நீங்கள் தயாரிக்க மட்டும் ஆரம்பித்தால் போதும் வியாபாரம் தாறுமாறா நடக்கும்..!

Advertisement

குறைந்த முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம்

பொதுவாக சொந்தமாக வியாபாரம் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் முதலில் நினைப்பது என்னவென்றால் எந்த தொழிலை செய்தால் நாம்  நல்ல வருமானம் மற்றும் லாபம் பெறலாம் என்று தான். நீங்கள் நினைப்பதும் சரி தான். ஏனென்றால் நாம் முதல் முதலில் செய்யும் தொழில் எந்த விதத்திலும் நமக்கு நஷ்டம் ஏற்படாமல் லாபம் மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு நல்ல எண்ணமாக தான் இருக்கிறது. ஆகையால் உங்களுடைய எண்ணம் நிறைவேறி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைவதற்கு அருமையான ஒரு சுயதொழிலை பற்றி தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். அப்படி என்ன சுயதொழில் என்று நீங்கள் ஆர்வமுடன் யோசிப்பது புரிகிறது. அந்த தொழில் என்னவென்று பதிவில் தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

லாபகரமான தொழில்:

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய Honey Gooseberry Business-ஐ பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இந்த Honey Gooseberry ஆரோக்கியம் ரீதியாக மக்களுக்கு நன்மை தரக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. அதனால் இதனை மக்கள் அதிகஅளவு கடையில் வாங்கி சாப்பிடுகிறார்கள். இந்த தொழிலுக்கான டிமாண்டும் இன்றைய காலத்தில் நிறைய இருக்கிறது.

முதலீடு | மூலப்பொருள்:

 தேன் நெல்லிக்காய் செய்வது எப்படி

  1. பெரிய நெல்லிக்காய்
  2. தேன்
  3. பேக்கிங் கவர் அல்லது பாட்டில்

இந்த தொழிலை நீங்கள் செய்வதற்கு முன்பு கட்டாயமாக FSSAI லைசென்ஸ் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். இந்த தொழிலுக்கு தோராயமான முதலீடு என்று பார்த்தால் 10,000 ரூபாய். 

தொழில் தொடங்க தேவையான இடம்:

உங்களுடைய வீட்டில் சிறிய பகுதியில் 10×10 இடம் இருந்தால் போதும். மேலும் இந்த தொழிலை தொடங்குவதற்கு மிஷின் எதுவும் தேவையில்லை.

இதையும் படியுங்கள்⇒ சீசனுக்கு சீசன் தொழில் செய்தால் தான் இந்த காலத்தில் கைநிறைய சம்பாதிக்க முடியும்..!

How to Start Honey Gooseberry Business:

குறைந்த முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம்

முதலில் நீங்கள் பெரிய அளவிலான நெல்லிக்காய் மற்றும் சுத்தமான தேன் இரண்டையும் வாங்கி கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அந்த நெல்லிக்காயை சுடுதண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்த பிறகு அந்த நெல்லிக்காயை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளுங்கள்.

நெல்லிக்காய் மிதமான பதத்திற்கு வெந்தவுடன் அதனை வெளியே எடுத்து அதில் ஒரு துளை இட்டு கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பாத்திரத்தில் சுத்தமான தேன் எடுத்துக்கொண்டு அதில் வேக வைத்து துளை இட்டு வைத்துள்ள நெல்லிக்காயை போட்டு மூடி வைத்து விடுங்கள். 1 வாரம் நன்றாக நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து விடுங்கள். 1 வாரம் கழித்த பிறகு அதனை நீங்கள் விற்பனை செய்யலாம்.

பேக்கிங் செய்தல்:

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள தேன் நெல்லிக்காயில் இருந்து 10-னை எடுத்துக்கொண்டு அதை பாலித்தீன் கவர் அல்லது பாட்டிலில் போட்டு பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதனை போல பத்து பத்தாக பிரித்து பேக்கிங் செய்து விடுங்கள்.

வருமானம்: 

தயார் செய்துவைத்துள்ள 1 பாக்கெட் நெல்லிக்காயின் விலை 100 ரூபாய் ஆகும். அப்படி என்றால் நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 25 தேன் நெல்லிக்காய் பாக்கெட் விற்பனை செய்தால் 2,500 ரூபாய் வருமானம் பெறலாம்.

இதனை போல நீங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்தால் 1 வாரத்திற்கு 17,500 ரூபாயும் மற்றும் 1 மாதத்திற்கு 75,000 ரூபாயும் சம்பாதிக்கலாம்.

விற்பனை செய்ய வேண்டிய இடம்:

லாபகரமான தொழில்

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள தேன் நெல்லிக்காயை Department ஸ்டோர், பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, Shapping மால், நாட்டு மருந்து கடை, வாராந்திர சந்தை, திருவிழா கடைகள் மற்றும் Wholesale கடை ஆகிய இடங்களில் நீங்கள் விற்பனை செய்யலாம்.

பயன்கள்:

இந்த தேன் நெல்லிக்காய் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், முடி வளர்ச்சி மற்றும் செரிமான கோளாறு ஆகிய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினை அளிக்க கூடியதாக இந்த தேன் நெல்லிக்காய் இருக்கிறது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 சுயதொழில் செய்ய வேண்டுமா..? 100 ரூபாய் முதலீடு மட்டும் இருந்தால் போதும்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement