Liquid Gum Business Ideas in Tamil
இக்காலத்தில் அனைவருமே நம் அன்றாட செலவுகளுக்காக ஏதோ ஒரு வழியில் பணத்தை சம்பாதித்து கொண்டிருக்கிறோம். இதில் நம் அன்றாட தேவைகள் பூர்த்தி ஆனாலும் எதிர்கால பயன்பாட்டிற்கு நாம் சேமித்து வைக்க முடிவதில்லை. எனவே சுயதொழில் செய்தால் மட்டுமே பணத்தை சேமித்து வைக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு இப்போது பலரும் சுயதொழில் செய்ய தொடங்கிவிட்டனர். அந்த வகையில் சுயதொழில் தொடங்க இருக்கும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் தினமும் ஒரு தொழிலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Liquid Gum Business பற்றித்தான் பார்க்க போகிறோம். எனவே தொழில் தொடங்க நினைக்கும் அனைவரும் இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Start a Gum Business in Tamil:
தேவையான மூலப்பொருட்கள்:
- Deionized Water
- Gum Powde
- பேக்கிங் கம் பாட்டில்
நீங்கள் எவ்வளவு Gum தயாரிக்க போகிறீர்களா அந்த அளவிற்கு ஏற்றவாறு மூலப்பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
கையில் இருக்கும் காசை முதலீடு செய்தால் அதனுடன் வட்டியும் கிடைக்கும் நல்ல வருமானமும் கிடைக்கும்..! |
தேவையான இடம்:
இத்தொழிலுக்கு பெரியதான இடம் எதுவும் தேவையில்லை. உங்கள் வீடுகளிலே இத்தொழிலை தொடங்கலாம். இத்தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்த பிறகு பெரிதாக ஒரு இடத்தில் தொழிலை தொடங்கலாம்.
தயாரிக்கும் முறை:
ஒரு கண்ணாடி பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். இதில் Deionized Water மற்றும் Gum Powder சேர்த்து கொள்ளுங்கள்.
இதனை ஒரு கரண்டியை பயன்படுத்தி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இது Gum பதத்திற்கு வரும் வரை நன்றாக கலந்து கொண்டே இருங்கள்.
நீங்கள், Gum கலராகவும் வாசனையாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் Fragrance மற்றும் கலர் லிக்யூடு சேர்த்து தயாரிக்கலாம். இப்பொழுது Gum Liquid தயார்.
பேக்கிங் செய்யும் முறை:
இதனை Gum பேக்கிங் பாட்டிலில் பேக்கிங் செய்து கொள்ளுங்கள். அதாவது 40ml, 150ml, 1/2 லிட்டர் போன்று உங்களுக்கு தேவையான அளவுகளில் பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
1 மணிநேரத்தில் 4,000 ரூபாய் ஈஸியாக சம்பாதிக்க கூடிய இந்த தொழிலை இன்னமுமா செய்யாமல் இருக்கிறீர்கள்..! |
விற்பனை செய்யும் முறை:
உங்கள் வீட்டு பகுதிகளில் உள்ள சின்ன சின்ன கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்.
மேலும் ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யலாம். நீங்கள் ஆன்லைன் மூலமாக விற்க விரும்பினால் GST Registration சான்றிதழ் பெற்றிக்க வேண்டும்.
வருமானம்:
நீங்கள் 40ml உள்ள ஒரு gum பாட்டிலின் விலை ரூ .10/- என கணக்கில் கொண்டால் 1 நாளைக்கு 50 gum பாட்டில் விற்பனை செய்தால் ரூ.500/- வருமானம் கிடைக்கும். எனவே நீங்கள் 1 மாதத்திற்கு 15,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இத்தொழிலை நீங்கள் பெரிய அளவில் செய்தால் அதற்கேற்ற வருமானம் வரும்.இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |