அருமையான தொழில் வாய்ப்பு.. நீங்களும் மாதம் 40 ஆயிரம் சம்பாதிக்கலாம்..!

Indicash ATM Franchise Tamil 

Indicash ATM Franchise Tamil 

புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.. இன்றைய பதிவில் ஒரு சூப்பரான தொழில் வாய்ப்பை பற்றித்தான் நாம் தெரிஞ்சிக்க போறோம். இந்த தொழில் நீங்க செய்வதன் மூலம் மாதந்தோறும் குறைந்தபட்சம் 40 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். குறிப்பாக இந்த தொழிலை பொறுத்தவரை உடல் உழைப்பே இருக்காது. அப்படி என்ன தொழிலாக இருக்கும் என்று யோசிக்கிறீங்களா? Indicash ATM Franchise பிசினஸ் ஆரம்பிப்பதன் மூலமாக நீங்கள் அருமையாக சம்பாதிக்க முடியும். Indicash ATM Franchise TATA நிறுவனத்திற்கு சொந்தமானது. ஆகவே இது ஒரு நம்பகமான ஒரு தொழில் வாய்ப்பு தான். சரி வாங்க Indicash ATM Franchise பிசினஸ் எப்படி ஆரம்பிக்க வேண்டும், இதற்கு தேவைப்படும் தகுதி, ஆவணங்கள், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?, இதன் மூலம் நமக்கு கிடைக்கும் லாபம் போன்ற ஒரு முழுமையான தகவல்களை நாம் இப்பொழுது படித்தையாகம் வாங்க..

Indicash ATM Franchise Business-யின் நன்மைகள்:

நமது இந்தியாவில் Largest White Label ATM அப்படினா அது இந்த இண்டிகேஷ் ATM தான். இந்த White Label ATM என்பது என்னவென்றால் பொதுவாக வங்கி சார்பாக தான் ATM மிஷினை வைப்பார்கள். அது மாதிரி வங்கி அல்லாத (Non Banking) நிறுவனத்திற்கும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) அனுமதி தருகிறார்கள். அவ்வாறு அனுமதி தரப்படும் ATM எல்லாம் White Label ATM என்று அழைக்கப்படுகிறது. ஆகவே இந்த Indicash ATM-ற்கும் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி தந்துள்ளனர்.

இந்தியாவின் இந்த Indicash ATM-ஐ 6500 மேற்பட்ட இடங்களில் இயங்கப்படுகிறது. குறிப்பாக டவுன் மற்றும் கிராமப்புறங்களில் 4000+ மேற்பட்ட இடங்களில் இயங்கி வருகிறது. மாதம், மாதம் 1.5 கோடி மக்கள் இந்த இண்டிகேஷ் ATM-யில் பணம் பரிவர்த்தனை செய்து வருகின்றன.

How to Start Indicash ATM Franchise Tamil

தகுதி:

இந்த Indicash ATM-ஐ நீங்கள் எடுத்து நடத்துவரகு உங்களிடம் 80 sqft அளவில் உங்களிடம் இடம் இருக்க வேண்டும்.

நீங்கள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் தான் இந்த Indicash ATM-ஐ வைக்க வேண்டும். அப்பொழுது தான் மக்கள் அதிகமாக உங்களது ATM-ஐ பயன்படுத்துவார்கள். அதாவது பஸ் ஸ்டாப், ரயில்வே ஸ்டேஷன், காலேஜ், ஸ்கூல், பார்க் போன்று மக்கள் அதிகம் உள்ள இடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

முதலீடு:

இந்த பிசினஸ் செய்வதற்கு முதலில் நீங்கள் 2 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் இந்த தொகையை உங்களிடம் திரும்பி தந்துவிடுவார்கள்.

அதன் பிறகு 3 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். ஆக மொத்தம் 5 லட்சம் நீங்கள் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.

வருமானம்:

இந்த Indicash ATM Franchise Business பொறுத்தவரை கமிஷன் மூலமாக உங்களுக்கு வருமானம் கிடைக்கும். அதாவது ஒவ்வொரு Transaction-க்கும் உங்களுக்கு 8 ரூபாய் கமிஷன் கிடைக்கும்.

அதே மாதிரி Non Transaction-க்கு 2 ரூபாய் கமிஷன் கிடைக்கும். Non Transaction என்பது Balances Check செய்வது, ஸ்டேட்மென்ட் எடுப்பது, ATM Card-யில் pin செட் பண்ணுவது இது போன்றவையெல்லாம் Non Cash Transaction ஆகும். இதற்கு உங்களுக்கு 2 ரூபாய் கமிஷன் கிடைக்கும்.

பயிற்சி:

உங்களுக்கு இந்த Indicash ATM Franchise Business செய்வதற்கு உரிமம் வழங்கப்பட்டுவிட்டது என்றால். அதுக்கு அப்பறம் சிவில் ஒர்க், கான்கிரீட் ஒர்க், எலட்ரிக் ஒர்க் இந்த அணைத்து வேலைகளையும் நீங்கள் தான் பண்ணவேண்டியதாக இருக்கும். இதையெல்லாம் நீங்க செய்து முடிச்சிட்டீங்கன்னா அதுக்கப்பறம் இந்த நிறுவனத்தில் இருந்து ATM மிஷினை உங்கள் இடத்தில் பிக்ஸ் செய்வார்கள். அதுக்கு அப்பறம் சில செக்கூரிட்டி பிராசஸும் இருக்கும். அத்தியாயெல்லாம் பூர்த்தி செய்தபிறகு உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு நீங்கள் இந்த Indicash ATM-ஐ வைத்து நடத்தலாம்.

எப்படி அப்ளை செய்ய வேண்டும்?

https://indicash.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைதளத்தில் வழியாக நீங்கள் இந்த தொழில் வாய்ப்பிற்கு அப்ளை செய்யலாம்.

SBI வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்குவது எப்படி?

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022