எப்போதுமே Demand உள்ள இந்த தொழிலை தொடங்கினால் எதிர்காலத்தில் நீங்கள் தான் ராஜா..!

Advertisement

Best Business To Start in 2023

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். ஆனால் அதற்கான முயற்சி கட்டாயம் அனைவரிடமும் இருக்க வேண்டும். முயற்சி இருந்தால் மட்டும் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். அந்த வகையில் தன் முயற்சியால் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Medical Shop Business Ideas in Tamil: 

Medical Shop Business Ideas in Tamil

நம் நாட்டில் அதிகளவு Demand உள்ள தொழில் என்று சொன்னால் அது இது தான். ஒரு சிறிய கிராமமாக இருந்தாலும் சரி அங்கு கட்டாயம் ஒரு மெடிக்கல் ஷாப் இருக்க வேண்டும். அதுபோல நீங்கள் இந்த தொழிலை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தொடங்கலாம். இந்த தொழில் தொடங்குவதால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

2023 இல் நீங்களும் முதலாளியாக மாற வேண்டுமா..? அப்போ இந்த தொழிலை தொடங்குங்கள்..!

மெடிக்கல் ஸ்டோர் தொடங்குவது எப்படி..? 

மெடிக்கல் ஸ்டோர் தொடங்குவது எப்படி

இந்த மெடிக்கல் ஷாப் தொடங்குபவர் இந்திய மருந்தியல் குழுமத்தில் ( Pharmacy Council of India) பதிவு செய்யப்பட்ட மருந்தாளராக இருக்க வேண்டும். அதுபோல மருந்தகத்தில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். 

மருந்தகம் அல்லது மருத்துவக் கடை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 10 சதுர மீட்டர் அளவில் இடம் இருக்க வேண்டும். அதுபோல நீங்கள் தொடங்கும் மருந்தகம் பொருத்தமான வளாகத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

மருந்தகத்திற்கு தேவையான கருவிகள் மற்றும் பொருட்களை வைத்திருக்க வேண்டும். மருத்துவம் சார்ந்த அனைத்து பொருட்களும் இருக்க வேண்டும். நீங்கள் தொடங்கும் மருந்தகக் கடை வசதியான மற்றும் எளிதில் அணுகக்கூடிய இடத்தில் இருக்க வேண்டும்.

வாடிக்கையாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு மருந்தக வசதி இருக்க வேண்டும்.  அதுபோல, உங்கள் மருந்தகத்தில் பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இருக்க வேண்டும்.

மருந்துக் கடையில் நடைபெறும் அனைத்துப் பரிவர்த்தனைகளும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

உங்களை முதலாளியாக மாற்றக் கூடிய சிறந்த தொழில்கள்..!

முதலீடு எவ்வளவு..? 

மெடிக்கல் ஷாப் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் ₹2 லட்சம் வரை முதலீடு செய்திருக்க வேண்டும். இந்த வணிகம் அமைப்பதற்கு கடை மற்றும் மற்ற மருத்துவம் சார்ந்த பொருட்களை வாங்குவதற்கு 2 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.

மெடிக்கல் ஸ்டோர் தொடங்குவதற்கான நிபந்தனைகள்:

  1. மருந்தகம் தொடங்குவதற்கு முன், மாநில மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் இருந்து மருந்து உரிமம் பெற வேண்டும்.
  2. உங்கள் மருந்தக வணிகத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும்.
  3. நீங்கள் உரிமத்தைப் பெற்றவுடன், உங்கள் மருந்தக வணிகத்தை நிறுவனங்களின் பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும் .
  4. உங்கள் மருத்துவ வளாகம் இந்திய பார்மசி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  5. நீங்கள் தொடங்கும் மருந்துக் கடையை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல விளம்பரப்படுத்த வேண்டும்.

மேலும்  இந்தியாவில் மருந்தகம் தொடங்குவதற்கு விண்ணப்பப் படிவம், வணிகத் திட்டம், தொழில்முறை தகுதிச் சான்றிதழ், மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளரிடமிருந்து உரிமம், பார்மசி கவுன்சிலின் பதிவுச் சான்றிதழ், தீ பாதுகாப்பு சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ், வரி பதிவு சான்றிதழ், கடை மற்றும் ஸ்தாபன உரிமம் போன்றவை பெற்றிருக்க வேண்டும்.  

மாத வருமானம்:

இந்த மருந்தக வணிகத்தை நீங்கள் தொடங்கினால் மாதம் மாதம் 50,000 வரை சம்பாதிக்கலாம். இதன் மூலம் தினமும் நல்ல லாபம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ இந்த தொழில் செய்ய ஓடவும் வேண்டாம்..! அலையவும் வேண்டாம்..! லாபம் உங்களை தேடி வரும்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement