பெண்கள் சுயதொழில்
பெண்களில் சிலர் தினமும் வேக வேகமாக கிளம்பி வேலைக்கு செல்வீர்கள். அப்படி நீங்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் பலவகையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டி இருக்கும். சிலருக்கு அத்தகைய விதிமுறைகளை பின்பற்றுவதற்கு கடினமாக இருக்கும். ஆகையால் வெளியில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்றைய பதிவானது மிகவும் உதவியாக இருக்கும். வீட்டில் இருந்தே மிஷின் இல்லாமல் சுயதொழில் மூலம் அதிக லாபம் பெற செய்ய வேண்டிய தொழில் என்ன என்பது பற்றி தெரிந்துகொள்ள பதிவை முழுவதுமாக படித்து வாருங்கள்.
Homemade Business Ideas in Tamil:
வீட்டில் இருந்தே Pana Kilangu Powder தயாரிக்கும் சுயதொழில் செய்து அதிக லாபம் பெறலாம். இந்த தொழிலை செய்வதற்கு முதலீடு 1,500 ரூபாய் மட்டும் இருந்தால் போதும்.
அதுபோல இந்த தொழிலானது நவீன உலகத்தில் மிகவும் டிமெண்ட் உள்ள ஒரு தொழிலாகவும் மற்றும் பெண்களுக்கு போட்டியே இல்லாத ஒரு அருமையான தொழிலாகவும் இருக்கிறது.
அதிக லாபம் தரும் சுயதொழில்:
மூலப்பொருள்:
- பனங்கிழங்கு- 5 கிலோ
- பிளாஸ்டிக் பாக்ஸ்
- இந்த தொழிலை செய்வதற்கு நீங்கள் FSSAI license பெற்று கொள்ள வேண்டும்.
தேவையான இடம்:
Pana Kilangu Powder தொழிலை செய்வதற்கு வீட்டில் ஒரு பகுதியில் 10×10 இடம் இருந்தால் போதும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
தயாரிக்கும் முறை:
முதலில் நீங்கள் வாங்கிய பனங்கிழங்கினை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு நறுக்கிய பனங்கிழங்கினை வெயிலில் ஒரு நாள் முழுவதுமாக காய விடுங்கள்.
அதன் பிறகு காய வைத்த பனங்கிழங்கினை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் அரைக்கும் பனங்கிழங்கு பவுடரானது நன்றாக மசியாது.
அதனால் நீங்கள் அரைத்துவைத்துள்ள பவுடரை மீண்டும் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைத்து அதன் பிறகு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக மாவு போல் அரைத்து விடுங்கள்.
இப்போது நீங்கள் அரைத்துவைத்துள்ள பவுடரை வீட்டில் மாவு சலிக்க வைத்து இருக்கும் சல்லடையில் போட்டு சலித்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் பனங்கிழங்கு பவுடர் தகராகிவிட்டது. நீங்கள் 5 கிலோ வாங்கிய பனங்கிழங்கில் இருந்து 3 கிலோ அளவிற்கு பவுடர் தயார் செய்யலாம்.
பேக்கிங் செய்தல்:
நீங்கள் தயாரித்த பவுடரை 200 கிராம், 1/2 கிலோ மற்றும் 1 கிலோ என மூன்று விதமாக பிளாஸ்டிக் பாக்சில் போட்டு பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
வருமானம்:
பேக்கிங் செய்து வைத்துள்ள பனங்கிழங்கு பவுடரின் 200 கிராம் தோராய விலை 270 ரூபாய் , 1/2 கிலோ பவுடரின் தோராய விலை 550 ரூபாய் மற்றும் 1 கிலோ பவுடரின் தோராய விலை 1100 ரூபாய் ஆகும்.
நீங்கள் ஒருநாளைக்கு பேக்கிங் செய்து வைத்துள்ள பனங்கிழங்கு பவுடர்களில் ஒவ்வொன்றிலும் 5 மட்டும் விற்பனை செய்தீர்கள் என்றால் தோராயமாக 9,600 ரூபாய் நீங்கள் சம்பாதிக்கலாம்.
அப்படி என்றால் ஒரு மாதத்திற்கு நீங்கள் தோராயமாக 2,88,000 ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.
விற்பனை செய்யும் முறை:
நீங்கள் தயார் செய்த இந்த பனங்கிழங்கு பவுடரை மெடிக்கல் ஷாப், மளிகை கடை, மற்றும் பெரிய Department store ஆகிய இடங்களில் விற்பனை செய்யலாம்.
Pana kilangu Powder Benefits in Tamil:
இந்த பனங்கிழங்கு பவுடரானது சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. மாரடைப்பு, பக்கவாதம், மலச்சிக்கல் மற்றும் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇 👇 👇
இந்தியாவில் eCommerce விற்பனையில் அதிகம் விற்பனையாகும் 10 தயாரிப்புகள்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |