Lawn Care Service Business Plan
சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து கொண்டே வருகிறது. காரணம் வேலை பற்றாற்குறை. அப்படியே வேலை கிடைத்தாலும் அதற்கான ஊதியம் கிடைப்பதில்லை. இதனாலேயே சுயமாக தொழில் செய்ய வேண்டும் எண்ணம் வருகிறது. உங்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் சுயதொழில் யோசனைகளை சொல்லி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மக்களிடையே இதனுடைய தேவை அதிகமாக இருக்கும் தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Lawn Care Service Business:
அனைவருமே வீட்டை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனாலேயே வீட்டை கிளீன் செய்வதற்கு ஒரு ஆள் தேவைப்படுகிறார்கள். அது போலவே வீட்டின் வெளிப்பக்கமும் அழகாக இருக்க வேண்டும் அல்லவா.! கிராமமாக இருந்தாலும் சரி, நகரமாக இருந்தாலும் சரி வீட்டை சுற்றிலும் புற்கள், செடிகள் வளர்ந்து விடும்.
இதனை கிராமத்தில் உள்ளவர்கள் மண்வெட்டியால் சுத்தம் செய்து அவர்களே அழகு படுத்துவார்கள். அதுவே நகரத்தில் இருப்பவர்கள் அதனை அழிப்பதற்கு மருந்து அல்லது செடிகளை அழிப்பதற்கு ஒரு ஆளை தேர்ந்தெடுப்பார்கள். புல்வெளி பராமரிப்பு தொழிலை தொடங்கலாம்.
வீடு வீடாக சென்றும் இந்த தொழிலை செய்யலாம்..! இனிதே தொடங்குங்கள் கைநிறைய சம்பாதிக்கலாம்
மூலப்பொருட்கள் | முதலீடு:
இந்த தொழிலுக்கு புல் வெட்டும் இயந்திரம், ஒரு டிரக், டிரெய்லர் போன்றவை தேவைப்படும். இதை வாங்குவதற்கு 20,000 ரூபாய் தேவைப்படும்.
இடம்:
இந்த தொழிலுக்கு இரண்டு இடங்களை கவனிக்க வேண்டும். ஓன்று நிறுவனத்தின் இருப்பிடம், மற்றொன்று வாடிக்கையாளரின் இருப்பிடம் கவனிக்க வேண்டும். உங்கள் வீட்டிலிருந்தே இந்த தொழிலை தொடங்கலாம்.
விளம்பரம்:
எந்த தொழிலும் விளம்பரம் இல்லாமல் முன்னேற முடியாது. அதனால் இந்த தொழிலுக்கும் விளம்பரம் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு வீட்டிற்கு சென்று புற்களை அழித்தலே அவர்களே உங்களை பற்றி மற்றவர்களிடம் சொல்வார்கள்.
ஒரு வாடிக்கையாளர் இருந்தாலே அவர்களுக்கு மாதம் ஒரு முறை சென்று புற்களை அழிக்கவும், அழகுபடுத்தவும் செய்ய வேண்டியிருக்கும். அதனால் நிறைய வாடிக்கையாளரை அணுக வேண்டும்.
வருமானம்:
வருடத்தில் 2 மாதம் தவிர மற்ற மாதங்கள் இந்த தொழிலுக்கு தேவை இருக்கும். நீங்கள் செய்யும் நேரத்தை பொறுத்து வருமானத்தை ஈட்டலாம்.
முதலீடு இல்லாமல் வீட்டிலிருந்து செய்ய கூடிய 5 தொழில்கள்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |