SBI வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்குவது எப்படி?

Advertisement

How to Open SBI Customer Service Point in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் புத்திதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் உள்ளதா? ஆனால் என்ன தொழில் செய்வது என்று அதிகமாக யோசிக்கிறீர்களாக. அப்படியென்றால் எங்கள் பொதுநலம்.காம் பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது எங்களது இணையதளத்தில் பலவகையான தொழில் ஐடியாக்களை வழங்கி வருகிறோம் அவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள். சரி இந்த பதிவில் SBI வங்கி வழங்கியுள்ள அருமையான பிசினெஸ் ஐடியாவை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது SBI வங்கி SBI வாடிக்கையாளர் சேவை மையம் என்ற ஒரு அறிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இது ஒரு அருமையான தொழில் வாய்ப்பாகும். சரி வாங்க இந்த பதிவில் SBI வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்குவது எப்படி?, நமக்கு இவற்றில் என்ன மாதிரியான வேலைகள் இருக்கும், எவ்வளவு வருமானம் கிடைக்கும் போன்ற தகவல்களை படித்து தெரிந்து கொள்வோம்.

SBI வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்குவது எப்படி? – How to Open SBI Customer Service Point in Tamil

இடம்:

இந்த SBI வாடிக்கையாளர் சேவை மையத்தை வைத்து நடத்துவதற்கு தனியாக இடம் வேண்டும் என்ற ஒரு அவசியமும் இல்லை. ஏற்கனவே நீங்கள் சிறிய கடை ஏதாவது வச்சிருந்திங்க அப்படினா அந்த கடையிலேயே இந்த SBI வாடிக்கையாளர் சேவை மையத்தை வைத்து நடத்தலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கீங்க அப்படினா அந்த கடையிலேயே இந்த SBI சேவை மையத்தை வைத்து நடத்தலாம். உங்களிடம் கடை எதுவும் இல்லை பாடினாலும் ஒரு பிரச்சனையும் இல்லை உங்கள் வீட்டில் இருந்த படியே கூட செய்யலாம். இல்லை இதற்கென்று தனியாக கடை அமைத்து செய்ய வேண்டும் என்று நீங்கள் விருப்பபட்டால் தனியாக கடை வைத்துக்கொள்ளலாம்.

என்ன வேலை இருக்கும்?

பொதுவாக SBI வங்கியில் என்னென்ன வேலைகள் செய்கின்றார்களோ.. அந்த வேலைகளையெல்லாம் நீங்களும் இந்த சேவை மையத்தில் SBI வடிக்கலையாளர் மற்றும் பயனர்களுக்கு செய்து தரமுடியும். அதாவது வங்கி கணக்கு ஓபன் செய்து தருவது, பணம் போடுவது, பணம் எடுப்பது, வங்கி கணக்கில் உள்ள வைப்பு தொகையை சரி பார்ப்பது, ஸ்டேட்மென்ட் பார்த்து சொல்வது, ஸ்டேட்மென்ட் பிரிண்ட் எடுத்து கொடுப்பது, ஏடிஎம் கார் கிரியேட் செய்து கொடுப்பது என்று அனைத்து சேவைகளும் இந்த SBI வாடிக்கையாளர் சேவை மையத்தின் மூலம் மக்களுக்கு நீங்கள் செய்து தர முடியும்.

மேலும் ட்ராவல் டிக்கெட் புக்கிங், IMPS, NEFT Transfer, Recharge போன்ற சேவைகளையும் பொது மக்களுக்கு நீங்கள் செய்துதர முடியும்.

மேலும் SBI Insurance, Other Insurance Pay பண்ணலாம், அதேபோல் EB bill collection செய்யலாம். அதே போல் பொது மக்களுக்கு பான் கார்டு அப்ளை செய்து கொடுக்கலாம்.

அதேபோல் வீட்டு வரி, குலா வரி, நில வரி போன்ற கட்டண தொகையையும் நீங்கள் collection செய்யலாம் இது போன்று பல வகையான சேவைகளை பொது மக்களுக்கு நீங்கள் செய்துகொடுக்க முடியும்.

நோக்கம்:

SBI வாடிக்கையாளர் சேவை மையத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால்.. அதிக வாடிக்கையாளர் கொண்ட வங்கிகளில் SBI வங்கியும் ஒன்றாகும்.

ஆகவே வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனே செய்து தர முடியாத காரணத்தினாலும். கிராமப்புற மக்கள் ரொம்ம தூரத்தில் இருந்து வங்கி காத்துக்கிடப்பதினாலும். பொது மக்கள் அதிகம் திண்டாடுகின்றன.

இந்த பிரச்சனையை குறைப்பதைக்காகவே இந்த SBI வாடிக்கையாளர் சேவை மையம் ஆரம்பிக்க பட்டுள்ளது. ஆகவே நீங்கள் இவற்றை எடுத்து நடத்துவதன் மூலம்  நல்ல வருமானத்தை பெற முடியும்.

தகுதி:

இந்த SBI வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடங்க உங்களிடம் இருக்க வேண்டிய தகுதிகள் என்னவென்றால். ஓரளவு உங்களுக்கு கணினி பற்றிய திறனும் இருக்க வேண்டும். அதன் பிறகு உங்களிடம் ஒரு கம்ப்யூட்டர், நல்ல இன்டர்நெட் வசதி, பிரிண்டிங் மிஷின் மற்றும் ஒரு சிறிய ஷாப் இவை அனைத்தும் இருக்க வேண்டும்.

பயிற்சி:

இந்த சேவை மையத்தை நீங்கள் எடுத்து நடத்த உரிமம் வழங்கப்பட்டுவிட்டது என்றால். SBI சார்பாக உங்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்படும். உங்களுக்கென்று தனியாக user ID, PASSWORD போன்றவற்றை எல்லாம் SBI வங்கி உங்களுக்கு வழங்கும். பயிற்சிகள் உங்களுக்கு முழுமையாக வழங்கப்பட்ட பிறகு CSP என்ற சான்றிதழும் உங்களுக்கு வழங்குவார்கள்.

How to Open SBI Customer Service Point in Tamil – எப்படி அப்ளை செய்வது?

http://myoxigen.com/csp-sbi என்ற இணையதளத்தின் வழியாக நீங்கள் அப்ளை செய்யலாம். Third Party மூலமாகத்தான் இந்த ரிஜிஸ்டேசனை SBI வங்கி ஆன்லைனில் கொடுத்துள்ளனர். நீங்கள் நேராக SBi வங்கியில் இந்த SBi வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்குவதை பற்றி கேட்டிங்க அப்படினாலும் அதற்கான விவரங்களை சொல்வார்கள். உங்களுக்கு எந்த ஆப்சன் ஓகேவா இருக்கோ அதனை ச்சூஸ் பண்ணிக்கோங்க. நீங்கள் அப்ளை செய்த அப்ளிகேஷனுக்கான status எப்படி இருக்குனு குறைந்து 25 – 30 நாட்களுக்கு தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் அப்ளை செய்த ஏரியாவில் இந்த சேவை மையத்தை வைத்து நடத்த அதிக வாய்ப்பு உள்ளது என்றால் SBI வங்கி அதற்கான process-ஐ வெகு சீக்கிரமாகவே செய்து கொடுத்துவிடுவார்கள்.

முதலீடு:

இந்த சேவை மையத்தை தொடங்குவதற்கு நீங்கள் எந்த ஒரு முதலீடும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை SBI  வங்கி இலவசமாகவே இந்த சேவை மையத்தை தொடங்க உதவி செய்கிறது.

அப்ளை செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:

  • பாஸ்போட் அளவுள்ள இரண்டு போடோ
  • ஆதார் கார்
  • உங்களது முகவரி
  • பான் கார்ட்
  • EB பில் ரசீது
  • ரேஷன் கார்ட்
  • வேறு ஏதாவது ஒரு ID

வருமானம்:

இந்த பிசினஸ் பொறுத்தவரை கமிஷன் அடிப்படையில் தான் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். பொது மக்கள் கேட்கும் சேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து தருவதன் மூலம் உங்கள் கமிஷன் வழங்கப்படும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement