லாபகரமான தொழில்
அனைவரும் வீட்டில் இருந்தபடியோ அல்லது தனியாக கடை அமைத்தோ தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஒருவேளை அப்படி தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்தாலும் என்ன தொழில் தொடங்குவது என்று யோசிப்பார்கள். அதனால் உங்களுக்கு பயனளிக்கும் வகையில் இன்றைய பதிவு உதவியானதாக இருக்கும். வீட்டில் இருந்து தொழில் செய்து தினமும் வருமானம் பெற செய்ய வேண்டிய தொழில் என்ன என்பது பற்றி இன்றைய பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ தினசரி 4000 சம்பாதிக்கலாம்.. Coconut Sugar தயாரிப்பு தொழில்..!
போட்டி இல்லாத தொழில்:
இன்றைய நவீன காலத்தில் Cow Feed Business ஆனது மிகவும் டிமெண்ட் உள்ள மற்றும் போட்டி இல்லாத ஒரு தொழிலாகவும் இருக்கிறது. மேலும் இந்த தொழிலை எப்படி தொடங்குவது மற்றும் தேவையான மூலப்பொருட்கள் என்ன இதனை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேவையான மூலப்பொருள்:
- மக்காசோளம் பவுடர்- 6 1/2 கிலோ
- புண்ணாக்கு- 2 கிலோ
- தவிடு- 1 1/2 கிலோ
- பிளாஸ்டிக் பேக்கிங் கவர்
- Cattel Feed Making Machine
நமக்கு 50 கிலோ தயார் செய்யும் அளவிற்கு Cattel Feed Machine இருந்தால் போதும். 50 கிலோ தீவனம் தயார் செய்யும் இயந்திரத்தின் விலை ரூபாய் 47,000 முதல் 50,000 வரை இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
ஆகவே இந்த தொழிலை தொடங்குவதற்கு 52,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.
இடம்:
இந்த தொழிலை தொடங்குவதற்கு வீட்டில் 10×10 இடம் இருந்தால் போதும். உங்களுக்கு கடை வேண்டும் என்றால் நீங்கள் தனியாக அமைத்துக்கொள்ளலாம்.
மாட்டு தீவனம் தயாரிக்கும் முறை:
முதலில் நீங்கள் வாங்கியுள்ள மக்காசோளம், புண்ணாக்கு மற்றும் தவிடு இந்த மூன்றையும் நன்றாக உங்களுடைய கைகளால் கலந்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு கலந்து வைத்துள்ள பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக Cattel Feed Making Machine-ல் போட்டு விடுங்கள். அந்த பொருட்கள் அனைத்தும் இயந்திரத்தின் கலந்து நமக்கு தீவனமாக தயார் செய்து வெளியே வந்து விடும்.
இந்த இயந்திரத்தை பயன்படுத்தி நீங்கள் 1 மணி நேரத்திற்கு 100 கிலோ வரை மாட்டு தீவனத்தை தயார் செய்ய முடியும்.
விற்பனை செய்யும் முறை:
இப்போது நீங்கள் தயார் செய்த தீவனத்தை 10 கிலோ மற்றும் 25 கிலோ பிளாஸ்டிக் பேக்கிங் கவரில் போட்டு பேக்கிங் செய்து விடுங்கள்.
நீங்கள் தயார் செய்த 10 கிலோ தீவனத்தின் விலை தோராயமாக 600 ரூபாய் மற்றும் 25 கிலோ தீவனத்தின் விலை தோராயமாக 1,250 ரூபாய் ஆகும்.
ஒருநாளைக்கு நீங்கள் 10 கிலோ தீவனத்தில் 5 பாக்கெட்டும் மற்றும் 25 கிலோ பாக்கெட்டில் 5-யும் விற்பனை செய்தால் ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 9,250 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
இதே போல நீங்கள் தினமும் விற்பனை செய்தால் ஒரு மாதத்திற்கு தோராயமாக நீங்கள் 2,77,500 ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.
விற்பனைக்கு ஏற்றவாறு நீங்கள் அதிகமாக தயார் செய்து விற்பனை செய்துகொள்ளலாம். Cow Feed Business ஆனது எப்போதும் டிமெண்ட் உள்ள ஒரு தொழில்.
தயார் செய்த இந்த தீவனத்தை பெரிய மற்றும் சிறிய மளிகை கடைகளில் விற்பனை செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த கடை மட்டும் வச்சிப்பாருங்க வியாபாரம் சும்மா தாறுமாறா போகும்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |