வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை செய்தால் மாதம் 50,000 ரூபாய் வரையும் வருமானமாம் .!

best business in tamil

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்

வணக்கம் நண்பர்களே இன்று நம் வியாபார பதிவில் குறைந்த முதலீட்டில் அதிகமான லாபம் பெறுவதற்கு ஒரு அருமையான தொழில் தொடங்குவதை  பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம்.  இந்த தொழிலை யார் தொடங்கினாலும் நஷ்டம் என்பதே இருக்காது. அதிகமான லாபத்தை பெறலாம். புதிதாக தொழில் தொடங்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக எந்த விதமான தயக்கங்களும் இன்றி இந்த தொழிலை செய்து வரலாம். மேலும் அவை என்ன தொழில் என்றும், அந்த தொழிலை தொடங்குவதற்கு தேவைப்படும் மூலப்பொருள் என்னவென்றும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

அதிகமான டிமாண்ட் உள்ள தொழில் யார் வேண்டுமானாலும் இந்த தொழிலை செய்யலாம். மாதம் 90, 000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தேவைப்படும் இடவசதி:

இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்களுக்கு கொஞ்சம் பெரிதாக இடவசதிகள் வேண்டும். அப்படியில்லை என்றால் உங்கள் வீட்டுக்கு பின்புறம் 1000 × 1000 இடம் வசதிகள் இருந்தால் சுலபமாக தொடங்கலாம். இந்த தொழிலை தொடங்கிய பிறகு நல்ல லாபம் வந்ததும், ஒரு பெரிதான இடம் பிடித்து இந்த தொழிலை தொடங்கி வரலாம்.

கம்பி வேலி தயாரிப்பு:

இன்று நாம் தெரிந்துகொள்ள போகின்ற தொழில் என்னவென்றால் அனைவரும் பொதுவாக வீடு கட்டும் பொழுது பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள்தான். அதாவது வீடு கட்டும் பொழுது வீட்டை பாதுக்காப்பாக வைத்திருப்பதற்கு, வீட்டை சுற்றிலும் கம்பி வேலிகள் அமைப்பார்கள் . இந்த கம்பிவேலிகளை மிகவும் சுலபமாக எப்படி தயாரித்து விற்பனை செய்வது என்று தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே இதனுடைய பயன்கள் அதிகமாகவே இருக்கின்றன.

ஏன் இந்த கம்பி வேலிகளை அதிகமாக உபயோகிக்கிறார்கள் என்றால், இப்பொழுது காம்பவுண்ட் கட்டுவதற்கு அதிகமான செலவுகள் ஆகுவதால்,  கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ளவர்கள் அதிகமாகவே கம்பி வேலிகளை அமைக்கிறார்கள். எனவே இந்த கம்பி வேலிகளை எப்படி தயாரிப்பது என்று தெரிந்துகொள்ளலாம்.

கம்பி வேலிகளை தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருள்கள்:

இந்த கம்பி வேலிகளை தயாரிப்பதற்கு GA ஒயர் தேவைபடுக்கிறது. இந்த ஒயர்களை  ரோல் கணக்கிலும் , கிலோ கணக்கிலும் அதிகமாகவே இருக்கிறது. இந்த ஒயர்களை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். இதனுடைய விலைகள் 40 ரூபாயில் இருந்து இருக்கிறது.

கம்பி வேலி தயாரிப்பு இயந்திரம் விலை:

இந்த கம்பி வேலிகளை தயாரிக்க கூடிய இயந்திரத்தின் விலை  40,000 ரூபாய் வரையும் விற்பனையில் இருக்கிறது. இந்த இயந்திரத்தை  நீங்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ வாங்கி கொள்ளலாம்.

இந்த இயந்திரத்தில் நீங்கள் அந்த கம்பிகளை செட் செய்தாலே போதும் அதுவாகவே கம்பி வேலிகளை பின்னி தயாரித்து விடும்.  உங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு அதை தயாரித்து ரோலிங் செய்து வைத்துக்கொள்ளலாம்.

கிடைக்க கூடிய வருமானம்:

இந்த கம்பி வேலிகளை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் அதிகமான லாபங்கள் கிடைக்கின்றன. அதாவது,  ஒரு நாளைக்கு நீங்கள் 100 அல்லது 150 கிலோவுக்கு மேல் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் 1500 ரூபாய் வரையும் ஒரு நாளைக்கு கிடைக்கிறது. மாதம் குறைந்தபட்சம் 40,000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாய் வரையும் சம்பாதிக்கலாம்.

விற்பனை செய்யும் முறை:

இந்த கம்பி வேலிகளை தயாரித்து ரியல் எஸ்டேட் செய்யக்கூடிய இடங்களிலும், ஹார்ட் வொர்க் கடைகளிலும் மற்றும் ஆன்லைன்களிலும் மற்றும் கம்பெனி மூலமாகவும் விற்பனை செய்யலாம். அதோடு மட்டுமில்லாமல் பார்க் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு கட்டுமானம் தொழில் செய்பவர்களிடமும் விற்பனை செய்யலாம். மேலும் இந்த தொழில் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் இந்த தொழிலை தொடங்கி அதிகமான லாபத்தை பெறலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022