுத்துக்கொண்டால் அங்கு யார் வீட்டில் AC வைத்திருப்பார்கள் என்ற ஒரு (list) லிஸ்ட் எடுத்துக்கொள்ளவும். பின்பு AC யில் எந்த பிரச்சனை வந்தாலும் அங்கு சென்று உதவிகளை செய்யலாம். பின்பு அவர்களிடம் உங்களின் தொலைபேசி எண்களை கொடுத்துவரலாம்.
- எலட்ரிஷன் வொர்க் தான் தெரியும் AC ஒர்க் எனக்கு தெரியாது என்றால் என்ன செய்ய முடியும் என்றால். உங்களுக்கு தெரிந்த AC மெக்கானி தெரியும் என்றால் அவரை தொடர்பு கொண்டு இருவரும் இணைந்து அவர்களுக்கு வரும் எலட்ரிக் வொர்க்கை உங்களுக்கும், உங்களுக்கு வருகின்ற AC வொர்க்கை அவருக்கும் சொல்லலாம் இல்லையென்றால் இருவரும் இணைந்தும் அந்த வேலையை செய்ய முடியும். அது போல் செய்தால் நிச்சயம் சம்பாதிக்கலாம்.
Home Tuition in Tamil:
அனைத்து மனிதர்களும் எதோ விதத்தில் Talent – ஆக இருப்பார்கள் அந்த பாடத்தை தினமும் ஓரு மணி நேரம் வீட்டிற்கு சென்று சொல்லி கொடுத்தால் அதற்கு கிடைக்கும் ஊதியம் நிறைவாக இருக்கும். ஏனென்றால் பள்ளிக்கூடத்திற்கு சென்று வரும் பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் என்ற ஒரு விதத்தில் கஷ்டமாக இருப்பார்கள். அதனால் அதனை வீட்டிற்கு சென்று சொல்லி கொடுத்தீர்கள் என்றால் அவர்களும் நிறைவாக இருப்பார்கள்.
பணம் கொட்டும் சிறந்த |
Subject மட்டும் இல்லை உனக்கு எதில் திறமை இருக்கின்றதோ அதற்கான Tuition பயிற்சி கொடுக்கலாம். அதன் மூலம் சம்பாதிக்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |