இந்த ஒரு மெஷின் வாங்கினால் போதும் மாதம் 72,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Idiyappam Business in Tamil

Idiyappam Business in Tamil

அனைவருக்கும் சொந்தமாக சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆசை என்று சொல்வதைவிட சுயதொழில் தொடங்கினால் இக்காலத்தில் ஏற்படும் பணத்தேவையை சரிசெய்ய முடியும். எனவே இதனை கருத்தில் கொண்டு பலரும் சுயதொழில் தொடங்கி முன்னேறி வருகின்றனர். இன்னும் சிலர் என்ன தொழில் தொடங்கலாம் என்று சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி என்ன தொழில் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நாம் எப்போதும் சுயமாக தொழில் தொடங்குவதற்கு முன் டிமாண்ட் அதிகமாக உள்ள தொழிலை தான் தேர்வு செய்ய வேண்டும். அப்படி டிமாண்ட் உள்ள தொழில்களில் ஒன்றான இடியாப்ப தொழில் பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். நீங்கள் உங்கள் வீட்டு அருகிலோ அல்லது நன்றாக விற்பனை ஆகும் இடமாக பார்த்தோ ஒரு ஹோட்டலை தொடங்கினால் நல்ல வருமானதை பெறலாம். அதுமட்டுமில்லாமல் நீங்கள்  இத்தொழிலை ஆன்லைன் மூலமும் செய்து வருமானம் பெறலாம். ஓகே வாருங்கள் இத்தொழிலை எப்படி தொடங்கலாம்.? எவ்வளவு வருமானம் பெறலாம்.? போன்ற விவரங்களை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Make Idiyappam Business in Tamil:

How To Make Idiyappam Business in Tamil

 தேவையான மூலப்பொருட்கள்:

  • இடியாப்ப மாவு 
  • Idiyappam Making Machine
  • உப்பு
  • தண்ணீர்

 idiyappam business in tamil

தேவையான முதலீடு:

இடியாப்ப இயந்திரத்தின் விலை அதன் மாடலுக்கு ஏற்ப மாறுபடும். எனவே இதன் ஆரம்ப விலை தோராயமாக 35,000 ரூபாய் ஆகும். மற்ற மூலப்பொருட்களான இடியாப்ப மாவு, உப்பு ஆகியவற்றிற்கு 5 ஆயிரம் தேவைப்படும்.

இதர செலவு ஹோட்டல் வாடகை, பாத்திரங்கள் போன்றவற்றிற்கு ஒரு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை தேவைப்படும். 

எனவே இத்தொழில் தொடங்க தோராயமாக 1 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.

தேவையான இடம்:

ஹோட்டல் வைப்பதற்கு தேவையான அளவில் ஒரு தூய்மையான இடம் வேண்டும். மேலும் எப்பகுதியில் இடியாப்பம் அதிகமாக விற்பனை ஆகுமோ அப்பகுதிகளை தேர்வு செய்து ஹோட்டல் தொடங்க வேண்டும்.

ஒரு மெஷின் வைத்து இவ்வளவு தொழில் செய்யலாமா..  ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு வகையான லாபம்..

தேவையான ஆவணங்கள்:

இத்தொழில் ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால், FSSAI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் நீங்கள் இத்தொழிலை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய தொடங்கினால் அதற்கு GST Registration சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இடியாப்பம் தயாரிக்கும் முறை:

நாம் ஹோட்டல் வைப்பதால் இடியாப்பம் செய்வதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பெரிய அளவில் தான் இருக்க வேண்டும். அதாவது வாடிக்கையார்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் பொருட்களை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

எனவே, ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு இடியாப்ப மாவினை சேர்த்து கொள்ளுங்கள். பிறகு இதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இடியாப்பம் பிழியும் பதத்திற்கு நன்றாக பிசைந்து எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு இதனை, Idiyappam Making Machine -யில் சேர்த்து ஆன் பட்டனை அழுத்தினால் அந்த இயந்திரமே இடியாப்பத்தை பிழிந்து தயார் செய்து கொடுத்துவிடும்.

இதேபோல் நீங்கள் தேவையான இடியாப்பத்தை தயார் செய்த பிறகு இயந்தியரத்தை ஆஃப் செய்து விடலாம். அடுத்து இதனை வேகவைத்து எடுக்க வேண்டும்.

அவ்வளவு தாங்க இடியாப்பம் தயார். இப்போது தயார் செய்து வைத்துள்ள இடியாப்பத்திற்கு ஏதாவதொரு சைடிஷ் செய்து வாடிக்கையாளருக்கு பரிமாறலாம்.

வாரம் 2,00,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்..

வருமானம்:

ஹோட்டலில் ஒரு இடியாப்பத்தின் விலை தோராயமாக 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே ஒரு நாளைக்கு 60 வாடிக்கையாளர்கள் வந்தால் 2,400 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுவே ஒரு மாதத்திற்கு என்றால் 72 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். 

இது தோராயமாக சொல்லக்கூடிய மதிப்பு தான். நீங்கள் எந்த அளவிற்கு விற்பனை செய்கிறீர்களோ அந்த அளவிற்கு வருமானமும் மாறுபடும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil