Masala Powder Business Plan
நண்பர்களே வணக்கம்..! பொதுவாக நம்மில் பலரும் வேலை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் அல்லது சொந்தமாக தொழில் செய்துகொண்டு இருப்பார்கள். ஆனால் முக்கியமாக சொல்ல போனால் வேலை பார்ப்பவர்கள் அனைவரின் எண்ணத்திலும் இருப்பது என்ன தெரியுமா..? நாம் எப்போதும் இன்னொருவரிடம் வேலை பார்த்துக்கொண்டு இருந்தால் நாம் பிற்காலத்தில் என்ன செய்ய முடியும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கும். ஆனால் நாம் சொந்தமாக என்ன தொழில் செய்ய முடியும் என்று யோசனையாக இருக்கும். முக்கியமாக வீட்டில் இருக்கும் பெண்கள் என்ன தொழில் செய்ய முடியும் என்று இது போன்ற நிறைய எண்ணங்கள் இருக்கும். ஆனால் வீட்டிலிருந்து பெண்கள், ஆண்கள் என அனைவரும் இந்த தொழிலை செய்யலாம். சரி வாங்க அது என்ன தொழில் என்று பார்க்கலாம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Masala Powder Business Plan:
பொதுவாக நம் வீட்டில் பெண்கள் நன்றாக சமைப்பார்கள். அவர்கள் சமைப்பதை நம் வீட்டிற்கு பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் மட்டும் தான் தெரியும் அவர்கள் எந்த அளவிற்கு சமைக்கிறார்கள் என்று..! அதேபோல் அவர்கள் சமையலில் காட்டும் ஆர்வம் தான் சமையலை சூப்பராக இருக்க செய்கிறது.
அதேபோல் அவர்கள் சமைக்கும் போது கடையில் விற்கும் பொடிகளை வாங்கி சமையலுக்கு சேர்ப்பார்கள். அவர்கள் இது தவிர வீட்டில் நிறைய உணவுகளுக்கு இது போல் வீட்டில் பொடிகளை தயாரித்து வைப்பது அவர்களுடைய பழக்கம் ஆகும்.
இதனை நாம் ஒரு தொழிலாக கூட செய்யலாம். சரி வாங்க அந்த தொழில் செய்ய எவ்வளவு முதலீடு என்று பார்க்கலாம்..!
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரே ஒரு கிலோ விற்றாலே போதும் 80,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
Masala Powder Business Plan:
இதற்கு என்று தனியாக நாம் எந்த மிஷினையும் வாங்க போவது இல்லை. ஏனென்றால் வீட்டில் உள்ள மிக்சி மற்றும் கிரைண்டர் மூலம் முதலில் அரைத்து விற்கலாம். அதன் பிறகு அதில் கிடைக்கும் லாபத்தை பார்த்து அதன் பின்பு தனியாக மிஷின் வாங்கிக் கொள்ளலாம்.
முதலீடு:
இதற்கு என்று அதிக முதலீடு இருக்காது. குறைந்த முதலீடு போதுமானது ஆகும். அதேபோல் நீங்கள் என்ன பொடி தயாரிப்பீர்கள் என்று முடிவு செய்து அதற்கு ஏற்றது போல் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இதற்கு தோராயமாக 5000 ரூபாய் இருந்தால் போதுமானது.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வாரம் 1,00,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்
எங்கு விற்கலாம்:
இதற்கு தகுதியான இடங்களில், அதாவது பெரிய கடையில் விற்பனை செய்யலாம். அதேபோல் கடையில் கொடுத்து ட்ரை செய்து அதன் பின்பு செய்யலாம். அதை விட தனி கடையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். இதனை பாக்கெட் போட்டு விற்கலாம். என்னென்ன பொடிகள் செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க..!
- மிளகாய் பொடி
- இட்லி பொடி
- மல்லி தூள்
- மிளகு தூள்
- கரம் மசாலா
- சிக்கன் தூள்
- மட்டன் தூள்
- பிரியாணி மசாலா
- கருவேப்பிலை பொடி
- பூண்டு பொடி
- சாம்பார் பொடி
- ரசப்பொடி
- புளியதோரை பொடி
- தூதுவளை பொடி
- லெமன் சாத பொடி
இது போன்ற பொடிகளை செய்து விற்கலாம். இது 50 கிராம் முதல் 1 கிலோ வரை பாக்கெட் போட்டு விற்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |