Homemade Juice Powder
நண்பர்களுக்கு வணக்கம்..! இந்த காலகட்டத்தில் அனைவரும் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல பலரும் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும்.
அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக சிறந்த வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கூறும் வணிக யோசனையும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
முதலீடு:
இந்த தொழில் செய்வதற்கு முதலீடு என்பதே தேவை கிடையாது. உங்கள் கையில் இருக்கும் பணத்தை வைத்தே இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம்.
இடவசதி:
இந்த அருமையான தொழிலை நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே செய்யலாம். அதனால் இந்த தொழில் இல்லத்தரசிகளுக்கு ஒரு சிறந்த தொழிலாக இருக்கும். வீட்டில் இருந்து தொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் இந்த தொழிலை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறலாம்.
அதனால் தினமும் ஒரு நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும் |
Juice Powder Business in Tamil:
என்ன தொழிலாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இருப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை. ஜூஸ் பவுடர் தாயர் செய்து அதனை விற்பனை செய்யும் தொழிலை தான் கூறுகின்றோம்.
இது வெயில் காலம் என்பதால் அனைவரும் ஜில்லுனு ஜூஸ் குடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்காக ஒவ்வொரு முறையும் ஜூஸ் வாங்குவதற்கு கடைக்கு செல்ல முடியாது அல்லவா..! அதனால் என்ன செய்வார்கள் என்றால் ஜூஸ் பவுடர் வாங்கி வைத்து கொள்வார்கள்.
அதை மதிய வேளைகளில் தண்ணீரில் கலந்து குடிப்பார்கள். இது தான் இப்பொழுது அனைவரின் வீடுகளிலும் நடந்து வருகிறது. ஆனால் அதில் என்ன கெமிக்கல் சேர்க்கிறார்கள் என்று நமக்கு தெரியாது. அதனால் கெமிக்கல் இல்லாத பொருட்களை வைத்து இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்.
சரி வாங்க நண்பர்களே, வீட்டிலேயே ஜூஸ் பவுடர் தயார் செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 👉 இந்த பொருளை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கி தயாரித்தால் போதும் மாதம் 6,30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
ஜூஸ் பவுடர் செய்முறை:
- சர்க்கரை
- குளுக்கோஸ் பவுடர்
- சிட்ரிக் ஆசிட்
- உப்பு
- ஆரஞ்சு Emulation
இந்த பொருட்கள் அனைத்தையும் தேவையான அளவு எடுத்தது கொள்ள வேண்டும். பிறகு இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். அவ்வளவு தான் இப்பொழுது ஜூஸ் பவுடர் தயாராகி விட்டது.
விற்பனை செய்யும் முறை:
இந்த பவுடரை கண்கவரும் பாக்கெட்களில் வைத்து பேக்கிங் செய்ய வேண்டும். பின் அந்த கவரில் உங்கள் முகவரிகளை அச்சைட வேண்டும். அப்போது தான் மக்கள் உங்களை அதிகமாக தொடர்பு கொள்வார்கள்.
அதுபோல இந்த தொழில் செய்வதற்கு நீங்கள் FSSAI உரிமம் பெற்றிருக்க வேண்டும். அடுத்து இந்த பவுடரை உங்கள் பகுதியில் சூப்பர் மார்க்கெட், மால், பெட்டிக்கடை மற்றும் ஜூஸ் கடை போன்ற கடைகளில் விற்பனை செய்யலாம்.
இந்த பவுடர் ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே தயார் செய்தது என்பதால் மக்கள் கட்டாயம் இதை வாங்க முன் வருவார்கள்.
ஒரு பாக்கெட் ஜூஸ் பவுடர் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 10 பாக்கெட் விற்பனை செய்தால் உங்களுக்கு 1000 ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |