இதில் முதலீடு குறைவு… ஆனால் லாபமோ லட்சக்காணக்கில்..! கேட்கவே ஆச்சரியமாக இருக்கா..!

idiyappam maker machine sales business in tamil

Idiyappam Maker Machine Sales Business 

இந்த நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் அனைவரும் பெரும்பாலும் சுயதொழில் ஆரம்பிப்பதை தான் அதிகமாக விருப்புகிறார்கள். அத்தகைய தொழில்கள் யாவும் காலத்திற்கு ஏற்றவாறு தான் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக யாரும் பெரும்பாலும் மூலப்பொருட்கள் எல்லாம் வாங்கி அதனை கைகளால் கஷ்டப்பட்டு செய்வதை விரும்புவது இல்லை. ஏனென்றால் எப்போது அனைத்திற்கும் மெஷின் வந்துவிட்டால் காரணத்தினால் மிகவும் எளிமையாக வேலையினை முடித்து விடுகிறார்கள்.

இவற்றிற்கு எல்லாம் ஏற்ற மாதிரியான ஒரு அருமையான தொழிலை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். நாம் பார்க்கும் தொழிலை பற்றி குறிப்பாக ஒரே வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இது வாங்கி விற்கும் தொழில் அவ்வளவு தாங்க..! சரி பதிவினுள் சென்று தொழிலை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க நண்பர்களே..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வாங்கி விற்கும் தொழில்:

வாங்கி விற்கும் தொழில்

அன்று முதல் இன்று வரை அசைக்க இடமும், என்றும் டிமாண்ட் உள்ள தொழிலாகவும் இருப்பது என்றால் அது உணவு தொழில் தான். அதாவது சாப்பாட்டு கடை தான்.

மக்கள் அனைவரும் ஓடி ஓடி உழைத்தாலும் கூட வீட்டில் சரியாக சமைத்து சாப்பிடாமல் ஹோட்டலில் பிடித்தவற்றை சாப்பிட்டு விடுகிறார்கள். இதனால் தான் என்னவோ இந்த தொழில் முதலிடத்திலேயே இருக்கிறது.

இதில் நாம் சமைக்கும் அனைத்து சாப்பாட்டிற்கு தனித்தனியான மெஷின்கள் தேவைப்படுகிறது. அதனால் இன்று இடியாப்பம் செய்வதற்கு தேவைப்படும் மெஷினை Wholesale முறையில் வாங்கி விற்கும் தொழிலை எப்படி செய்வது என்று பார்க்கப்போகிறோம்.

மூலப்பொருள் என்ன:

இந்த தொழிலுக்கான மூலப்பொருள் என்று பார்த்தால் Idiyappam Maker Machine மட்டும் தான். இதில் இரண்டு வகையான மெஷின்கள் உள்ளது.

  1. Automatic Idiyappam Maker Machine
  2. Non Automatic Idiyappam Maker Machine

இதில் எது உங்களுக்கு தேவைப்படும் என்று தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ இந்த ஒரு மெஷின் வாங்கினால் போதும் மாதம் 72,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் 

முதலீடு எவ்வளவு:

இந்த தொழிலுக்கான முதலீடு என்பது நீங்கள் வாங்கும் மெஷினின் விலையினை பொறுத்து தான் மாறுபாடும். அனால் தொழில் தொடங்கும் போதும் 1 லட்சம் கையில் வைத்து கொள்ள வேண்டும்.

தேவைப்படும் இடம் எவ்வளவு:

நீங்கள் இந்த தொழிலை செய்ய வேண்டும் என்றால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் கடை வைக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் உங்களுடைய கடைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

தொழில் தொடங்கும் முறை:

இடியாப்பம் தொழில்

முதலில் நீங்கள் நல்ல தரமுள்ள இடியாப்ப மெசினை வாங்கி கொள்ள வேண்டும். பின்பு இடியாப்ப மெஷினை பர்னிச்சர் கடை, பெரிய மற்றும் சிறிய ஹோட்டல், ஷாப்பிங் மால், Restaurants மற்றும் வீட்டில் நடத்தும் இடியாப்ப கடை ஆகிய இடங்களுக்கு ஆர்டர் எடுத்து விற்பனை செய்யலாம்.

மேலும் சிலர் ஏதாவது விழாவிற்கு இடியாப்பம் செய்வதற்கு வாடகைக்கு கேட்டாலும் அதற்கு கொடுத்து இதன் மூலமும் வருமானம் பெறலாம்.

அதேபோல் நீங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்தால் இதன் மூலம் கைநிறைய லாபம் மற்றும் வருமானம் பெறலாம்.

வருமானம்:

பொதுவாக மெஷின் வாங்கும் மாடல் மற்றும் அளவை பொறுத்து தான் அதனுடைய விலையானது இருக்கும். ஆனால் இந்த தொழிலில் நீங்கள் தோராயமாக 1 மெஷின் விற்பனை செய்தால் 48,000 ரூபாய்க்கு அதிகமாக சம்பாதிக்க முடியும். 

நீங்கள் விற்பனை செய்யும் முறையை பொறுத்தே லாபம் மற்றும் வருமானம் இரண்டும் அமையும்.

மேலும் இடியாப்பம் உடலுக்கு நிறைய நன்மைகளை அளிக்கக்கூடியதாக இருப்பதால் பெரும்பாலும் கடைகளில் இடியாப்பம் செய்வதற்காக இந்த மெஷின் தொழில் நல்ல நிலைக்கு வரும்.

ஒரு மெஷின் வைத்து இவ்வளவு தொழில் செய்யலாமா.. ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு வகையான லாபம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil