How To Start Juice Shop
இன்றைய நிலையில் அனைவருமே படித்து முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் சிறந்த வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கூறும் வணிக யோசனையும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க நண்பர்களே அது என்ன தொழில் அதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How To Start Juice Shop Business in Tamil:
வெயில் காலம் வந்துவிட்டது. அதனால் இந்த தொழில் தொடங்குவதற்கான சரியான சீசன் இது தான். ஜூஸ் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். பிடிக்கும் என்று சொல்வதை விட அதில் சத்துக்கள் அதிகம் உள்ளது என்றே சொல்லலாம். பொதுவாக சாதாரண நாளில் கூட ஜூஸ் வாங்கி குடிப்பவர்கள் வெயில் காலத்தில் ஜூஸ் குடிக்கலாம் இருப்பார்களா..? கட்டாயம் குடிப்பார்கள். அதனால் ஜூஸ் கடை வணிகத்தை தொடங்கினால் தினமும் ஒரு நல்ல வருமானம் கிடைக்கும்.
இன்றைய நிலையில் அனைவருமே பாட்டிலில் இருக்கக்கூடிய ஜூஸ்களை குடிப்பதை தவிர்த்துவிட்டு பிரெஷ் ஆக தயாரிக்கும் ஜூஸ்களை குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக தொடங்கலாம்.
1000 முதலீட்டில் 4,000 வரை ஒரு நாளுக்கு லாபம் கிடைக்கும் தொழில் இது |
இடவசதி:
நீங்கள் ஜூஸ் கடை திறக்க போகிறீர்கள் என்றால் முதலில் அதற்கு சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
நீங்கள் திறக்கும் கடை மக்கள் அதிகாமாக வந்து செல்லும் இடமாக இருக்க வேண்டும். அதாவது மால், மார்க்கெட், பூங்கா, பள்ளி கல்லூரிகள் பேருந்து நிலையம் மற்றும் இரயில் நிலையம் போன்ற இடங்களில் வைத்தால் லாபம் அதிமாக கிடைக்கும்.
முதலீடு:
இந்த தொழில் தொடங்குவதற்கு முதலீடு அதிகமாக தேவைப்படாது. உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்தே இந்த தொழிலை ஆரம்பிக்கலாம். நீங்கள் தொடங்கும் கடை வாடகை கடையாக இருந்தால் அதற்கு பணம் கொஞ்சம் தேவைப்படும். சொந்த கடையாக இருந்தால் எந்த பிரச்சனையும் கிடையாது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> வீட்டில் சின்ன இடம் இருந்தால் நீங்களும் Factory ஆரம்பிக்கலாம்
எவ்வளவு லாபம் கிடைக்கும்..?
உங்கள் கடையில் விதவிதமான ஜூஸ்களை தயாரித்து விற்பனை செய்யலாம். ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை பழ ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் போன்ற சத்தான பழங்களை கொண்டு ஜூஸ் தயாரித்து விற்பனை செய்யலாம். இன்னும் பல வகையான ஜூஸ்கள் இருக்கின்றன. அதை தயாரித்து விற்பனை செய்யலாம்.
ஒரு ஜூஸ் 50 ரூபாய் என்று ஒரு நாளைக்கு 50 ஜூஸ் விற்பனை செய்தாலும் உங்களுக்கு 2,500 ரூபாய் கிடைக்கும். அதுவே 50 க்கும் மேல் விற்பனை செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மிகவும் எளிமையான தொழில் தான் ஆனால் லாபம் மட்டும் லட்ச கணக்கில் கிடைக்கும்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |