Mehndi Business in Tamil
வணக்கம் நண்பர்களே. தினமும் நம் பொதுநலம்.காம் பதிவில் வியாபாரம் பற்றிய சில விவரங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் வீட்டில் இருந்தே மாதம் 80,000 ரூபாய் வரை சம்பாதிக்கக்கூடிய தொழிலை பற்றித்தான் பார்க்க போகிறோம். அதாவது பெண்கள் அனைவரும் விரும்பி வாங்க கூடிய மெகஹந்தி கோன் பிசினெஸ் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். சுயதொழில் தொடங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ளவேண்டியவை என்னவென்றால் அதிக டிமாண்டில் இருக்கக்கூடிய தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வகையில் அதிக டிமாண்டில் இருக்க கூடிய இந்த மெஹந்தி பிசினெஸ் தொடங்கினால் அதிக லாபம் பெறலாம். சரி வாருங்கள் மெஹந்தி பிசினெஸ் எப்படி செய்வது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
How to Start Your Own Mehndi Business in Tamil:
இத்தொழில் தொடங்க தேவையான மூலப்பொருட்கள்:
- ஹென்னா பவுடர்
- எலுமிச்சை சாறு
- காபி பவுடர்
- கிராம்பு பவுடர்
- ராப்பிங் கவர்
- செல்லோடேப்
- கலவை இயந்திரம்(Mixing Machine)
- பில்லிங் இயந்திரன்(Filling Machine)
பெண்களுக்கு ஏற்ற தொழில் இட்லி மாவு வியாபாரம்..! |
தேவையான இடம்:
இத்தொழிலை தொடங்குவதற்கு அதிக அளவில் இடம் தேவையில்லை உங்கள் வீட்டில் ஒரு சிறிய பகுதி இருந்தாலே போதும் இத்தொழிலை தொடங்கலாம்.
முதலீடு | மூலப்பொருள்:
இத்தொழிலுக்கு இரண்டு வகையான மெஷின்கள் தேவைப்படுகின்றன. இந்த மெஷின்கள் 4,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற விலையில் வாங்கி கொள்ளலாம்.
எனவே இந்த மெஷின்கள் இல்லாமல் உங்களுக்கு முதலீடு என்று பார்த்தால் ஹென்னா பவுடர், பேக்கிங் கவர், இதர பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்து 300 ரூபாய் முதலீடாக தேவைப்படுகிறது.
1 கிலோ ஹென்னா பவுடரில் 120 மெஹந்தி தயார் செய்யலாம். நீங்கள் அதிகமாக விற்பனை செய்ய விரும்பினால் அதற்கேற்றவாறு ஹென்னா பவுடர் வாங்கி கொள்ளுங்கள்.
மெஹந்தி கோன் தயாரிக்கும் முறை:
முதலில் ஹென்னா பவுடர் வாங்கி கொள்ளுங்கள். இது கடைகளில் 1 கிலோ 80 ரூபாய்கு தோராயமாக விறக்கப்படுகிறது. எனவே தேவையான மூலப்பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது மிக்ஸிங் மெஷினில் ஹென்னா பவுடர், கிராம்பு தூள், காபி தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு பில்லிங் மெஷின் பயன்படுத்தி பேக்கிங் கவரில் உங்களுக்கு தேவையான அளவில் மெஹந்தியை நிரப்பி கொள்ளுங்கள். நிரப்பிய பிறகு செல்லோடேப் வைத்து ஒட்டி ஒரு பாக்சில் எடுத்து கொள்ளுங்கள்.
நீங்கள் தயாரிக்க மட்டும் ஆரம்பித்தால் போதும் வியாபாரம் தாறுமாறா நடக்கும்..! |
விற்பனை செய்யும் இடங்கள்:
- சூப்பர் மார்க்கெட்
- பேன்சி ஸ்டார்
- உள்ளூர் கடைகள்
- நேரடி விற்பனை
- ஆன்லைன் விற்பனை
வருமானம்:
கடைகளில் மெஹந்தி ஆரம்ப விலையாக 10 முதல் 12 ரூபாய்கு தோராயமாக விற்பனை செய்கிறார்கள். எனவே நீங்கள் ஒரு வாரத்திற்கு 2250 மெஹந்தி விற்பனை செய்தீர்கள் என்றால் 22,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். எனவே 1 மாதத்திற்கு 90 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும்.இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |