சில்லுனு ஒரு சுயதொழில் ஐஸ் கிரீம் ஷாப் ஆரம்பிப்பது எப்படி? Ice cream business ideas in tamil

ice cream business ideas in tamil

சில்லுனு ஒரு சுயதொழில் ஐஸ் கிரீம் ஷாப் ஆரம்பிப்பது எப்படி ? | Ice cream business ideas in tamil

Ice cream business ideas in tamil:- சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும், அந்த வகையில் சிலர் சீசனுக்கு தகுந்தது போல் தொழில் செய்வார்கள் எனவே இந்த பதிவில் கோடைகாலத்தில் நன்கு விற்பனையாகக்கூடிய ஐஸ் கிரீம் தொழில் பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.

இந்த தொழிலை கோடை காலத்தில் மட்டும் செய்து வருமானம் பார்க்கும் தொழில் இல்லை, நல்ல திறமை இருந்தால் வருடம் முழுவதும் இந்த தொழில் மூலம் நன்றாக சம்பாதிகலாம், அதாவது இந்த ஐஸ் கிரீம் தொழில் துவங்க எவ்வளவு முதலீடு தேவைப்படும், என்னென்ன மூலப்பொருட்கள் தேவைப்படும், எந்தெந்த இடங்களில் தொழில் செய்தால் வருமானத்தை அதிகரிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

முதலீடு:

இந்த ஐஸ் கிரீம் தொழில் துவங்குவதற்கு ice cream machine மற்றும் ஐஸ்கிரீம் தயார் செய்ய சில மூலப்பொருட்கள் அவசியம் தேவைப்படும் இதற்கு முதலீடாக 2 லட்சம் தேவைப்படும்.

தினமும் ரூ.1000/- வருமானம் கிடைக்கக்கூடிய சிறந்த தொழில்..!

தேவைப்படும் இயந்திரங்கள்:

ice cream machine

Ice cream machine அவசியம் தேவை இதன் விலை 75,000/- ரூபாய்க்கு அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் கிடைக்கின்றது. அங்கு ஆர்டர் செய்தும் இந்த இயந்திரத்தை பெற்று கொள்ளலாம்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:

இந்த ஐஸ் கிரீம் தயாரிக்க மூலப்பொருட்களாக பால், ஐஸ் கிரீம் பவுடர், கலர் எசன்ஸ், ஐஸ் கிரீம் கோன், கப் இவைகள் இருந்தால் போதும் ஐஸ் கிரீம் தயாரித்து விடலாம்.

பலவகைகளில் ஐஸ் கிரீம் பவுடரும் கிடைக்கின்றது அதாவது வெண்ணிலா, மேங்கோ, ஸ்ட்ராபெரி என்று பலவகைகளில் கிடைக்கின்றது அதனையும் வாங்கி ஐஸ் கிரீம் தயார் செய்ய பயன்படுத்தி கொள்ளலாம்.

ஐஸ் கிரீம் தயாரிக்கும் முறையும் / இயந்திரத்தை இயக்கும் முறையும் மிகவும் எளிதுதான்:

ice cream business ideas

ஐஸ் கிரீம் தயாரிப்பதை பற்றி பார்க்கலாம்: 

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் 4 லிட்டர் பாலிற்கு பெரிய கப்பில் ஒரு கப் ஐஸ் கிரீம் பவுடரை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். இந்த கலவையை ஐஸ் கிரீம் இயந்திரத்தின் உள்ளே ஊற்றி time set செய்ய வேண்டும்.

அதாவது 15 நிமிடத்திற்கு Time set செய்து பின் cool பட்டனை கிளிக் செய்ய வேண்டும். 15 நிமிடம் கழித்த பின் இயந்திரத்தில் ஊற்றிய திரவம் ஐஸ் கிரீமாக உறைந்திருக்கும்.

பின் இயந்திரத்தில் ஐஸ் கிரீம் வெளிவருவதற்கு ஒரு பிரஷ் பட்டன் இருக்கும் அதனை கீழ் நோக்கி இழுத்தால் இயந்திரத்தில் இருந்து ஐஸ் கிரீம் வெளிவரும் அதனை ஐஸ் கிரீம் கோனில் அல்லது கப்பில் பிடித்து விற்பனை செய்யலாம்.

ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் பொழுது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் ஐஸ் கிரீம் மீது ஏதாவது நட்ஸ் அல்லது சாக்லேட் என்று ஏதாவது அதன் மீது தூவி விற்பனை செய்யலாம். இவ்வாறு விற்பனை செய்தால் லாபம் அதிகமாகும்.

ஐஸ் கிராம் தயார் செய்த பின் இயந்திரத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் ஒரு பக்கெட் தண்ணீர் இயந்திரத்தில் ஊற்றி பின் இயந்திரத்தை மூடி வாஷ் (wash) என்ற பட்டன் இருக்கும் அதனை கிளிக் செய்தால் இயந்திரத்தை மிக எளிமையாக சுத்தம் செய்து விடலாம்.

இயந்திரத்தில் உள்ள நீரை வெளியேற்ற ஐஸ் கிரீம் வெளிவருவதற்கு ஒரு பிரஷ் பட்டன் இருக்கும் அதனை கீழ் நோக்கி இழுத்தால் இயந்திரத்தில் உள்ள தண்ணீர் வெளிவந்துவிடும்.

லாபம் தரும் பேப்பர் தட்டு தயாரிப்பு முறை

சந்தை வாய்ப்பு:

ஐஸ் கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலப்படுவார்கள். எனவே இந்த சுய தொழில் பொறுத்தவரை மக்களிடம் அதிக வரவேற்பு உள்ள தொழில் என்பதால் 90 சதவீதம் நிச்சயம் இதன் மூலம் சம்பாதிக்க முடியும். இருப்பினும் திறமையுடன் செயல் பட்டால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

அதாவது சாலை ஓரங்களில், பள்ளி, கல்லூரி, பார்க், தியேட்டர், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், திருவிழா நடைபெறும் இடங்களில், மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் இந்த இயந்திரத்தை நேரடியாக எடுத்து சென்று ஐஸ் கிராம் விற்பனை செய்யலாம்.

மேலும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் இப்பொழுது ஐஸ் கிரீம் கொடுக்கும் பழக்கம் வந்துவிட்டது எனவே அங்கு இந்த இயந்திரத்தை எடுத்து சென்றும் ஐஸ் கிராம் விநியோகம் செய்யலாம். இதன் மூலம் 20 முதல் 30 சதவீத லாபம் பெறலாம்.

மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் ஐஸ் கிரீம் அதிகம் விற்பனையாகும். அதுமட்டும் இல்லாமல் கோடை காலத்தில் இந்த தொழிலை செய்தால் தினமும் 1000 முதல் 5000 வர சம்பாதிக்கலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil