முதலீடு இல்லாமல் வெற்றி தரும் பெண்களுக்கான சிறந்த தொழில்கள்..!

பெண்களுக்கான சிறந்த தொழில்கள்

பெண்களுக்கான சிறந்த தொழில்கள்..! 

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நேயர்களே… இன்று நம் பதிவில் வீட்டிலிருக்கும் பெண்களுக்கான முதலீடு இல்லாமல் வெற்றி தரும் சிறந்த சிறு தொழில்கள் பற்றி தான் பார்க்கப்போகிறோம். அனைவரும் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆசை சுயதொழில் ஒன்றை செய்யவேண்டும் என்பதே. அந்த வகையில் பெண்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் பாருங்கள் ⇒ வீட்டிலிருந்தே 300 ருபாய் முதலீட்டில் லாபம் தரக்கூடிய சிறந்த தொழில்கள்

முதலீடு இல்லாமல் வெற்றி தரும் தொழில்கள்:

நாம் எந்த தொழில் செய்தாலும் அதில் முழு ஈடுபாடும், கவனமும் செலுத்தவேண்டும். நாம் செய்யும் தொழிலை மகிழ்ச்சியுடன் செய்யவேண்டும். இப்படி கவனத்துடனும் மகிழ்ச்சியாகவும் தொழில் தொடங்கினால் நாம் வீட்டில் இருந்தே நல்ல லாபம் பார்க்கலாம். இப்போது பெண்களுக்கான தொழில்களை பற்றி பார்க்கலாம்.

ஆரி எம்பிராய்டரி

பெண்கள் வீட்டில் இருந்த படியே ஆரி எம்பிராய்டரி வேலை செய்வதன் மூலம் நல்ல வருமான பெறலாம். இதுபோன்று செய்வதால் பெண்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எம்பிராய்டரி புடவைகளில் செய்து தருவது மற்றும் ஜாக்கெட் மற்றும் மற்ற ஆடைகளில் இந்த எம்பிராய்டரி செய்து தருவதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும்.

கட்பீஸ் துணிகள் விற்றல்

பெண்கள் வீட்டில் இருந்து செய்ய கூடிய தொழில்களில் இதுவும் ஓன்று கட்பீஸ் துணிகள் விற்றல். புடவைகளுக்கு தேவையான ஜாக்கெட் துணிகளை விற்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். இந்த துணிகள் புடவைகளுக்கு மட்டுமின்றி சுடிதார் துணிகளாகவும் பயன்படுகிறது. அதுபோன்று இந்த சுடிதால் மெட்டீரியல் வாங்கி விற்பதாலும் நல்ல லாபம் பெறமுடியும். எனவே, இந்த கட்பீஸ் துணிகள் விற்பதால் பெண்கள் வீட்டிலிருந்தே நல்ல லாபம் பார்க்கலாம். இது பெண்களுக்கான அருமையான தொழில் ஆகும்.

ஸ்கிரீன் பிரிண்டிங்

பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே ஸ்கிரீன் பிரிண்டிங் செய்து தருவதால் நல்ல லாபம் கிடைக்கும்.

பெட்டிகோட் மற்றும் நைட்டிகள், உள்பாவாடைகள் போன்றவற்றை வாங்கி விற்பதன் மூலம் வீட்டிலிருந்தே நல்ல லாபம் பார்க்கலாம். இந்த தொழிலை பெண்கள் வீட்டிலிருந்தே செய்யலாம். இந்த தொழிலை பெண்கள் மட்டும்தான் பார்க்கவேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் இல்லை ஆண்களும் விருப்பபட்டால் செய்யலாம்.

பெண்கள் வீட்டிலிருந்து மேட்சிங் ரெடிமேட் ஜாக்கெட் விற்பதால் நல்ல லாபம் கிடைக்கும். புடவைகளுக்கு தேவையான தைத்து விற்கப்படும் ஜாக்கெட்களை வாங்கி விற்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

இதையும் பாருங்கள் ⇒ வீட்டிலேயே இருந்து குறைந்த முதலீடு, அதிக லாபம் தரும் சிறந்த தொழில்

டைலரிங் ஸ்கூல் நடத்துதல்: 

அதேபோல் பெண்கள் மற்ற பெண்களுக்கு டைலரிங் சொல்லிக் கொடுப்பதால் நல்ல வருமானம் கிடைக்கும். மற்றவர்களுக்கு டைலரிங் சொல்லிக் கொடுப்பதால் அவர்களுக்கும் பயன் உண்டு. சொல்லிக்கொடுக்கும் உங்களுக்கும் லாபம் கிடைக்கும்.

அதேபோல துணிப் பைகளை தைத்து தருவதால் நல்ல லாபம் கிடைக்கும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாத காரணத்தால் இதுபோன்று துணிப்பைகள் தைத்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

செயற்கை பூக்கள் தயாரித்தல்:

செயற்கை பூக்கள் தயாரித்தல்

வீட்டில் இருந்து கொண்டே செயற்கையான முறையில் பூக்கள் தயாரித்து விற்கலாம். இந்த செயற்கை பூக்களை தயாரித்து விசேஷ இடங்கள் மற்றும் கல்யாண மண்டபம் போன்ற இடங்களில் அலங்கரிப்பதற்கு இந்த செயற்கை பூக்களை தயாரித்து விற்பனை செய்யலாம். அதனால் நல்ல வருமானம் பெறமுடியும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022